புதன், 7 மே, 2014

அறத்தின் உயர்வு


அறத்தின் உயர்வு அறத்தின் உயர்வுStandard அறத்தின் உயர்வு உயிருக்கு துணையாய் வருவது அறம் என்ற தருமம், ஒருவனின் புகழுக்கும் உறுதுணையாய் இருப்பதும் அதுவே, ” அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான பொருள்வைப் பழி” பொருளறறவரது குணங்களை அழிக்கும் பசியை நீக்குக, பொருள் பெற்றவன் தனக்கு பின்வந்து உதவ சேமித்து வைக்கும் இடம் அறமே ஆகும், என்கிறார் வள்ளுவர் ” ஈட்டிய ஒண்பொருளும் இல்ஒழியும் சுற்றத்தார் காட்டுவாய் நேரே கலுழ்ந்து ஒழிவர் – மூட்டும் எரியில் உடம்பு ஒழியும் ஈர்ங்குன்ற நாட தெரியின் அறமே துணை ” – - – — – அறநெறிச்சாரம் நாம் பாடுபட்டுத் தேடிய சிறந்த செல்வம் வீட்டிலேயே தங்கிவிடும், உற்றார் உறவினர் சுடுகாடு வரை அழுது கொண்டே வந்து பின் நீங்குவர், சுடுகாட்டில் மூட்டப்படுகின்ற தீ யில் உடல் அழியும் ஆராய்ந்து பார்த்தால் என்றும் அழியாமல் உயிருக்கு துணையாய் வருவது அறம் ஒன்றே, “வீழ்நாள் படா அமை நன்றுஆற்றின் அஃதுஒருவன் வாழ்நாள் வழிஅடைக்கும் கல் ” திருக்குறள் ஒவ்வொரு நாளும் அறச்செயல்கள் இடைவிடாது செய்து வாழ்நாட்களை பயன் உடைய நாட்களாக ஆக்கிக் கொள்ள வேண்டும், இதுவே பிறவியாகிய துன்பத்தை நீக்கி பேரின்ப வாழ்விற்கு வழிவகுக்கும். பலரிடம் நிறைந்த செல்வம் இருக்கும் ஆனால் தருமம் செய்யமாட்டார்கள் அந்த செல்வம் நல்வழியில் வந்ததில்லை, ஆதலால் அச்செல்வம் நல்லனவற்றுக்கு பயன்படவில்லை என உணர்த்துகிறது, திருச்சிற்றம்பலம் – ஓம் நமசிவாயம் - தகவல் : தமிழ்வேதம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக