திருமூலரும் திருமந்திரமும் உபதேசம் 3
அறம் செய விரும்பு
திருமூலரின் கூற்றே அவ்வையாரின் மூதுஉரையின் தலைப்பாக உள்ளது வாழ்க்கை மிகக் குறுகியது. இங்கே வாழுங்காலத்தை அர்த்தமுடையதாக்கிக் கொள்ள வேண்டும், எது மனதுக்கு அமைதியையும் ஆனந்தத்தையும் தருமோ அந்த வழியைத் தேர்ந்திட வேண்டும், ஒழுக்கத்துடன் வாழும் வாழ்க்கையே உயர்வுகளை பெற்றுத்தரும், அறிநெறியில் நிற்க வேண்டும், அதுவே ஆன்மாவை ஒளிரச் செய்யும், " உன்னதம் பெற விரும்புகிறவர் அறத்தை போற்ற வேண்டும், அறவொழுக்கம் என்பது அடுத்தவர் சொத்துக்கு ஆைச்ப்படாமல் இருப்பது , பொய் பேசாமல் இருப்பதும், பொய் பேசுகிறவர் தவறு செய்ய தயங்குவதில்லை, பொய்யர்கள் எதிராளியை நம்பிக்கை மோசம் செய்கிறவர்கள்? இக்கருத்தினை " அவ்வியம் பேசி அறங்கெட நில்லன் மின் ............. " என்ற பாடல் மூலம் சித்தர் வலியுறத்துகிறார், ( முதல் தந்திரம் - உயிர் நிலையாமை பாடல்) அறங்களில் அனைத்தையும் கைக் கொள்ள முடியாவிட்டாலும் ஒழுக்கம் தவறாமல் உண்மை வழி நிற்பது பெரிய அறம், அறம் என்பது தன்னையறிவதில் தொடங்கி, தன்னை யறிந்தவரிடமே அறப்பண்பு அமையும் என்கிறார்,
பண்புடையவர் அறம் செய்வதில் பாரபட்சம் பார்க்க மாட்டார், இவர் நல்லவர் கெட்டவர் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்றெல்லாம் அவர் இனம் பிரிப்பதில்லை. வகைப்படுத்துவதும் இல்லை. அவர்தனது பாடலில் இக்கருத்தை வலியுறுத்தி எல்லோருக்கம் கொடுங்கள் சாப்பிடவதற்கு முன் யாரேனும் விருந்தாளி வருகின்றாரா? என்று எதிர்பார்த்து உண்ணவேண்டும், காக்கைகளை பார்த்து அதன் குணங்களை அறிந்து அது மற்ற காக்கைகளை அழைத்து உண்பதுபோல் கிடைத்த உணவினை பகிர்ந்து உண்ணும் பழக்கத்தினை அதனிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள் என்கறார்.
" ஆர்க்கும் இடுமின் அவரிவர்என்னன்மின்
பார்த்திருந்துஉண்மின் பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை யுடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே."
இதுபோல மற்றொரு பாடலில்மூலம் நீங்கள் உண்பதற்கு முன் இறைவனை வணங்கி உண்ணுங்கள் என்கிறார், அதன்படி அவரது பாடலில்
" யாவர்க்குமாம் இறைவருக்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுரை
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒருகைப்பிடி
யாவர்க்குமாம் பிறருக்கு இன்சொல்தானே"
இதன் மூலம் இறைவனுக்கு வில்லவ இலையான பச்சையிலையால் அர்ச்சித்து விட்டு, பசுவுக்கு ஒரு வாய்அளவிலான பசும்புல்லும், தான் உண்ணும் உணவில் மற்ற வர்களுக்கு ஒரு கைப்பிடி உணவும் வழங்குங்கள் இதுவும் முடியாத போது தாங்கள் பேசும் பேச்சிலாவது பிறரிடம் அன்பாக பேசுங்கள் என்ற கருத்தை வலியுறுத்திகறார் மிக எளிமையான பாடல்வரிகள் மூலம்.
உங்கள் மனம் செய்கிற முக்குற்றங்களை ( காமம், வெகுளி, மயக்கம்) அகற்றி அறிவை பெருக்கும் காரியத்தை நீங்கள் செய்யவில்லை, செல்வம், குவிந்த நிலையிலும் உங்களிடம் அறச்சிந்தை இல்லாமல் போனது, தர்மம், செய்யாதவர் சேர்த்து வைத்தவை என்னவாகும் எண்ணிப்பாருங்கள் என்கிறார் கீழ்கண்ட பாடல்கள்மூலம்
" அழுக்கினை ஒட்டி அறிவை நிறையீர்......................... "
ஆணவ அழுக்கை அகற்றி இறையுணர்வு பெறவேண்டும் பொருளின் மீதான பற்று குறைந்தால் பாவக் கொடுவினைகள் குறையும், நீங்கள் புண்ணியம் செய்யாவிட்டாலும் பரவாயில்லை, பாவம் செய்யாமல் இருந்தாலே புண்ணியம் கிடைக்கும் உன்னிடம் அறச்சிந்தனை இல்லாவிட்டாலும் இறைச்சிந்தனை மட்டும் எப்படி இருக்கும் உன் போக்கிற்கு இறைவனின் துணை உனக்கு கிடைக்காதல்லவா? என்கிறார் திருமூலர், அறமே சிறந்த தவம், அதுவே உங்களை வினை என்கிற கடலில் இருந்து கரை சேர்ப்பது இறைவழி நிற்பது போன்றதே இல்லறத்தான் தனக்குரிய கடமைகளைச் செய்வதும் ( பாடல் : திளைக்கும் வினைக்கடல்......... )
தொடரும்,,,,,,,,,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக