திங்கள், 5 மே, 2014

கடவுளை மறவாதிருக்க எளிய வழியும் பயனும்


கடவுளை மறவாதிருக்க எளிய வழியும் பயனும் மனிதர்களாக பிறந்த நமக்கு முதலில் கடவுள் என்கிற ஒருவர் இருக்கின்றார் என்கிற எண்ணம் வேண்டும், ஒரிடத்தில் புகை வருகிறது என்பதை தொலைவில் இருந்தே பார்த்து அங்கு நெருப்பு எரிகிறது என்பதை உணர்கிறோம், கண்ட புகையைக் கொண்டு காணாத நெருப்பை நிர்ணயம் செய்கிறோம், இதைப்போல உலகம் மிகச் சரியாக இயங்குவதிலிருந்து இதனை இயக்குவதற்கு வல்லமை படைத்த ஒருவர் இருக்க வேண்டும் என்கிற எண்ணம் நமக்கு வரவேண்டும், உலகில் எண்ணாயிரம் கோடி உயிரினங்கள் ( சீவராசிகள் ) உள்ளதாக கூறப்படுகிறது. அவற்றில் மனிதனும் அடங்குவான் மற்ற சீவராசிகளுக்கு இல்லாத பேசும் ஆற்றலும், ஆறாவது அறிவும்மனிதன் பெற்றுள்ளான். இப்படி சிந்திக்கும் மனம் உடைய மனிதனுக்கும் மற்ற சீவராசிகளுக்கும் ஒரு எல்லைக்கல் உண்டு. ஒரு ஊருக்கும் மற்றோர் ஊருக்கும் எல்லைக்கல் உண்டு இதுபோல மாவட்ட்ம் , மாநிலம் நாடு எல்லைக்கல் உண்டு, அதுபோலவே மனிதனுக்கும் மற்ற சீவராசிகளுக்கும் உள்ள எல்லைக்கல் ( வேறுபாடு) " இறைவழிபாடு " என்பதே ஆகும், தற்காலத்தில் மனிதன் சாப்பிடுவதற்கு கூட நேரமில்லாமல் அலைகிறான், இவன் கடவுளை நினைப்பது எப்படி? அதிலும் மறவாமல் துதித்தல் வேண்டும் என்கிறார்கள், கடவுளை க்ண்ட அருளாளர்கள் , இறைவரை மறவாமலிருப்பதற்கு அருள்புரிபவர் இறைவர என்கிறார் பட்டினத்து அடிகள், " மறவா மனத்து மாசறும் அடியார்க்கு அருள் கரந்தளிக்கும் அற்புதக் கூத்தன்" கோவில் நான்மணிமாலை " காட்டூர் கடலே கடம்பூர் மலையே கானப்பேரூராய் கோட்டூர் கொழுந்தே அழுந்தூர் அரசே கொழுநற் கொலலேறே பாட்டூர் பலரும் பரவப்படுவாய் பனங்காட்டூரானே மாட்டூர் அறவா மறவாது உன்னை பாடப் பணியாயே," சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாட்டினை நன்குணர்ந்த பலராலும் பாட்டுக்களால் போற்றி வணங்கப்படுபவரே, எருதை வாகனமாகக் கொண்ட அறமுதல்வரே, அடியேன்தங்களை மறவாமல் பாடுமாறு அருள் புரியுங்கள் என்கிறார், இதுபோன்று மறக்கின்ற தன்மையை இயல்பாக உடைய நம்முடைய மனத்தால் மறவாமல் இருக்க பெற்ற தாய்தனை மக மறந்தாலும் பிள்ளையை பெறும் தாய் மறந்தாலும் உற்ற தேகத்தை உயிர்மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும் கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் கண்கள் நின்றமைபபது மறந்தாலும் நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே " என்கிறார் சம்பந்தர் முதலில் இறைவரை நம் உள்ளத்தில் குடிகொள்ளச் செய்ய வேண்டும், அப்படி செய்து விட்டால் நாம் நினையாது இருந்தாலும் இறைவர் நினைக்க வைப்பார், அவர் நினைக்கச் செய்தால் நம்மால் நினைக்காமல் இருக்க முடியாது என்கிறார் திருவிசைப்பா பாடிய " வேணாட்டடிகள்" ஒரு நேரத்தில் மறந்திருந்தாலும், கன்றை பிரிந்த பசுவைப்போல் கதறச் செய்வார் என்கிறார் இப்பாடலில் " நின்றும் இருந்துங் கிடந்தும் எழுந்து தொழும் தொழும்பனேன் ஒன்றி ஒருகால் நினையாது இருந்தாலும் இருக்கவொட்டாய் கன்றுபிரி கற்றாப்போல் கதறுவித்தி வரவுநில்லாய் நன்றிதுவோ திருததில்லை நடமபயிலும் நம்பானே, " இறைவரை நாம் மறவாமலிருக்க வேண்டும் என்றால் அவர் உள்ளிருந்து நினைப்பிக்க வேண்டும், அவர் நினைப்பித்தால் நாம் நினையாதிருக்க மாட்டோம் என்று அறிகிறோம், இதைதான் மாணிக்க வாசகர் "அவன் அருளாலே அவன்தாள் வணங்கி " எனப்ாடியுள்ளார். அவனருளை எப்படி கிடைக்க செய்வது " சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்" என்னும் வரியை கொள்ள வேண்டும், முதலில் இறைவரை நம் மனத்தில் குடிகொள்ள செய்ய வேண்டும், இவ்வாறு இறைவர் நம்மனத்தில் குடிகொள்ளச் செய்த நாவுக்கரசர் பாடலைக்காண்போம், " சகமலாது அடிமையில்லை தானலால் துணையுமில்லை நகமெலாம் தேயக்கையால் நாண்மலர் தொழுது தூவி முகமெலாம் கண்ணீர்மல்க முன்பணிந்து ஏத்தும் தொண்டர் அகமலால் கோயில் இல்லை ஐயன் ஐயாறனார்க்கே," நமமெலாம் தேய கைகளால் அன்றலர்ந்த மலர்களை கொய்து, தொடுத்து முகமெல்லாம் கண்ணீர் மல்க, முன்பணிந்து வணங்கும் தொண்டர் மனமே இறைவர தங்கும் கோயிலாகும், இதனைத்தான் சேக்கிழார் " கைத்திருத்தொண்டு செய்யும் கடப்பாடுடையவர் அடியவர்" என்று கூறியுள்ளார், இறைமையை நினைந்து கண்ணீர் மல்க வேண்டும் என்கிறார் நாவுக்கரசர், தேவர்கள், மூவர்கள், இரிசிகள் ஆகியோருக்கு எட்டாத தன்மையுடையவரும், போற்றலும், பேரறிவும் உடையவரும், தம்மால் தொழப்படுவார் யாரும் இல்லாதவரும், வாக்கு மனங்களுக்கு எட்டாதவரும், எங்கும் நிறைந்தவரும், ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெருஞ் சோதியாய் விளங்குகின்ற முழுமுதற் பொருளை; மல ஞ்சேரும் ஒனபது வாயிற் குடிலும் பொருந்திய உடலை உடைய நம்முடைய மனத்திலே குடிகொள்ளச் செய்வது என்பது இரண்டு ரூபாய் அர்ச்சனை சீட்டில் முடிந்துவிடுமா? " நாடும் நகரமும் நல்திருக்கோயிலும் தேடித் திரிந்து சிவபெருமான் என்று பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின் கூடிய நெஞ்சத்துக் கோயிலாய்க் கொள்வனே " திருமூலர் திருக்கோயில் தோறும் சென்று பாடி பணிய வேண்டும் என்கிறார் திருமூலர். மறக்கும் இயல்புடைய நம்முடைய மனத்தினை மாற்றி உயிரை வற்புறுத்தி அன்றலர்ந்த மலர்களைப் பறித்துக் கொண்டு இறைவனை வணங்குங்கள் என்கிறார் ஞானசம்பந்தர் " மறக்கும் மனத்தினை மாற்றியெம் ஆவியை வற்புறுத்திப் பிறப்பில் பெருமான் திருவடிக்கீழ் பிழையாத வண்ணம் பறித்த மலர்கொடு வந்துமை யேத்தும் பணிணடியோம், " என்கிறார். இப்படி யெல்லாம் கைத்திருத் தொண்டுகள் செய்து சிவபெருமானை நம் மனத்தில் குடிகொள்ளச் செய்தல் வேண்டும், அப்படி செய்துவிட்டால் அவனை நாம் மறந்தாலும் அவரையே மறவாமல் நினைக்க செய்வார் இறைவர், அப்படி மறவாமல் வாழ்த்தி ஏத்தும் அடியவர்க்கு சிவபெருமானார் அருளும் நலன்கள் பலப்பலவாகும், " நீரார் சடையானை நித்தல் ஏத்துவார் தீரா நோய் எல்லாம் தீர்த்தல் திண்ணமே " என்கிறார் ஞானசம்பந்தர் மறவாத அன்பர்களுக்கு பிறப்பும் இறப்பும் இல்லாத " வாராத செல்வம் " வரும் என்கிறார் நாவுக்கரசர் சிவபெருமானுடைய திருவடியை வணங்குவதால் கிடைக்கும் சிவபுண்ணியமே சிறந்த செலவமாகும், இப்பிறவியில் உடலிற்கு வரக்கூடிய கொடிய நோய்களும் நீங்கும் இன்பம் கிடைக்கும் , எல்லா மனிதார்களும் விரும்பித் தேடும் இன்பமே , இன்பத்தைத் தேடுவதிலேயே துன்பத்தை அடைகிறார்கள், இன்பத்தைத் தேடி வாழ்நாள் முழுவதும் அலைந்து நிலையான இன்பத்தை பெறாமல் அல்லல் பட்டு அலைந்து துன்ப வெளளத்தில் முழ்கி கிடக்கின்றனர். இன்பம் என்று பேசினாலும், கேட்டாலும், கண்டாலும், அவையெல்லாம் உண்மையான இன்பமல்ல. அம்பலவாணன் திருவடியை ஏத்தும்இன்பம் தான் உண்மையான நிலையான இன்பம் இந்த இன்பத்தை பெற்று என்றும் நலமாக வாழலாம், திருச்சிற்றம்பலம் - ஓம் நமச்சிவாயம் கருத்து தொகுப்பு : தமிழ்வேதம் http:// poomalai.blogspot.com, poompalani.blogspot.com, deiveegamkarthicraja.blogspot.com, vpoompalani05@wordpress.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக