ஞானமே அழிவற்ற பரப்பிரம்மம் அடைய உறைவிடம்
" காந்த ஊசி எப்போதும் வடக்கு திசையையே காட்டுமாதலால், கடலில் செல்லும் கப்பல்கள் திசை தவறிப் போவதில்லை, மனிதனுடைய மனம் இறைவனை நாடியிருக்கும் வரையில் அவன் உலக வாழ்க்கையாகிய கடலில் திசை தப்பிப் போகமாட்டான்" பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்,
ஞானமார்க்கம் அடைய பல ஞானிகளான சித்தர்களும், வேதங்களும் கூறிய நெறிகளைஅவர்களின் சீடர்களுக்கு உபதேசமாக வழங்கியுள்ளனர், அந்த ஞான மொழியே பரம்பொருளாகிய ஞானசொரூபன் அருளியதாகும், பிறவிப் பிணி நீக்கி முக்தி எனும் விடுதலை அடைய காணும் வழிகள் நான்கு உண்டு இந்த மெய்யறிவான ஞான மார்க்கம் கொண்டால் முக்தி எனும் வீடு பேற்றை அடையலாம். ஞானத்தை அறிந்துஅதனை பின்பற்றி இறைவனின் செரூபத்தை அடைந்தவர்கள் படைப்பின் தொடக்கத்தில் மீண்டும் பிறப்பதுமில்லை, பிரளய காலத்தில் துன்புறுவதுமில்லை.இதனையே திருமூலரும் திருமந்திரத்தில் முன்னை செய்த தவத்தால் சிவஞானத்தைப் பெற்று தன் உண்மை உணர்ந்தால் பிறவி அறும் என " முன்னை அறிவினிற் செய்த முதுதவம் ............. " என்ற பாடல் மூலம் விளக்கிறார்,
பலவிதமான அனைத்து பிறப்பிடங்களிலும் எத்தனை உருவங்கள் உடல்கள் கொண்ட பிராணிகள் உண்டாகின்றனவோ அவை எல்லாவற்றிக்கும் பிரகிருதியே பிறப்பிடம் அதாவது கருத்தரிக்கும் தாய் , விதையளிக்கும் தந்தை, அவ்வாறு பிறக்கும் உயிர்களில் அழிவற்ற ஜீவாத்மாவாகிய உடலில் சத்துவ குணம், ரஜோகுணம், தமோகுணம் என்ற பிரகிருதியிலிருந்து உண்டான மூன்று குணங்கள் காணப்படுகின்றன.
ரஜோகுணம்:
விருப்பு வடிவாகிற ரஜோகுணம் ஆசை, பற்று இவற்றால் உண்டாகிறது. அது ஜீவாத்மாவைக் கர்மங்களிலும் கர்மகளின் பயன்களிலும் உள்ள தொடர்பால் கட்டுகிறது. ரஜோ குணம் அதிகமாகும் போது, பேராசை, உலகியல் கர்மங்களில் ஈடுபாடு, தன்னலத்தில் பற்றோடு கூடிய கர்மங்களைத் தொடஙகதல், அமைதியின்மை, உலகியல் நுகர்பொருட்களில் பேராவல் இவையாவும் உண்டாகின்றன.
தமோகுணம்:
உடற்பற்றுடைய எல்லோரையும் மயக்கக்கூடியது. அஞ்ஞானத்திலிருந்து உண்டானதாகும். அது இந்த ஜீவாத்மாவை வீணான செயல்களில் ஈடுபடுவது சோம்பல், தூக்கம் இவற்றை கட்டுகிறது. இந்த தமோகுணம் அதிகமாகும் போது அந்தக்காரணங்களிலும், புலன்களிலும் ஒளியின்மையையும், செய்ய வேண்டிய கடமைகளில் ஈடுபாடின்மை, அசட்டைத்தனம், அதாவது வீண் செயல்களில் ஈடுபாடும், தூக்கம் முதலிய அந்தக்காரணஙகளின் மயக்கமும் உண்டாகின்றன.
சத்துவ குணம்:
இந்த சத்துவ குணம் சுகத்தில் ஈடுபடுகிறது, ரஜோகுணம் செயலில் ஈடுபடுகிறது தமோகுணமோ, ஞானத்தை மறைத்து கவன மின்மையில் அதாவது வீணான செயல்களில் ஈடுபடுகிறது. ரஜோகுணத்தையும் தமோகுணத்தையும் அடக்கி சததுவகுணம் மேலோங்குகிறது. சததுவகுணத்தையும், தமோகுணத்தையும் அடக்கி ரஜோகுணம் மேலோங்குகிறது. அப்படியே சத்துவகுணத்தையும் ரஜோ குணத்தையும் அடக்கி, தமோ குணம் மேலோஙகுகிறது.
எப்போது மனிதன் சத்துவகுணம் பெருகி உள்பொழுது இறப்பை அடைகிறானோ, அப்போதே உயர்ந்த செயல்கள் செய்பவர்களுடைய நிர்மலமான சுவர்க்கம் முதலிய புண்ணிய உலங்களை அடைகிறான். ரஜோகுணத்தின் ஆதிக்கத்தில் இறப்பை அடைந்து கர்மங்களில் பற்றுள்ள மனிதர்களிடையே பிறக்கிறான்,, அவ்வாறே தமோகுணம் அதிகமாக இருக்கும் போது இறந்தவன் புழு-பூச்சி, விலங்கு முதலிய அறிவில்லாத பிறவிகளில் பிறக்கிறான்.
சததுவ குணத்திலிருந்து ஞானம் உண்டாகிறது. ரஜோகுணத்திலிருந்து ஐயமின்றிப் பேராசையே உண்டாகிறது. தமோகுணத்திலிருந்து கவனமின்மை மதிமயக்கமும் உண்டாகின்றன. மேலும் அறியாமையும் உண்டாகின்றது.
சத்துவ குணத்தில் நிலைபெற்ற மனிதர்கள் சொர்க்கம் முதிலிய உயர்ந்த லோகங்களை அடைகின்றனர், ரஜோகுணத்தில் நிலைபெற்ற மனிதர்கள் நடுவில் அதாவது மனித உலகிலேயே நிற்கின்றனர். தூக்கம், சோம்பல், வீண்செயல், முதலிய தாழ்ந்த குணங்களில் நிலை பெற்ற தமோச குணம் உடைய மனிதர்கள் புழு, விலங்கு, பறவை முதலிய தாழ்ந்த பிறவிகளையும் நரகத்தையும் அடைகின்றனர். மனித உடல் தோன்றுவதற்கு காரணமான இந்த மூன்று குணங்களையும் கடந்து, பிறப்பு, இறப்பு மூப்பு இவற்றிலிருந்தும், பிற எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுபட்டு பரமானந்தத்தை அடைகிறான்,
எந்த மனிதன் சத்துவ குணத்தின் செயலான பிரகாசத்தையும், ரஜோகுணத்தின் செயலான செயலூக்கத்தையும் தமோகுணத்தின் செயலான மோகத்தையும் அவை வரும்போது அவற்றை வெறுப்பதில்லையோ விலகும் போது அவற்றை திரும்பவும் பெற விரும்பவதில்லையோ,
எவன் தன் நிலையான ஆத்ம சொரூபத்தில் இடையறாது நிலைத்து நிற்கிறானோ, இன்ப துன்பங்களை சமமாக கருதுவானோ, மண்ணையும் கல்லையும், பொன்னையும், சமமாக மதிப்பானோ, ஞானியோ, வேண்டியது-வேண்டாதது இரண்டடையும் ஒன்றாக நினைப்பானோ, இகழ்ச்சியையும், புகழ்ச்சியையும் ஒன்றாக கருதுவானோ, பெருமையையும், சிறுமையையும் சமமென நினைப்பாநோ, நண்பர் பகைவர் பக்கலும் சமநோக்குக் கொண்டவனோ, செயல்கள் அனைத்திலும் நான் செய்கிறேன் (தான் கர்த்தர் - நான் என்ற ஆங்காரம்) என்ற மனப்பான்மையை விட்டானோ, அந்த மனிதன் முக்குணங்களையும் கடந்தவன், அந்த முக்குணங்களையும் கடந்து அப்பாற்பட்ட ஞானத்தை அறிந்து பரம்பொருளையே சிந்தித்து சம்சாரசகரத்திலிருந்து விடுபட்டு சித்தியாகிய பரமாத்மாவை அடைவான். மேலும் எவன் வேறு எதிலும் நாட்ட மில்லாமல் ஒன்றிய பக்தியோகத்தினால் அந்த பரம்பொருளை அடைகிறானோ, அவன் இந்த மூன்று குணங்களிலிருந்து முற்றிலுமாக கடந்து சத் சித்தானந்தமான பரமானந்தத்தை அடைய தகுதி பெற்றவன், ஏனெனில் அந்த அழிவற்றதான பரம்பிரம்மத்திற்கும் அமிர்த நிலைக்கும் ( இறவா நிலைக்கும்) எப்போதும் இருக்கக்கூடிய தர்மத்திற்கும் வேறுபாடற்ற ஒரே சீரான ஆனந்தத்திற்கும் உறைவிடமான சத் சித்தானந்தத்தை அடைவான்,
திருசிற்றம்பலம் - ஓம் நமசிவாய நம
மேலும்ஆனமீகத் தேடலுக்கு
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக