திருமூலரும் திருமந்திரமும் உபதேசம் 7
ஏழ்மை
திருமூலரும் திருமந்திரமும் உபதேசம் 7
ஏழ்மை
துன்பத்தில் மிகப் பெரியது வறுமையால் உண்டாகிற துன்பம், " கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை " அவ்வையார்
வறுமை ஒருவனை எப்படியெல்லாம் துன்புறுத்தும் அவனுடைய வாழ்க்கையை மாற்றிப்போடும என்பதை வெகு எளிமையாக சொல்கிறார் திருமந்திரத்தில் திருமூலர்
புடைவை கிழிந்தது போயிற்று வாழ்க்கை
அடையப்பட் டார்களும் அன்பில ரானார்
கொடையில்லை கோளில்லை கொண்டாட்ட மில்லை
நடையில்லை நாட்டில் இயங்குகின் றார்கட்கே" என்கிறது திருமந்திரம்
உடுத்திய ஆடை கிழிந்தபின் பயன்படாது , வறுமையுற்றவர் வாழ்க்கையும் அதுபோல் பயனற்றதுதான், நெருங்கியிருந்த உறுவுகள் அன்பில்லாது விலகிப்போகும் கொடுக்கல் வாங்கல், நின்றுவிடும், அன்பில்லாது விலகிப் போகிவிடும். குதூகலம் மறைந்து விடும், ஏழ்மையின் காரணமாக ஊரார் நடுவே நிமிர்ந்து நடக்கும் கம்பீரம் இல்லாது போகும், இது பாடலின் கருத்து
" வறுமையிலும் செம்மையாய் வாழும் வழியிது என்கிறது நாலடியார், "
" மறுமையும் இம்மையும் நோக்கியொருவருக்கு
உறுமாலியைவ கொடுத்தல் - வறமையால்
ஈதல் இசையாதெனினும் இரவாமை
ஈதல் இரட்டியுறும்,
வறுமை காரணமாய் ஒருவர்க்கு வழங்கும் திறன் இல்லாது போனாலும், அவர் இராதிருந்தாலே சிறப்புதான், இரவாதிருக்கும் தன்மை கொடுப்பதைக் காட்டிலும் இருமடங்கு உறுதியை உடையது,
இக்கருத்தினையே புறநானூற்று பாடலிலும்
ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர்
ஈயேன் என்றல் அதனிலும் இழிந்தன்று
கொள் என கொடுத்தல் உயர்ந்தன்று அதனெதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்நதன்று " என்று இரத்தல் கொடுத்தல் குறத்து அதன் இழிவு உயர்வுகளை கூறப்படுகிறது
வறுமை குறித்து நல்குரவு அதிகாரத்தில் வள்ளுவர் " நன்மையற்ற நிலையைக் குறிக்கும் சொல் நல்குரவு"
ஒருவன் வறுமையடைய எத்தனையோ காரணங்கள் - செல்வமில்லாதிருப்பது பெற்றோரின் ஆதரவின்றி வாழ நேரிடுவது, உழைக்கத் தவறுவது, அறிவுத்திறன் இல்லாதிருப்பது, பொருளின் மீது பற்றற்று போவது, பிறரால் சொத்து அபகரிக்கப்படுவது, என்று தீய பழக்கங்களும் ( மது,மாது, மாமிசம்) கூட அவனுடைய வறுமைக்கு காரணமாக அமையலாம்,.
வறுமையைப்போல் துன்பம் தருவது " வறுமையின்றி வேறில்லை " என்கிறார் வள்ளுவர்
இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது" - குறள்
ஒருவனுடைய பண்பையும் பரம்பரைப் பெருமையையும் வறுமை அழித்துவிடும், வறுமை என்கிற ஒரு துன்பம் தனித்து வராது, கூடவே பல துன்பங்களையும் கூட்டி வரும்.
ஏழைசொல் அம்பலமேறாது என்கிறது சொலவடை
நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் - நலகூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும், " என்கிற குறளை பின்பற்றி எழுந்தாதாயிருக்கும், நீங்கள் சொல்லின் பொருளறிந்து விளக்கமாகவும் இனிதாகவும் எடுத்துச் சொல்லக்கூடும் ஆனால் நீங்கள் பொருளற்றவராயின் (வறியவர் ) உங்கள் சொல்லும் பொருளற்றதாகிவிடும்,வறியோரின் சொல் உரையேறா என்பர் ,
இரந்து பொருள் பெறுவதைக் காட்டிலும் இறந்து போவதே சிறப்பு என்பது வள்ளுவர் கருத்து
கொடிய வினைகளால் துன்புறுகிறவன் அவற்றில்இருநது விடுதலை பெற என்ன வழி? சொல்கிறார் திருமூலர் " சிவனார் திருவடிகளை வேண்டி நின்றால் வறுமை நீங்கி வாழ்க்கையில் சுகப்பட முடியும் என்கிறார் ( பாடல் : அறுத்தன ஆறினும் ஆனின மேவி................ )
திருச்சிற்றம்பல் - ஓம் நமசிவாயம் -
http://poompalani.weebly.com
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக