தமிழ் வேதம் காட்டும் இறை வழிபாடு
அனுதினமும் இறைவழிபாடு எவ்வாறு செய்யவேண்டும் என்று திருமுறைகள் - தமிழ் வேதங்கள் காட்டும் வழிமுறைகளை திருநாவுக்கரசர் சுவாமிகள் வாயிலாக தனனு பாடல் வழியாக கூறுகின்றார்,
" பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்தராகி
அரும்பொடு மலர்கள் கொண்டு ஆங்கு ஆர்வத்தை உள்ளே வைத்து
விரும்பிநல் விளக்குத் தூபம் விதியினால் இடவல்லார்க்குக்
கரும்பினில் கட்டி போல்வார் கடவூர் வீரட்டனாரே," நாவுக்கரசர் தேவாரம் பதிகம் 31
மனிதாகப் பிறந்துள்ள நாம் அதிகாலையில் எழுதல் வேண்டும், எழுந்து ஐந்து நிமிடம் சிவபெருமானாரை நினைத்து துதித்திடல் வேண்டும், " இன்றைய பொழுது நல்ல பொழுதாக கழிய வேண்டும் பாவங்கள் செய்யாமல் இருக்க வேண்டும், புண்ணியங்கள் செய்ய வேண்டும், என்னால் எந்த உயிருக்கும் துன்பம் நேரிடாமல் இருக்க வேண்டும், நாட்டில் அமைதி நிலவ வேண்டும்." என்று பிராத்தனை செய்தல் வேண்டும்.
பிறகு 108 முறை சிவாயநம " என்று சிந்தித்தல் வேண்டும், பிறகு குளித்து வெண்ணீரு அணிய வேண்டும்., சிவத் தொண்டில் ஈடுபடவேண்டும், என்று மன மிகழ்ச்சியுடன் அன்றலர்ந்த மலர்களை எடுக்க வேண்டும், சிவாலயம் சென்று மலர்களை அருச்சனைக்கு அளிக்க வேண்டும். ஆலயத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும், காலை நேரம் இப்படிக் கழிந்தால் நம் மனமும் இன்பத்தில் மூழ்கும், இந்த சிவபுண்ணியத்தால் வீடும் பேறும் செல்வச் செழிப்பும் கிடைக்கும், அன்றைய பொழுது பயனுள்ளதாக புண்ணியத்தில் கழியும், வீண் பேச்சு பேசுவதற்கும், வேண்டாதவற்றை பார்ப்பதற்கும் வழியில்லாமல் போகும், சமுதாயமும், நலம் பெறும், தனிமனிதர்களின் கூட்டம் தானே சமுதாயம் என்பது.
திருசிற்றம்பலம் " ஓம் நமசிவாய "
நன்றி : தமிழ் வேதம்
http://poomalai-karthicraja.blogspot.in,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக