வெள்ளி, 9 மே, 2014


திருமூலரும் திருமந்திரமும்
" நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் வான்பற்றி நின்ற மறைபொருள் சொல்லிடின் ஊன்பற்றி நின்ற உணர்வு மந்திரந் தான்பற்றப பற்றத் தலைப்படுந்தானே." என்பார் திருமூலர். அவர் பெற்ற இறையின்பத்தைஉலகமும் பெறவேண்டும் என்பதற்காகவே திருமந்திரம் என்கிற நூலை அவர் அருளியது, திருமூலர் மன்னுயிருக்கனபர், சித்தர், சைவம் தழைக்க செய்தமையால் நாயன்மாருமாவார். திருமூலர் பூர்விகத்தில் சுந்தரானந்தர் , கயிலாய மலையில் வசித்த நந்திதேவரின் சீடர், நமது நண்பரும் சகமாணக்கருமான அகத்தியரைக் காண பொதிகை மலைச் சாரலுக்கு புறப்பட்டு வந்தார். தனது பயணவழியில் சாத்தனூர் என்கிற சித்தூரில் காவிரி நதியின் அழகை ரசித்தபடி நடந்து வந்துகொண்டிருந்தார். கரையோரத்தில் அவர்கண்ட காட்சி அவரைத் தடுக்குறச் செய்தது. அங்கே பசுக்கூட்டங்குளும் எருதுகளும் வருத்தத்துடன் ஒலியெழுப்பிக்கொண்டிருபபதை கண்டு மனம் நொந்து உற்று கவனிக்கையில் அங்கு சவமாய் கிடந்த ஒருவனைச் சுற்றி பசுக்கூட்டம் நின்று கண்ணீர்வடித்துக் கொண்டிருந்தை கவனித்தார். தெளிந்த அறிவுடன் சீரான மனநிலையில் இருப்பவர் சுந்தரானந்தர். கண்ணெதிரே கண்ட காட்சி கலங்கினார். ஆவினத்தின் தவிப்பு கண்டு மனம்உருகினார், உடனே தனது உடலை மரத்தின் பொந்தில் கிடத்திவிட்டு , சவமாக கிடந்த ஆவினம் மேய்க்கும் மூலனின் உடலின் உடலில் புகுந்தார் உயிர்பித்த மூலன் வடிவில் எழுந்தார், இதனைக் கண்ட ஆவினங்கள் தனது எஜமானர் உயிர் பெற்றுவிட்டான் என்று எண்ணி மகிழ்ச்சி அடைந்து எழுந்து நடந்த மூலனின் பின்னால் பசுக்கூட்டமும் சென்றது. மாலையில் மூலன் உருவில் இருந்த சுந்தரானந்தர் மாடுகளை கிராமத்திற்கு ஒட்டிச் சென்றார். மாடுக்ள அனைத்தும் தத்தம் கொட்டிலுக்கு சென்றது. மாடுகள் திரும்பிவிட்டது தனது கணவர் வரவில்லையே என எதிர்பார்த்து கொண்டிருந்த மூலனின் மனைவி மூலன் வடிவிலிருந்த சுந்தரானந்தரை தனது வீட்டிற்கு அழைத்தார், அவர் நான் உன் கணவரல்ல என கூறி கெஞ்சி வேண்டிப்பார்த்தார், விட வில்லை, எனவே ஊர் கிராமத்தாரிடம் புகார் செய்து தனது கணவனை தன்னுடன் வாழ வேண்டினாள் ஆனாலும், அவர் " நாம் இணைந்து வாழும் வாய்ப்பில்லை பெண்ணே " என்று சொல்லி தன் வழியே பயணத்தைத் தொடர்ந்தார், அன்றையே இரவுப் பொழுதை மடமொன்றில் கழித்தவர் மறநாள் தமது உடலை மறைத்து வைத்திருந்த இடத்தில் தன் உடல் இல்லாதது கண்டு திகப்பு அடைந்தவராய் எல்லாம் அவன் ( இறைவன் ) செயல் என்று எண்ணி மூலனின் உடலுடனே பயணத்தை தொடர்ந்தார், அது முதல் சுந்தரானந்தர் மூலரானார். தமமுடைய வாழ்க்கை நெடுகிலும் இரவு பக்ல் பாராது தியானம் புரிந்தார், மூவாயிரம் பாடல்கள் பாடியுள்ளார். இந்த மூவாயிரம் பாடல்கள் ஒன்பது தந்திரங்களை கொண்டது. தந்திரமென்றால் இங்கு உடபிரிவு என்றும் பயன்படுத்தப்படுகிறது. ஒருவருடைய உணர்வை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் சக்தியை எழுத்தில் ஒலியில் கொண்டது மந்திரம், அந்த சக்தி நூலின் ஒவ்வொரு பாடலிலும் உள்ளது தந்திரம், மந்திரம், யந்திரம் என்கிற மூவவை சாதனங்களைக் கொண்ட நூலிது. மூவாயிரம் மந்திரங்களை செய்ததோடு இன்றி, ஒன்பது தந்திரமாகவும், முப்பது உபதேசமாகவும் கூறியுள்ளார். " மூலன் உரைசெய்த மூவாயிரம் தமிழ் மூலன் உரைசெய்த முந்நூறு மந்திரம் மூலன் உரைசெய்த முப்பது உபதேசம் மூலன் உரைசெய்த மூன்றும் ஒன்றுமே" என தனது நூலின் அடக்கத்தையும் தனது குறிப்பாலே உணர்த்தியுள்ளார். எல்லா சித்தர்களும் பாவப்ப்ட்ட உடல் எனவும், பிற்பறுக்க நீக்க உடலை விலக்கி ஆன்மாவை மட்டும் போற்றினர், ஆனால் திருமூலர் உடம்பை இகழும் போக்கை கடுமையாக எதிர்த்த முதல்நபர், " உடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெயஙஞ்ஞ ானம் சேரவு மாட்டார் உடம்பை வளர்க்கு முபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே " என்று உடம்பில்லா உயிர் என்னவாகும்? உடம்பில்லா விடில் வாழ்க்கை என்னவாகும் என்றெல்லாம் கேள்வி எழுப்பி விடை தந்தவர் திருமூலர். இது போன்று ஆகப்பொருளை தமிழில் செய்தார் என்தற்கு அவர் வாக்கில் சான்று உண்டு அதுமட்டுமன்றி இன்றைய அறிவியலையும், விஞ்ஞான அஞ்ஞானத்தினையும் தனது பாடல்வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார், ஆகம விளகத்தில் உடமபே கோயிலாகவும் , சிவன் எங்கும் அகண்டமாய் வியபித்திருக்கிறான் என்பதற்கு " எங்கும் திருமேனி எங்கும் சிவசக்தி " எனவும், அன்பே சிவம் என்பதற்கு " அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் " என்றும் அன்பின் வழியே பேரின்பம் நுகரும் உத்தியை அளத்தவர், மனித குலம் என்றென்றும் நிலைவில் வைத்து போற்றத்தக்கவர் திருமூலர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக