திருமூலரும் திருமந்திரமும் உபதேசம் -5
பிறன்மனை விரும்பாப் பேராண்மை
பேராண்மை என்பது வீரம் பேராண்மை மிக்கவர்கள் அரிய செயல்களை செய்வார்கள், அடுத்தவன் மனைவியை ஏறெடுத்தும் பாராமல், அவளுடைய அழகில் மனதைப் பறிகொடுக்காமல் இருப்பதும் பேராண்மை, ஆண்மைக்கு அழகு வலிமை மட்டும் அல்ல, மனவலிமையும் தான், மனம் சலனமடைந்தாலுமும், சபலப்பட்டாலும், அது நல்லதல்ல. அடுத்தவன் மனைவி மீது ஆசை வைப்பவர் தன் செயலின் விளைவுகளை ஆராய்வதில்லை, அவன் அழகான பெண்டாட்டி வீட்டில் இருக்க, அக்கரைப் பச்சையை நாடி போகிறான், அவனுடைய நிலைகறித்து திருமூலர் கூறுவது
" அவன் முட்டாள தன் வீட்டுத் தோட்டத்தில் காய்த்திருக்கும் பலாப்பழத்தைச் சுவைத்து மகிழாமல் காட்டில் பழுத்த ஈச்சம் பழத்தை பெறத் துன்பப்படுகிறான்,
"ஆத்த மனையாள் அகத்தே இருக்க
காத்த மனையாளைக் காமுறும் காளையர்
காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல்
ஈச்சம் பழத்துக்கு இடருற்ற வாறே," என்கிறார்,
காமம் கண்ணை மறைத்து, கருத்தையும் மறக்கிறது, அயலான் மனைவியை விரும்பும் காரியம் அறியாமையால் நிகழ்வது " தன் வீட்டில் கிளிபோல் பெண்டாட்டி இருந்தாலும் குருங்குபோல ைவ்ப்பாட்டி வைத்துள்ளான் என்பது கிராமத்து பழமொழி "தன் செயலின் விளைவறிந்தால் அவன் தவறு செய்யத் துணியமாட்டான், திருமூலர் மேலுமு கூறகிறார், சிலர் இனித்திடும் மாங்கனியை இருட்டறையில் ஒளித்துவிட்டு, தகுதியற்ற புளியங்கனிக்காக மரமேறி உயிர் வருத்தம் கொள்கிறார்கள், அருமையான மனைவி வீட்டில் இருக்க மாற்றான் மனைவியை தேடி செல்பவரின் நிலையிது, கெடுவது இவர் மட்டுமா? இவருடைய குடும்பமுந்தான் என்கிறார், இதற்கான பாடல் : திருத்தி வளர்த்ததோர் தேமாங்கனியை ........................... )
பேராண்மையுடையவன் பெண்ணின் அழகில் பிரமமிப்பதில்லை, அவளிடத்தில் பூவிருக்கும், காயிருக்கும் ,கனியிருக்கும், ஆனால் அவனுடைய கண்களுக்கோ, அவை எட்டிக்காய்தான், அந்தக் காய்கள் பழுத்தாலும் அழகிய நிறத்துடன் கவர்ச்சி காட்டி அழைத்தாலும், அவனுடைய மனம் அவற்றில் ஈடுபடாது, எட்டிப்பழம் உயிருக்கு ஆபத்தை உண்டுபண்ணும் என்பதை அவன் அறிவான், " ஏ, மனக்குரங்கே நீ அடங்கு "என்ற தன் மனதை கடிந்து கொள்வான்" என்கிறார் திருமூலர், பாடல்: இலைநில ஆயினும் எட்டிப் பழுத்தால் ......................... )
கொழுவிய மார்பகம் படைத்த பெண்ணின் கவர்ச்சியில் அவர்தம் புன்னகையில் மனஉறுதியை இழந்து விடக்கூடாது, அவர்பால் செல்லும் மனதை அடக்கி நன்னெறியில் நடத்தல் வேண்டும் என்கிறது திருமந்திரம் "பிறன்னை நயத்தல் பெருந்தீது " என்பதை வெகு அழகாய் சொல்கிறது நாலடியார்,
" புக்கஇடத் தச்சம் போதருமு போதச்சந்
துய்ககும் இடத்தச்சம் தோன்றாமல் காப்பச்சம்
எக்காலும் அச்சம் தருமால் எவன்கொலோ
உட்கான் பிறனில் புகல்"
அடுத்தவன் வீட்டிக்குள் நுழையும் போதும் நடுக்கம், அங்கிருந்து வெளியேறும் போதும் நடுக்கம், அயலான் மனைவியை அனுபவிக்கம போதும்அச்சம், ஒவ்வொரு கண்த்திலும் அஞ்சி நடுங்கும் படி இருக்கும் யார் பார்த்திடுவாரோ எங்கே மாட்டிக் கெர்ணடு விடுவோமோ " என்ற கருத்தைக்கூறுகிறது இப்பாடல்
தேவர்களுக்கெல்லாம் தலைவன் தான் இந்திரன் ஆனால் கவுதம முனிவரின் மனைவி அகலிகை மீது ஆசைகொண்டு அறிவிழந்தான், அவன் முனிவர அதிகாலையில் நீராடச் செல்லும் வழக்கத்தை இந்திரன் அறிவான், நடுச்சாமத்தில் சேவலைப்போல் கூவி வஞ்சனையில் ஈடுபட்டு முனிவர் ஆசிரமத்தில் இருந்து வெளிச் சென்றதும் அகலிகையுடன் புணர்ச்சி நடத்துகிறான், ஆனால் அங்கிருந்து வெளியேறு முன் கவுதமரிடம் அகப்பட்டு அவருடைய சாபத்திற்குள்ளாகிறான், அவன் அடைந்த சுகத்தை விட அவனுடைய அச்சம் பெரியது, அவனுக்கு கிடைத்த சாபம் அதைவிட பெரியது,
ஒழுக்த்தில் சிறந்தவரே ஆண்மை மிக்கவர் அவர் காம மயக்த்தில் தனக்கு உரிமையில்லாத பெண்ணுடன் உறவு கொள்ளத் துடிப்பதில்லை, அடுத்தவன் மனைவியை விரும்புவது பேதை யின் செயல் என்கிறார் வள்ளுவர், அது அறத்தின் எல்லைக்கு அப்பாற்பட்ட காரியம் - பாவம் ஆகும், அவர் அறநெறியில் இருந்து விலகி, பொருளையும் இழக்கிறார், அதைவிட பெரிதான கவுரவத்தையுந்தான், இயல்பான புண்ர்ச்சி யில்உள்ள இன்பமும் அவருக்கு கிடைப்பதில்லை அதனால் தான் -
"அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்" என்கிறது திருக்குறள்
"பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறன்ஒன்றோ ஆன்ற ஒழுக்கு" என்கிறார் வள்ளுவர்
காமத்தை அடக்குதல் பேராண்மை, பிறன்மனை நோக்காமை பிறருக்கு சிறந்த அறமெனலாம், சான்றோருக்கோ அதுவே இயல்பான ஒழுக்கம் என்பது கருத்து இக்கூற்றின் படி பிறன் மனை நோக்கா ஒழுக்கத்தை கடைபிடித்து சான்றோர் ஆகுவோம்.
திருச்சிற்றம்பலம் - ஓம் நமசிவாயம் ஓம்
மேலும் பல காண:
http://poompalani.weebly.com
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக