ஞாயிறு, 18 மே, 2014

திருமூலரும் திருமந்திரமும் உபதேசம் 4 கொல்லாமை


திருமூலரும் திருமந்திரமும் உபதேசம் 4 கொல்லாமை துடிக்கத் துடிக்க உயிர்களை கொல்வது பாவம், உடலின்றி உயிரைப்பறிப்பது கொலை, ஈ,எறும்புக்கு செய்கிற தீங்கும் கொலைதான், கொடியில் இருந்து பூக்களை பறிப்பது இரக்கமற்ற செய்கைதான் என்கிறார் திருமூலர் "பற்றுஆய ந்ற்குரு பூசைக்கும் பன்மலர் மற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர் நற்றார் நடுக்கற்ற தீபமும் சித்தமும் உற்று ஆரும் ஆவி அமர்ந்து இடமே உச்சியே." சிற்றுயிரைக் கொல்லாதிருப்பதே சிவகுருவிற்கு உகந்த மாலையாகும், பொறுமை இரக்கம், நல்லறிவு மெய்த்தவம், அன்பு புலனடக்கம், இவை ஒளிபொருந்திய மலர்களாகும், அசைவற்ற மனமே சிறந்த தீபமாகும், இவற்றை கொண்டு செய்வதே உயர்ந்த வழிபாடு என்பது இப்பாடலின் பொருள். திருவள்ளுவரும் கொல்லாமை அதிகாரத்தில் இப்படி கூறுகின்றார், "அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும்" உயிர்களுக்கு தீங்கு செய்யாமல் இருங்கள், அதுவே முழுமையான அறம், நூறு தீயசெயல்களின் பலனை உயிர்க்கொலை என்கிற ஒரு பாவமே தந்து விடும், உங்கள் நல்வினைப் பயன்கள் அனைததையும் அது அழித்து விடும், அத்தகைய கொடுஞ் செயலைச் செய்யாதிருங்கள் என்கிறார் வள்ளுவர், மனிதனுக்கும் மிருகத்திற்கும் உள்ள வேறுபாடு குணம் செயல் இவற்றால் அமைவதுதான், " கொல்லென்றம், எறியென்றும், குத்து யென்றும் மிருகத்தைப்போல் வன்முறையை மேற்கொள்ளும் மனிதர்களை நரகத்தில் தள்ளு என்பனராம் எமதூதர்கள், இதன் பாடல் : கொல்லிடு, குத்தென்ற கூறிய மாக்களை.............) எவ்வுயிரையும் கொல்லாதிரு, அதுவே பேரின்ப வீடு பேற்றை பெற்றுத்தரும் வழி என்கிறார் வள்ளுவர் " நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றம் கொல்லாமை சூழும் நெறி " என்பது தான் அந்த குறள், பஞ்சமா பாதகங்கள் தவிர்க்கப்பட வேண்டியவை என்பர் பெரியோர், தர்ம சாஷ்திரங்களும் அதே கருத்தை வலியுறுத்தும் பாலம் என்பது அக்கிரமம் , அது அடுத்தவருக்கு ஒருவர் செய்யும் அநீதி, கொடியவர் செய்யும் ஒழுங்கற்ற காரியம், களவு , கள்ளுண்ணல், குருநிந்தை, கொலை, பொய் இவை பஞ்சாமாபாதகம் என்கிறது அற நூல்கள் புலால் உண்பதும் கொலையே என்கிறார் திருமூலர் "கொலையே களவு கள்காமம் பொய்கூறல் மலைவான பாதகமாம் அவை நீக்கித் தலையாம் சிவனடி சார்ந்து இன்பம் சார்ந்தோருகக்கு இலையாம் இவை ஞனானநதத்து இருத்தலே " ஐம்பெரும் பாவங்களை விலக்கி, இறைவனின் திருவடியைச் சிரமீது சூடியவர்கள் துன்பங்ள் நீங்கப் பெற்று இன்பத்தில் திளைத்திருப்பர் என்பது இதன் பொருள் புலால் உண்பது மட்டுமா பாவம் புலால் விரும்பாதவரை வற்புறத்தி உண்ணச் செய்வதும் கொடுமை என்கிறார் திருமூலர் திருச்சிற்றம்பலம் - ஓம் நமசிவாய ஓம் இன்னும் பல காண : http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://vpoompalani05.blogspot.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக