புதன், 28 மே, 2014

திருமூலரும் திருமந்திரமும் / உபதேசம் 8 கற்றதனாலாய பயன்


திருமூலரும் திருமந்திரமும் / உபதேசம் 8 கற்றதனாலாய பயன் கல்வி கற்பதன் பயன் ஒருபதவியை அடைவது என பலரும் கொள்பர் உயரிய நோக்கம் உடைய பெரியோர் தனம்அறிவுத்திறததால் தாம் அறந்த உண்ைமகளை மற்றவர்க்கும் உணர்த்தி அவர்களுடைய அறிைவயும மேம்படுத்துவர். ஞானக் கண்ணால் காணமுடிந்தவர் மற்றவர்களிடத்தும் தான் கண்ட அைடந்த ஞானக்கண் மற்றவர்களுக்கும் உண்டாகுமாற செய்யவேண்டும் என்கிறார் திருமூலர், கற்றறி வாளர் கருதிய காலத்துக் கற்றறி வாளர் கருத்திலோர் கண்ணுண்டு கற்றறி வாளர் கருதி உரைசெய்யுங் கற்றறி காட்டக் கயலுள வாக்குமே. கல்வியைக் கற்ற அறிவினையுடையோர் அவ் வறிவால் கருதியுணருங் காலத்து, கல்வியைக் கற்ற அறிவினை உடையோர் பலரது உள்ளத்திலும் சிறப்பாக ஒரு கண் இருத்தல் புலனாகும். இனி அக்கற்ற அறிவினையுடையோர் ஆராய்ந்து சொல்லு கின்ற கல்வியறிவுரை, பாலை நிலத்திலே கயல்மீனைப் பிறழச் செய்தாற் போலும் நன்மையைப் பயக்கும். ``பாம்பறியும் பாம்பினகால்`` (பழமொழி நானூறு) என்றபடி, கற்றாரது நிலைமையைக் கற்றவரே உணர்வரல்லது மற்றவர் உணர மாட்டார் ஆதலின், ``கற்றறிவாளர் கருதிய காலத்து ... ... ... கண்ணுண்டு`` என்றார். `கற்றாரைக் கற்றாரே காமுறுவர்` (மூதுரை) என ஔவையாரும் கூறினார். ``ஓர் கண்`` என்றது, பலர்க்கும் முகத்தின்கண் உள்ள ஊனக் கண்ணல்லாத வேறொருவகைக்கண் என்றவாறு. அது ஞானக்கண். ஞானக்கண்ணே சிறப்புடைத்தாதலை, கண்ணுடையர் என்பவர் கற்றோர்; முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர். -குறள், 393 எனத் திருவள்ளுவரும் குறித்தருளினார். நான்கிடத்தும், `கற்ற` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயின. கற்ற அறிவு - கற்றதனால் உண்டாகிய அறிவு; ``கற்றறி`` என்பதில் அறி, அறிவு; முதனிலைத் தொழிற்பெயர். காடு, இங்குப் பாலை நிலம், ``அக்கயல்`` என்பதில், சுட்டுப்பண்டறி சுட்டாய், `நீரினுள் வசிக்கும் அத்தன்மை உடைய` என அதன் இயல்பை விதந்தவாறாய், நீர் நிறைந்து நிற்றலைச் சுட்டுங் குறிப்பாயிற்று. `காட்டில்` என ஓதுதலும் ஆம். `பாலையை மருதம் ஆக்கினாற்போல, அறியாமையாற் பாழ்பட்டுக் கிடக்கும் உள்ளத்தை அறிவுடையதாய் நலனுறச் செய்யும்` என்பதாம். `கற்ற அறிவு கயலை உளவாக்கும்` என்க. எனவே, `அவர் சொல் கேட்கத்தக்கது` என்பதும் குறிக்கப்பட்டதாம். இதனால், கல்வியின் சிறப்பும், அது, தன்னை உடையார்க்கே யன்றிப் பிறர்க்கும் பயன் தருதலும் கூறப்பட்டன. இங்கே வாழும் காலத்திலேயே வாழ்வின் நிைலயாமையை உணர்ந்து ெகாள்ளுங்கள் உயிருக்கு உறுதி தரும் சாசுவதப்பொருளான இறைஞானத்தை பெற முயற்சி செய்யுங்கள் அவ்விதமாய் உங்கள பாவங்களை நீக்கி கொள்ளுஙகள் என்கிறார் இந்த பாடல் மூலமாக நிற்கின்ற போதே நிலையுடை யான்கழல் கற்கின்ற செய்மின் கழிந்தறும் பாவங்கள் சொற்குன்றல் இன்றித் தொழுமின் தொழுதபின் மற்றொன் றிலாத மணிவிளக் காமே. பொழிப்புரை : இளமை உள்ள பொழுதே என்றும் ஒரு பெற்றி யனாய் நிற்கின்ற சிவபெருமானது திருவடிச்சிறப்பைத் தெளிவிக் கின்ற நூல்களைக் கற்கின்ற செயல்களைத் தப்பாது செய்யுங்கள்; அவ்வாறு கற்றலானே பாவங்கள் பற்றறக்கழியும்; பின்பு அக்கல்விகள் வெறுங்கல்வியாய் ஒழியாதவாறு அத்திருவடிகளை வணங்குங்கள்; வணங்கினால் அவை, தன்னை ஆக்குதற்கும், தூண்டுதற்கும் பிறிதொன்றனை வேண்டாது இயல்பாகவே என்றும் ஒளிவீசி நிற்கும் மணிவிளக்குப் போல நின்று உங்கட்கு உதவுவனவாம். குறிப்புரை : கற்றற்கு வேண்டுவது இளமைக் காலமே யாதலின், அஃது இங்கு ஆற்றலாற் கொள்ளக் கிடந்தது. இளமை முதலிய நிலை யாமையுடையார்க்கு நிலைபேறாவது இறைவன் திருவடியே என்றற்கு, `நிலையுடையான் கழல்` என்றும், `அதனை விளக்கும் கல்வியே கல்வி` என்றற்கு, ``கழல் கற்கின்ற செய்மின்`` என்றும், `அக்கல்வியால் வினைமாசு, நீங்கும்` என்பதுபற்றி ``கழிந்தறும் பாவங்கள்`` என்றும், கற்க கசடறக் கற்பவை; கற்றபின் நிற்க அதற்குத் தக. குறள்,391 என்றவாறு, கற்றவண்ணம் நில்லாதபொழுது கற்றலாற் பயனில்லை யாகலானும், கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅ ரெனின். -குறள்,2 என்பவாகலின், கல்வியின் உண்மைப் பயன் இறைவன் திருவடியைத் தொழுதலேயாகலானும், ``சொற்குன்றல் இன்றித் தொழுமின்`` என்றும், திருவடிக் கல்வியால் வினை நீங்கப்பெற்றார் அத்திருவடியைத் தொழுவாராயின் அதனைப் பெற்று - இன்புறுவ ராகலின், ``தொழுதபின் மணி விளக்காம்`` என்றும் கூறினார். `திருவடிக் கல்வியே கல்வி` என்பதனை, `சிவமுயன் றடையும் தெய்வக் கலைபல திருந்த ஓதி` -தி.12 பெ. பு. மனுநீதி, 18 எனவும், ``உள்ளம்நிறை கலைத்துறைகள் ஒழிவின்றிப்பயின்றவற்றால் தெள்ளிவடித் தறிந்தபொருள் சிவன்கழலிற் செறிவு`` -தி.12 பெ. பு. சிறுத்தொண்டர், 4 எனவும் சேக்கிழார் குறிப்பிடுதல் காண்க. ``கற்றதனாலாய பயன் என்கொல்`` என மேற்காட்டிய திருக்குறளைக் கூறிய திருவள்ளு வனார்க்கும் இதுவே கருத்தாதல் உணர்க. வினைமாசினை அறுக்கும் திருவடிக்கல்வியை, ``சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம் (ஆகிய) உவமையிலாக் கலைஞானம்`` -தி.12 பெ. பு. திருஞான. 70 எனவும், இறைவன் திருவடியைப் பலவாற்றானும் தொழுது அடைத லாகிய அனுபவத்தை, அதே பாட்டில், ``பவம் அதனை அறமாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம் (ஆகிய) உணர்வரிய மெய்ஞ்ஞானம்`` திருமறை .12 ஞான. 70 எனவும் சேக்கிழார் விரித்தமை காண்க. சொல் - சொல்வடிவாகிய கல்வி. இதனை, `வாசக ஞானம்` என்றல் அறிக. குன்றல் - பயனின்றிக் கெடுதல். இதனால், `உண்மைக் கல்வியாவது இது` என்பது, அதன் பயன்களும் தெரித்துக் கூறப்பட்டன. கல்வியில் "உலகியல் கல்வி வேறு, உண்ைமயான கல்வி வேறு" என்கிறார் திருமூலர், உண்மையான கல்வி குண்டலியின் ஆற்றைலப் பெருக்குவது பிரணவ நெறியில் நிற்பதுமே என்கிறார் அவர், வீடுபேற்றை அளிப்பது பிரணவ அறிவு, இறைவனை வழீபடுவோர்க்கு தூய்மையான சோதி துணை வரும், சிவனார் பெருமை உணர்ந்தவர்கள் அவனையே தங்கள் வழித்துைணயாய் கொள்வார்கள், இறைவனையே பற்றுக் கோடாய் கொள்வது ஞானியர் துணையில் சாத்தியமாகும்,கல்லாதாைர துணை கொள்ளக்கூடாது என்கிறது திருமந்திரம் வழித்துணை யாய்மருந் தாயிருந் தார்முன் கழித்துணை யாம்கற் றிலாதவர் சிந்தை ஒழித்துணை யாம்உம் பராய்உல கேழும் வழித்துணை யாம்பெருந் தன்மைவல் லானே. பொழிப்புரை : வானுலகமும், பிற உலகங்களுமாய் நின்று எல்லா உயிர்கட்கும் எவ்விடத்தும் துணையாய் நிற்கும் பேராற்றலும், பேரருளும் உடையவனாகிய இறைவன், கல்வியால் யாவர்க்கும் நன் னெறித் துணையாயும், அமுதமாயும் நிற்கின்றவர்கட்கே விளங்கித் தோன்றிப் பெருந்துணையாய் நிற்பன். கல்வி இல்லாதவர்க்கு அவர் உள்ளம் தன்னை நீங்குதற்கே துணையாவன். (அறியாமையை மிகுவிப்பன் என்பதாம்) குறிப்புரை : வழித்துணையாதலும், `யாண்டு பலவாயினும் நரையிலவாக்கி` அமுதமாதலும் கற்றார்க்கன்றிக் கூடாமையின், `கல்வியால்` என்பது ஆற்றலால் விளங்கிற்று. இதனாலும் கல்வியது சிறப்புக் குறிக்கப்பட்டது. `கழிதுணை, ஒழிதுணை` என்பன எதுகை நோக்கி விரித்தல் பெற்றன. கழி, உரிச்சொல். ``கற்றல் கேட்டல் உடையார் பெரியார்`` (தி.1 ப.1 பா.2) ``கல்லா நெஞ்சின் நில்லான் ஈசன்`` (தி.3 ப.40 பா.3) என்பன திருஞானசம்பந்தர் வாக்காதல் அறிக. இதனால், `திருவருள் பெறுதல் கல்வியானே ஆவது` என்பது கூறப்பட்டது. கண்ணப்பர் முதலாயினார் கல்வி இன்றியும் திருவருள் பெற்றாரால் எனின், அவரெல்லாம் முற்பிறப்பிற் கற்று இப்பிறப்பில் அதன் பயனை எய்தினார் என்பதனை, ``கலிமலிந்த சீர்நம்பி கண்ணப்பன்`` -தி.7 ப.39 பா.2 என்பது முதலிய அருட்டிருமொழிகளான் அறிந்துகொள்க. இது பற்றியன்றே திருவள்ளுவர், ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற் கெழுமையும் ஏமாப் புடைத்து. -குறள், 298 எனவும், யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு. -குறள், 297 எனவும் ஓதுவாராயினர் என்க. பற்றது பற்றிற் பரமனைப் பற்றுமின் முற்றது எல்லாம் முதல்வன் அருள்பெறில் கிற்ற விரகிற் கிளரொளி வானவர் கற்றவர் பேரின்பம் உற்றுநின் றாரே. பொழிப்புரை : யாதொரு செயலாயினும் அது முற்றுப் பெறுகின்ற அந்நிலைமையெல்லாம் முதற்கடவுளது திருவருள் பெற்றவழியே ஆவதாம். `எல்லாவற்றையும் முடிக்க வல்ல வன்மையை உடை யோம்` எனத் தம்மை மதித்துக்கொள்கின்ற தேவரேயாயினும், அவனது இயல்பை உணர்த்தும் நூல்களைக் கற்றவரே அவனது பேரின்பத்தை அடைந்தனர்; ஏனையோர் அடைந்திலர். அதனால், நீவிர் நல்லதொரு துணையைப் பற்றவேண்டின், சிவபெருமானையே அறிந்து பற்றுதல் வேண்டும். http://poompalani.weebly.com http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக