ஞாயிறு, 11 மே, 2014


திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 2 யாக்கை நிலையாமை சென்ற கட்டுரையில் திருமூலரும் திருமந்திரமும் அவரின் வரலாறும் வாழ்க்கைக்கு உடம்பின் அவசியத்தையும் அன்பே சிவம் என்ற உபதேசத்தை தெளிபடுத்தியிருந்தோம், இந்த கட்டுரையில் வாழ்வு பயனுற யாக்கை நிலையாமை என்ற திருமூலரின் மந்திரக்கருத்தை காண்போம், திருமூலர் காலத்தில் மண்பாண்டங்களின் பயன்பாடு அதிகம். மனிதனின் சரீரத்தை மண்பாண்டத்தடன் ஒப்பிட்டு அவரின் கடினமான விசயத்தை எளிமையான உதாரணத்துடன் நமக்க புரியவைக்கிறார். குயவர்கள் மண்ணில் செய்த பாத்திரங்கள் சூளையில் வைத்து தீயிட்டுமண்பானையினை வலிமைப்படுத்துவார்கள், தீயிடுவதற்கு முன் அது வெறும் பச்சை மண், மழை நீர் பட்டால் கரைந்து விடும் எந்த உபயோகத்திற்கும் பயனற்றதாக இருக்கும், இறைவனின் திருவடியை எண்ணியிருப்பாரின் உடம்பு சுட்டமண் - தீயிட்ட கலன் ஆகும் அவர் மீண்டும் பிறவிக்கு வருவதில்லை, இறையுணர்வு இல்லாதவரின் உடம்பு பச்சை மண்கலன் போன்றது, அவர் மீண்டும் மீண்டும் பிறக்கிற நிலையில் (அழிதல்) இருப்பார். இந்த அழகான உண்மையை நமக்கு உணர்த்தும் பாடல் " மண்ணொன்று கண்டீர் இருவகை பாத்திரம் "............. எனத் தொடங்கம் படலில் யாக்கை நிலையாமை - முதல் தந்திரமாக விளக்குகிறார். இந்த உடல் பல போகங்களை துய்க்கிறது, சோகங்களை அனுபவிக்கிறது, பின்பு மூப்புற்று மரணமடைகிறது கூடிய மகளிரும் தேடிய செல்வமும் உறவும் கூட வருவதில்லை. வாழ்கிற காலத்தில் நீங்க்ள் கடைபிடித்த விரத பலங்களும் செய்த புண்ணிய தான தர்மங்களின் புண்ணியமும் தாங்கள் அடையப் பெற்ற ஞானமும் தான் உடன் வரும் பாடல் " பண்டம் பெய் கூரை ......................... " இறைவனின் படைப்பில் எத்தனையோ விந்தைகள் இரகசியங்கள் அவற்றுள் ஒன்றுதான் மனித சரீரமும், அது புரியாத புதிர், பிடிபடாதஇரகசியம். உயிரானது இந்த உடம்பினுள் எப்படி நுழைந்தது , எப்படி அதில் இருந்து வெளியேறுகிறது என்பதை அறிந்தவர் யார்? உயிர் இருக்கக் கொண்டு எழுநது நடமாடுகிறது உடம்பு உயிர் நீங்கிவிட்டாலோ அதுவரை அவர் என்ற கூறிய உலகம் அவரை சவம் என்று சொல்லிவிடும், அப்போது அவர் என்றது அது என்றாகிவிடுகிறது. பாடல் " ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு...........) சரீர நிலையாமை குறித்து திருமூலர் பாடிய அருமையான பாடல் " அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார் மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார் இடப்பக்கமே இறை நொந்தது என்றார் கிடக்கப் படுத்தார், கிடந்தொழிந்தாரே?" தலைவாழை இலைபோட்டு அறுசுவை யோடு கூடிய உணவு வகைகளை இல்லத்தரசி சமைத்து, தன் கணவனுக்கு அவற்றை அன்புடன் பாரமாரினாள். அவனும் விரும்பி உண்டான். இருவரும் ஒன்றாய் கூடிக் கிடந்த வேளையில் " கண்ணே இடப்பக்கமாய் நெஞ்சு வலிக்கிறது என்றான், அந்த கணமே நிலத்தில் சரிந்து விழுந்து இறந்து போனான். காதல் தேனை கணவனும் மனைவியும் பருகிக் கனித்தது ஒருகாலம் அது கச்ககிற நினைவாய் இன்னொரு காலம் வாழ்க்கை துணை இறந்த பிறகு பாடையில் வைத்து சுடுகாட்டில் கொண்டு சென்று எரிப்பதுடன் அவர்கள் கொண்ட பாசம் மறைகிறது. அன்பால் உதிர்ந்த கண்ணீரும் அத்தோடு நின்றுவிடுகிறது, இதனை விளக்கும் பாடல் " வாசந்தி பேசி மணம் புணர்ந்தப் பதி................. ) இதனையே வள்ளுவரும் நிலையாமை அதிகாரத்தில் " நில்லாத வற்றை நிலை யின என்னுணரும் புல்லறி வாண்மை கடை " என்ற நிலையற்றவைகளை நிலையென்றுமனிதன் கருதுவது அவனுடைய அறியாமையே ஆகும், என்றும், " நெருதல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு " என்ற வாறு, நேற்றிருந்தோர் இன்றில்லை என்று சொல்லும் பெருமை உடையது இவ்வுலகம் என்கிறார் இக்கருத்தினையே நாலடியார் பாடலொன்றிலும் அறியலாம், காற்றடைத்த பைக்குள் இருந்து ஆட்டம் போடடவன் வெளியேறி பின், அவனது உடம்பை சிங்காரித்து அடக்கம் செய்தாலென்ன, அதை அலட்சியமாய் பலரும் பழிக்கும்படி அடக்கம் செய்தாலென்ன ? ( எந்தவித சம்பிரதாய சம்பவங்கள் இன்றி) இதன் பாடல் " நார்த்தொடுத் தீர்க்கிலென் நன்றாய் தடக்கிலென் பார்த்துழிப்பெய்யிலென் பல்லோர் பழிக் கிலென் தோற்பையினின்றுந் தொழிலறச் செய்தூட்டுங் கூத்தன் புறப்பட்டக்கால்" என்று யாக்கை நிலையாமையை குறித்து ஞானகிகள் வரையறுத்துள்ளனர் எனது இதர வலைதளங்கள்: vpoompalani05.wordpress.com, Deiveegamkarthicraja.blogspot.in, poomalai.blogspot.com.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக