சான்றோக்குதல் தந்தைக் கடன்
" இன்சொல் விளைநிலமா ஈதலே வித்தாக
வன்சொல் களைகட்டு வாய்மை எருஅட்டி
அன்பு நீர் பாய்ச்சி அறக்கதிர் ஈன்றது ஓர்
பைங்கூழ் சிறுகாலைச் செய்" ............அறநெறிச்சாரம்
பாடலின் கருத்து;
இனிய வார்த்தை என்னும் விளைநிலத்தில் ஈகை என்னும் விதையை விதைக்க வேண்டும், கடுஞ்சசால் என்னும் களையை எடுக்க வேண்டும், உண்மை என்னும் எருவை இடவேண்டும், அன்பு என்னும நீைரப் பாய்ச்சேவண்டும், அறம் என்னும் விளைவைத்தருகின்ற பசுைமயான பயிரை இளமையிலேயே செய்ய வேண்டும்.
குழந்தைகளை வளர்க்கும் பொழுதே மேலே கண்டவற்றை கற்றுக் கொடுக்க வேண்டும், முன்மாதிரயாக பெற்றோர்கள் வாழ்ந்து காட்ட வேண்டும், ஒவ்வொரு ெபற்றோரும் இப்படிச் செய்தால் உலகம் நலமாக இருக்கும்,
நீதிமன்றங்களும் காவல் நிலையங்களும் இல்லாமல் போகும், இனிய சொற்களை பேசப்பழக்க வேண்டும், கடும் சொல் பேச வேண்டாம், சந்தர்ப்பம் வாய்க்கும் பொழுதெல்லாம் பிள்ளைகளுக்கு அறிவுரை கூறி வரவேண்டும், ஏழை களுக்கு உதவும் நல்ல பழககத்தை சிறுவயதிலேயே கற்றுத்தர வேண்டும், நற்குணங்கள் பதிவதற்கு இளமைதான் சிறந்தது.
உண்ைமயும், அன்பும், இருக்ண்கள் எனக் கூறிவருதல் வேண்டும், இப்படி இளைமயிலேயே பழக்கிவிட்டால் குடும்பமும் நாடும் செழிப்புடன் திகழும்,
செல்வம் சேர்த்து ைவப்பது மட்டும்தான் பெற்றோர்கள் கடமையாகாது. இளைய தலைமுறை சீர்கெட்டு வருகின்றது கடமையைச் செய்வதும் கடவுள் வழிபாடு ஆகும்.
திருச்சிற்றம்பலம் / ஓம் நமசிவாய ஓம் /
இன்னும் பல காண;
http://poompalani.weebly.com
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக