சனி, 31 மே, 2014


திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 9 கள்ளும் சிவானந்த தேனும் கள்ளை உண்டால் அறிவு மயங்கும், சிவானந்த தேன் பருகினால் சிந்தை தெளிவாகும், ஆனால் உலக மக்களோ கள்ளுண்டு உணர்விழக்கவே விரும்புகின்றனர். இதனை திருமூலர் " கழுநீர் பசுப்பெறில் கயந்தொறும் தேரா.............. ) என்ற பாடல் வழியாக " பசுவினம் கழுநீர் உண்டு பசியாறும், அது பழக்கமாகிப் பின் தாமமெடுத்தாலும், குளத்து நீரைத தேடி அவை செல்வதில்லை. சிவானந்த தேன் பருகிக் களிப்பவர்கள் சிந்தையைக் கலங்க செய்யும் மதுவகையில் நாட்டம் வைப்பதில்லை தாம் கொண்ட நெறியில் நிற்பதையே அவர்கள் விரும்புவர்", என்கிறார்,சிவானந்தத் தேன் அன்பு, அறிவு, ஆற்றல்களை விளக்கம் பெறச் செய்யும். கள்ளோ உடலையும் உணர்வையும் சுருக்கும் போதிய அளவு கழுநீர் பருகிய பசு, குளத்து நீரைத் தேடிப் போகாது, வாழ்வை வளப்படுத்த விரும்புகிறவர் சிவானந்தத் தேன் பருகக் காத்திருப்பாரேயின்றி கள்ளுண்டு களிக்க மாட்டார், அறமுறையும் அருள்நெறியும் இல்லாமல் பாவத்தில் உழல்பவர்களே கள்ளின் மீது நாட்டம் வைப்பார்கள் என்கிறார் திருமூலர், தீய செயல்களில் சிந்தை வைப்பவர்தாம் காமத்தையும் கள்ளையும் வடிகாலாய் கொள்வது , ஆனால் மேலோர்களோ இறைவனின் திருவடி பற்றி ஆன்ந்தத் தேன்பருகுவர், அதற்கான் பாடல் : காமமும் கள்ளும் கலகட்கேயாகும் ........................ ) கள்ளுண்டு களிப்பவர் கண்ணேதிரே தெரிவது சிற்றின்பம் தான், கள்ளானது கருத்தையழிக்கும் மெய்ப் பொருளை காணவொட்டாமல் தடுக்கும் கள்ளுண்பவர் தீராப் பெருந்துன்பம் அடையவர், கலக்கமுற்று கவலைக்குள்ளாவர், பாடல் : மயங்கும் தியங்கும் கள்வாய்மை அழிக்கும் ................................ ) கள்ளில் மோகம் வைப்பவர்கள் மூடர்கள் என்கிறார், " இராப்பகல் அற்ற இடத்தே இருந்து பராக்கற ஆனந்தத் தேறல் பருகார் இராப்பகல் அற்ற இறையடி இன்பத்து இராப்பகல் மாயை இரண்டிடத் தேனே" என்பது திருமந்திரம் " மறப்பும் நினைப்பும் பாவமும் புண்ணியமும் இராப்பகல் என உருவகிக்கபட்டது, இறைவனின் திருவளோ இராப்பகலற்ற இடத்தே உள்ளுணர்வாய் திகழ்வது , கள்ளுண்டு களிப்பவர் சிவானந்த தேனின் இனிமையை உணர்வதில்லை, இறைவனின் திருவடி வழங்கும் இணையற்ற இன்பத்தை அவர்கள் உணரவேண்டும், " இது பாடலின் கருத்து. நிலையான இன்பம் எதுவென்று உணரவேண்டும், உண்மையான ஞானத்தில் ஆனந்தம் பெறவேண்டும், கள் என்பது வெறியூட்டி உணர்வை மறைக்கும் பொருள் என்கிறார் வள்ளுவர் அறிவுடையோர் உங்களை மனிதனாய் மதிக்க வேண்டும் என்று விரும்பினால் கள்ளை விலக்குங்கள் எனக்கு கள் மீதுதான் விருப்பம் என்பீர்கள்ாயின் விலங்கினும் கேடாய் இருந்து விட்டு போங்கள் " என்கிறது குறள் "உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரால் எண்ணப்பட வேண்டா தார்,"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக