சனி, 24 மே, 2014

சீ(ஸ்ரீ)தேவியும் மூதேவியும்


சீ(ஸ்ரீ)தேவியும் மூதேவியும் ( கேட்டலில் பிடித்தது ) சிங்கப்பூரில் சிவ, சு,சோம, அவர்கள் ஆற்றி ஆன்மீக சொற்பொழிவில் பிடித்த நிகழ்வுகள் நடைமுறை பேச்சு வழக்கில் சீதேவி என்றால் செல்வம் தரும் திருமகள் என்ற அதிர்ஷ்ட தேவியையும், மூதேவி என்றால் அபசகுணத்திற்கு எப்போது அதிர்ஷ்டம் இல்லாத எப்போதும் தூங்கி வழியும் தேவியையும் அதிர்ஷ்டமில்லாத தேவியையும் குறிப்பது நடைமுறையில் உள்ளது, துரதிஷ்டம் பிடித்த வீட்டை மூதேவி குடிகொள்ளும் வீடு என்று கூறுவது நமது மரபு, இது ஏளமான வார்த்தையாக எல்லாராலும் கூறப்படுவது, ஒரு ஆன்மீக சொற்பொழிவு நடைபெறும் கூட்டத்தில் சிலர் பாதி தூக்கக்கலக்த்தில் இருப்பதை அறிந்த சொற்பொழிவாளர் இங்குள்ள ஆன்மீக பெரியோர்கள் இறையருள் சம்பந்தமாக ஆன்மீகத்தை மிகவும் கவனமாக கேட்டுக்கொண்டுள்ளவர்கள் பக்கத்தில் - உங்களிடம் செல்ம் தரும் சீதேவி உடனிருக்கிறாள், ஆனால் இதை கவனமின்றி கேட்காத பாதி தூக்கித்தில் உள்ளவர்களிடம் மூதேவி உடன் இருக்கிறாள், நீங்கள் இந்த ஆன்மீக உரையை கேட்டு முடித்தபின் வீட்டிற்கு செல்லும் போது தங்களுடன் உடனிருந்த சீதேவி அல்லது மூதேவிதான் உங்களுடன் வீடுவரை வருவாள் உங்களுக்கு சீதேவி வேண்டுமா? அல்லது மூதேவி வேண்டுமா? என்ற வினா எழுப்பியவுடன் தூக்கத்திலிருந்தவர்கள் அனைவரும் விழிப்படைந்து அவரின் கவனத்திற்கு திருப்பபட்டனர், இதேபோன்று தவத்திரு வாரியார் சுவாமிகள் ஒரு ஆன்மீகக் கூட்டத்தில் சீதேவி, மற்றும் மூதேவியைப்பற்றி உருவக்கதையை கூறினார், ஒரு தடவை நாரத முனியவர் இந்த சீதேவி , மூதேவி இவர்களிடம் சிக்கிக்கொண்டார், அவர்கள் தங்கள் நம்மில் அதிக அழகு என்பது போன்று கர்வம் கொண்டு நாரதரிடம் எங்களில் யார் மிகுந்த அழகு என்ற வினாவினை தொடுத்தார்கள், இதைக்கண்ட நாரதர் முனிவர் நாம் எல்லோருக்கும் சிக்கலை உண்டுபண்ணுவதுதான் வழக்கம், இப்போது நமக்கே இந்த மிகப்பெரிய சிக்கலைச் சந்திக்க வேண்டியதுள்ளதே என்று தயங்கியபோது தனக்கு உபாயம் செய்தார், நான் யார் மிக அழகென்று கூறுகிறேன் தாங்கள் நான் சொல்வது போன்று செய்தால் என்றார், உடனே இருவரும் என்ன செய்யவேண்டுமென கேட்டனர், உடனே நாரதர் சற்று விலகி இருந்து கொண்டு , மூதேவியிடம் தேவி தாங்கள் தற்போது முன்னோக்கி திரும்பி செல்லுங்கள் என்றார், உடனே மூதேவி பின்நோக்கி நடந்து சென்றார் அப்போது தேவி தாங்கள் பின்நோக்கி செல்லும் போது தங்களின் பின்னழகு மிக அழகுஎன்றார், எனவே தாங்கள் சென்றுகொண்டே இருங்கள் அப்போதுதான் இந்த அழகு உங்களிடம் தொடர்ந்து இருக்குமென கூறி மூதேவியை அங்கிருந்து அனுப்பிவிட்டார், பின் சீதேவியிடம் தாங்கள் முன்நோக்கி வருங்கள் என்றார் உடனே சீதேவியிடம் தாங்களின் முன்அழகு மிகமிக நன்று என்று கூறி முன்நோக்கி வர கூறி தன்பால் சீதேவி அருளைப் பெற்றார், இவ்வாறு சமயமறிந்து பேசி திருமகள் சீதேவியின் அருளை பெற்ற கதையை வாரியார் விளக்கினர்ர்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக