சனி, 17 மே, 2014


திருமூலரும் திருமந்திரமும் உபதேசம் 3 அறம் செய்ய விரும்பு ( தொடர்ச்சி) அறம்செய்ய விரும்பு என்பதன் தொடர்ச்சியாக திருமூலரின் கருத்துக்களை உங்களுடன்பகிர்கிறேன், அறம் செய்கிறவன் இறையென்னும் தோணியேறி வினையென்னும் கடலைக் கடக்கிறான், அவன் வாழ்வை மேன்மைப்படுத்தும் வழியறிந்தவன் ஆவான்,அறம் செய்யாதவனின் தன்மை எத்தகையது என்பதையும் திருமூலர் கூறுகிறார் " எட்டி பழுத்தன இருங்கனி வீழந்தன ஓட்டிய நல்லநம செய்யாதவர் செல்வம் வட்டிகொண்டு ஈட்டியே மண்ணில் முகந்திடும் பட்டிப் பதகர் பயனறி யாரே!" எட்டி மரம் பழுக்கும், ஏறிட்டு யாரும் அதைப் பார்ப்பதில்லை, காரணம் அது புசிக்கத்தக்கதல்ல, சீண்டப் படாமல் கிடக்கிற எட்டிக்கனி போலத்தான் நல்லறம் செய்யாதவனின் செல்வமும் பயனற்று போகிறது, பொருளாசையால் கடும் வட்டி வாங்குவதோடு வஞ்சனையால் பிறர் பொருளைக் கவரும் பாதகர் தாம் செய்ய வேண்டிய அறத்தினை உணர்வதில்லை, செல்வத்தின் பயனே ஈதல் என்பதையும அவர்கள் அறிவதில்லை, என்பது பொருள். மனிதனின் பிறப்பிற்க்கும் இறப்பிற்கும் இடையே உள்ள காலப்பகுதி ஒன்றும் நீண்டதல்ல, அது கண்மூடித்திறக்கும் நேரத்தில் முடிந்து விடுகிறது, அவன் தனக்குள் வளர்த்த ஆயிரமாயிரம் கற்பனைகளும் சிதைந்து போகின்றன, அவனுடைய சரீரம் தனது வனப்பையிழந்து சாறற்ற சக்கையாகி விடுகிறது, பயனற்றதாகி விடுகிறது, அவனது உடலைப் போலவே வாழ்க்கையும் அறத்தின் அவசியத்தையும் உணராதிருக்கிறான் என வருந்துகிறார் திருமூலர் ( பாடல் : ஒழிந்தன காலங்கள் , ஊழியும் போயின .......... ) தம்மை யாசிப்பவர்க்கு தாய் மனதோடு உதவுகிறவனே இறைவனுக்கு உகந்தவன், பொருள் மீது பற்று வைத்து நல்லறம் செய்யத் தவறியவர்கள் காலனின் சினத்திற்கு ஆளாக நேரிடும், ( பாடல்: கனிந்தவர் ஈசன் ஆளாக நேரிடும் ............... ) நீஙகள் நல்லது செய்தால் நன்மை உண்டு, தீயது செய்தால் தீங்கே விளையும் இதுதான் இயற்கையின் நியதி, இதைத்தான் தலைவித என்கிறார்கள், இன்பமும் துன்பமும் உங்கள் செயலின் விளைவேயாகும், நாம் நல்லது செய்தால் மகிழ்ச்சியாக வாழலாம் என்பது மனிதனுக்கு தெரியாமல் இல்லை ஆனால் அவனுடைய அன்பற்ற மனம் அவனை அறம் செய்யாமல் தடுத்து விடுகிறது, ( பாடல் ; இன்பம் இடர், என்று இரண்டு உறவைத்து .................. ) எனவே நேர்மையற்ற செயலகளை செய்கிற ஒருவன் நிம்மதியாக வாழமுடியுமா? இறைவன் அவனைக் கவலைப் பட அனுமதிப்பானா? தேவைப்படுகிறவர்களுக்கு கொடுங்கள் தகுதியறிந்து கொடுங்கள் அடுத்தவரை துன்புறுத்தும் மிருகச் செயலை ஒருபோதும செய்யாதீர்கள் என்கிறது திருமந்திரம், ( பாடல்: கெடுவதும், ஆவதும் கேடில் புகழோன் ..................... ) இதன் கருத்தின் தொடர்ச்சியாக திருமூலர் யோகம் நியமம் இல்லார்க்கு ஈதல் தவறு என்றும் வலியுறுத்திகிறார், "ஈவது யோக இயம நியமங்கள் சார்வது அறிந்தன்பு தங்கும் அவர்க்கன்றி ஆவ தறிந்தன்பு தங்காதவர்களுக்கு ஈவது பெரும் பிழை என்றுகொள்வீரே" உலகீரே, யோக உறுப்புகளான இயம நியமங்களின் சார்புகளை உணர்ந்து அன்பு தங்கப்பெற்றவர்களுக்கே அல்லாமல், அன்பில்லாதவர்கட்கு ஒன்றை தருவது பெரும் தவறாகும் என்பதை அறிந்து கொள்ளுங்கள், அதாவது பாத்திரம் அறிந்து பிச்சை இடுதல் வேண்டும் என்பதை இம்மந்திரம் கூறுகிறது, இயமமாவது, கொலை, களவு, பொய, காமம் முதலான தீய குணங்களை அகற்றி ஐம்புலங்களை அடக்கி இருத்தலாகும் எனவே யோக நியமம் இல்லாருக்கு ஈதல் கூடாது, இதுபோன்றே சீலம் இலார்க்கம் ஈதல் சிறிதும் பயன் இல்லை என்றும் கூறுகிறார், பாடல் : கோல வறட்டைக் குனிந்து கிட்டுப் பாலைக் கறந்து பருகுவதே ஒக்கும் சீலமும் றோன்பும் இலாதவர்க்கு ஈந்தது காலம் கழிந்து பயிரது ஆகுமே" ஒழுக்கமும் நோமபும் இல்லார்க்கு ஒன்றை ஈவது, அழகான வறட்டு பசுவிற்கு குனிந்து பசுந்தழைகளை இட்டு பாலை கறந்து குடிப்பது போலாகும் இது போன்றது மட்டும் அன்று, பருவம் தவறிச் செய்த பயிரையும் போன்றதாகும், சில செடிகள் பருவம் கடந்து பயிர்செய்தால் அப்பயிர் செழித்து வளரும் ஆனால் பலன் தந்து அறுவடைக்கு வராது, அதுபோலத்தான் என்கிறார், தகுதியற்ற ஞானிகட்கு ஒன்றை ஈவதால் பயன் இல்லை என்பதை இரண்டு உதாரணங்களால் காட்டுகிறார், திருக்குறளில் அறம் செய்வது பற்றி பல அதிகாரப் பாடல்கள் இருக்கின்றதை நாம் அறியலாம் " ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும் வாயெல்லாம் செயல்" என்ற பாடல் மூலம் " உன்னால் முடிந்த வகையில் எல்லாம் அறத்ததினை இடைவிடாமல் செய்து கொண்டிரு " என்கிறார் வள்ளுவர், நான் இப்போது இளைஞன் அறம் செய்ய இன்னும் காலம் இருக்கு இன்னும் நிறைய சம்பாதித்து விட்டு அறம் செய்வோம் என்று தள்ளிப் போடாமல் இன்றே நல்லது செய் என்கிறார் வள்ளுவர், எனவே நன்றே செய் அதுவும்இன்றே செய் என்பது பழமொழி திருச்சிற்றம்பலம் - ஒம் நமசிவாய ஒம் எமது தொடர்புக்கு உள்ள வலைதளங்கள்: http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://vpoompalani05.blogspot.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக