ஞாயிறு, 4 மே, 2014

சங்கரநாராயணர் ஒடுக்கம் பனையூர்


சங்கரநாராயணர் ஒடுக்கம் பனையூர் Standard ஓம் தத் சத் குருவே நம ஸ்ரீ சத் குரு சங்கரநாராயண சுவாமிகள் மற்றும் ஸ்ரீ சத்குரு தட்சணாமூர்த்தி சுவாமிகள் ஜீவசமாதி – ஒடுக்கம் – பனையூர் அமைந்த இடம் : திருநெல்வேலி மாவட்டம், அருள்மிகு சங்கரநாயினார் கோவில் அமைந்த சங்கரன்கோவில் நகரத்திற்கும், தென்ன அக்னி திருத்தலமாக திகழும் அ.மி, பால்வண்ணநாதர் கோவில் கொண்ட கரிவலம் என்ற சிற்றூருக்கு மேற்கே சுமார் 5 கி,மீ, தூரத்தில் அமைந்துள்ளது இந்த ஒடுக்கம் என்ற ஜீவசாது. சுவாமிகள் இருவரின் பூர்வீகம் தென்னக வாயு சிவத் தலமான தென்மலை என்ற சிற்றூராகும், ஸ்ரீ சத்குர சங்கரநாராயணன் பள்ளிப்படிப்பு படிக்கும் போதே ஞான வாழ்வில் நாட்டம் ஏற்படச் செய்தவர் பொதிகை மலையிலுள்ள ஞான சித்தர் சத்குர முனிபுங்கர் ஸ்ரீ ராமகிரியார் என்னும் அகத்திய அவதார புருஷரே என வழங்கப்படுகிறது. ஞான உபதேசம் – தீட்சத் பெற்ற சங்கரநாராயணன் குருவின் திருவருளால் யான், எனது, என்னும் பற்றுகளை நீக்கி, உலக இன்பங்களை துறந்து, தன் புலங்களை அடக்கி, தன்னை மறந்த நிலையை உணர்ந்தவராக காணப்பட்டார். இல்லற தருமம்: இளம்வயதிலேயே துறவர வாழ்க்கை கொண்டதால், தனது பெற்றோரின் வற்புறுத்தலால் , தனது குருநாதரின் அனுமதி பெற்று, இல்லற வாழ்வில் சங்கமித்தார், தயைவடிவான குருநாதர் , தனது சிஷ்யனின் வேணடுகோளுக்கிணங்கி குடும்ப செலவுக்காக தேவைப்படும் பொருள் கிடைக்க ஐம்பத்தோர் அச்சரங்கள் அமைத்து, பூஜை முறைகளின்படி ரக்ஷாபந்தன எந்திரம் அமைக்கும் முறையினை உபதேசித்து, இந்த எந்திரத்தின் சக்தியை பயன்படுத்தி, மாந்தருக்கு தொல்லை கொடுக்கும் பில்லி, சூன்யம், பிணி, பாவ நோய்கள் தீர்க்க உன்னை தேடி வரும் பக்தர்களுக்கு வழங்கி அவர்கள் கொடுக்கும காணிக்கைகளை கொண்டு இல்லற வாழ்வுடன் பிள்ளை பாக்கியத்துடன் சுகமாய் ஆன்மீக வாழ்வு வாழ இல்லற வாழ்வில் நெறி தவறாது நின்று வாழ்வாயாக என அருள் புரிந்தார், இந்த ரக்ஷாபந்தன எந்திரம் இன்றளவும், இவர்கள் சந்ததியாளர்கள் மேற்கண்ட காரண காரியங்களுக்காக காணிக்கை பெற்றுக் கொண்டு வருகின்றனர், சில ஆண்டுகளுக்கு பிறகு சங்கரநாரயணன் தவசி முத்தம்மாள் தம்பதியருக்கு நான்கு ஆண் மக்களும், ஒரு பெண் மகவும் பிறந்தனர், இந்த நான்கு ஆண்மக்களில் நான்காவது மகனான தட்சனாமூர்த்தி என்ற குழந்தை இளம் பருவத்திலேயே ஞான மார்க்கதிற்குரிய குணா தியங்களை கொண்டுள்ளதை அறிந்த அவர்தந்தை சங்கரநாராயண சுவாமிகள் அப்பிள்ளையை தமது அருகிலேயே வைத்து ஆன்மீக ஞான உபதேச போதனைகள் வழங்கியும், தவ வலிமைமிக்கவானக உருவாக்கி வளர்த்தார், சுவாமிகள் தென்மலையில் வாழ்ந்து வந்த காலத்தின் போது தனது குருநாதரின் ஆனைப்படி அவர்கூறிய பனையூர் என்ற கிராமத்தில் நிட்க்ஷேப நதிக்கு அருகில் ஒரு குடில் அமைத்து, அங்கும் ரக்ஷாபந்தன எந்திதரங்களை பிணிகண்ட மாந்தர்களுக்கு வழங்கி தவ வாழ்வு வாழ பணித்தார். இவ்வேளையில் சங்கரநாரயணன் தனது குருநாதர் காண வேண்டி பொதிகை மலைக்கு சென்று அன்னாரை காண மிக சிரமப்பட்டததை அறிந்தும், சிஷ்யரின் தவவலிமையை அறிந்த குருவாநாதர் இனி தாமே வந்து காட்சி கொடுப்போம் என்று கூறி, ஒவ்வொரு ஆண்டு சித்திரைத்திங்கள் 20ம் நாள் நிடக்ஷேப நதியில் காட்சி யளித்தார், அதைக் கண்ட சங்கரநாராயணன் தனது குருவைதன் குடிலுக்கு வருகை தரவேண்டுமென பணித்து, அன்னாரை அழைத்துச் சென்று, அன்னம் பாலித்து, உபசரித்து, அன்னாரை இனிதே அனுப்பி வைத்தார், இந்நிகழ்வே இன்று வரை ஆண்டுதோறும் இந்த சித்திரைத்திங்கள் 20ம் நாள் காலையில் மேளதாளத்துடன் இரண்டு சப்பரங்களில் ஒன்றில் குருநாதர் ராமகிரியார் சார்பாக வெள்ளிக்குடத்தில் கும்பமும், இன்னொரு சப்பரத்தில் சங்கரநாராயண சுவாமிகளின் உருவப்படமும் வைத்து சப்பரத்தை தூக்கிக் கொண்டு நிட்க்ஷோப நதிக்கு சென்று குருநாதரையே கும்ப தீர்த்த ஐதீபமாக அமைத்து வந்து, பின் தற்போதுள்ள ஜீவசமாது ஒடுக்கத்திற்கு சப்பரத்தில் ஊர்வலமாக வந்து, மகேஷ்வர பூசை செய்து அன்னதானம் வழங்கி, பின் மறுநாள் காலையில் குருநாதரை மீண்டும் நிடக்ஷோப நித்கரைக்கு சப்பரத்தில் கொணடு சென்று விட்டுவருவதான நிகழ்ச்சியாக இன்றளவும் மிக சீறும் சிறப்புமாக நடைபெற்று வருகிறது.
படம் சப்பரததில் சங்கரநாராயணர் படம் சங்கரநாராயணர் ஒடுக்கம் ஜீவ சமாதி அடைதல்: சங்கரநாராயண சுவாமிகள் 1835ம் ஆண்டு கார்த்திகை 24ம் நாள் அவ்வூர் முக்கிய அன்பர்கள் முன்னிலையில் ஜீவசமாதி பெற்றார், அதன் பின் தந்தையார் தவ வாழ்வினை பின்பற்றி தட்சணாமூர்த்தி அவர்விட்ட பணிகளை தொடர்ந்து பின், அவரும் 1890ம் ஆண்டு கார்த்திகை மாதம் 27ம் நாள் அம்மாவாசை நன்னாளில் ஜீவசமாதி நிலை பெற்றார், இவ்வாறு தந்தையும் மகனும் ஜீவசமாதி பெற்று அவர்களின் சந்ததியார்கள் மற்றும் சித்தர்களின் நல்வாழ்வு பெற்றவர்களால் இச் ஜீவ சமாதி ஒடுக்கம் இன்றளவும் சிறப்புடன் பராமரிக்கப்பட்டு கல்மண்டபம் கட்டி குருபூசைகளும் சிறப்புடன் நடத்திவருகின்றனர், திருசிற்றம்பலம் ஒம் நமசிவாயம் படம் சப்பரததில் சங்கரநாராயணர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக