வாய் விட்டு பாடினால் பிறப்பற்று போகும் / அப்பர் பெருமான்
" சூழும் துயரம் அறுப்பர் போலும்
தோற்றம் இறுதியாய் நின்றார் போலும்
ஆழும் கடல் நஞ்சை யுண்டார் போலும்
ஆடலுகந்த அழகர் போலும்
தாழ்வின் மனத்தேனை ஆளாக் கொண்டு
தன்மை அளித்த தலைவர போலும்
ஏழுபிறப்பும் அறுப்பார் ேபாலும்
இன்னம்பர்த் தான்தோன்றி யீசனாரே, நாவுக்கரசர் சுவாமிகள்
திருஇன்னம்பர் என்னும் தலத்தில் தான்தோன்றிய ஈசனாராகிய சிவபெருமானாரே, நம்மைச் சூழ்ந்து கொள்ளும் துயரங்களை நீக்குபவர், அவரே படைப்பு அழிப்பு தொழிலையும் செய்யபவர், ஆழம் மிகுந்த கடலில் தோன்றிய நஞ்சை உண்டவரும், கூத்தாடுதலை விரும்பும் அழகருமான எம்பெருமானரே, கீழான மன முைடய அடியேனையும் அடிமை கொண்டு ஞானம் அளித்தவர் அவரே ஆவார், நாம் மனதார அவன் புகழை தோற்றிப்பாடினால் ஏழுவகையான பிறப்புக்களையும அறுந்தெறிபவர் அவரே ஆவார்,
வாய்விட்டு பாடினால் பிறவியாகிய நோய்விட்டு போகும், இவ்வுலகத் துன்பங்களும் ஏழுவகையான பிறப்புகளும் இல்லாது ஒழியும்
நன்றி ; தமிழ் வேதம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக