அத்திரி மகரிஷி மலை
அத்திரி மகரிஷி மலை பயணம் செல்ல தென்காசியிலிருந்து ஆழ்வார்குறிச்சி சென்றால் அங்கிருந்து மினிபஸ் கடனாநதி அணைக்கு இரண்டு கிலோமீட்டர் முன்பு வரை செல்கிறது. அங்கிருந்து நடந்து செல்லவேண்டும், அல்லது ஆழ்வார்குறிச்சியிலிருந்து ஆட்டோவசதி உள்ளது. ஆட்டோவில் சென்றால் நபர் ஒன்றுக்கு 25 ரூபாய் பெற்றுக்கொண்டு 5 அல்லது 6 பேரை ஏற்றிக்கொண்டு செல்கிறார்கள். ஆட்டோவைபேசினால் 150 ரூபாய் அல்லது 200 ரூபாய் என பலிக்கும் அளவுக்கு பெற்றுக்கொண்டு கடனாநதி அணைக்கட்டு வரை கொண்டுசெல்கிறார்கள். இதை ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி கவணித்து கட்டணத்தை முறைப்படித்தினால் நன்றாக இருக்கும். மேலும் பத்தர்கள் திரும்பி வருவதற்க்கு, போகும் பொழுதே ஆட்டோ டிரைவர் போன் நம்பரை வாங்கிவைத்துக்கொண்டால் நாம் மலை இறங்க ஆரம்பிக்கும் பொழுது போன்செய்து அழைத்தால் ஆட்டோ நமக்காக அணையில் வந்து காத்திருக்கிறார்கள். மலைமேல் விசேசநாட்களில் மட்டுமே மதியம் அன்னதான உணவு கிடைக்கும், காலை உணவை ஆழ்வார் குறிச்சியில் முடித்துக்கொள்ளவேண்டும், அல்லது பார்சல் வாங்கி கொண்டு அணைக்கட்டில் அல்லது மலைக்குள் சாப்பிட்டுக் கொள்ளலாம், ஆனால் மலைக்குள் பிளாஸ்டிக்பைகள் அனுமதி கண்டிப்பாக இல்லை எனவே தகுந்தாற்ப்போல் செய்துகொள்ளவேண்டும். அணைகட்டில் வாகனத்திலிருந்து இறங்கியவுடன் பெரிய புலியின் படத்தை போட்டு ப்லிகளின் சரணாலயம் என்றும் நம்மை விழிப்புடன் பயணம் செல்ல அறிவுறுத்துகிறார்கள். மேலும் பயணத்தின் தொடக்கத்திலேயே வனத்துறையினர் நம்மை சோதனை செய்த பின்பே பயணத்திற்க்கு ஒரு நோட்டில் கையெழுத்தை பெற்றுக்கொண்டு அனுமதிக்கிறார்கள்.
கடனா நதி நீர்த்தேக்கப்பகுதியில் தண்ணீர் குறைவாக ஊள்ளதால் மக்கள் அதை குறுக்கு பாதையாக பயண்படுத்துகிறார்கள்.
மலைக்குள் நடந்து செல்லும் குறுகலான பாதை கோவில் வரை பாறைகள் இல்லாத பாதை நடப்பதற்க்கு எளிதாக உள்ளது. கோவில் அருகில் செல்லும் பொழுது மட்டுமே ஒரு பதினைந்து நிமிட ஏற்றமுள்ள பாதை உள்ளது. அந்த ஏற்றமும் பாறைகள் இல்லாத மண்பாதையாகவே உள்ளது, எனவே மழை காலங்களில் வழுக்கும்படியாக உள்ளது. அதன் அருகில் பெரியபாறை ஒன்றில் குகை ஒன்று உள்ளது. அதனுள் சித்தர்கள் தவமிருப்பதாக கூறுகிறார்கள். எனவே பக்தர்கள் அந்த குகையுள் தீபமேற்றி வழிபடுகிறார்கள்.
கருவறையின் முன் மண்டபம், அதன் வாசல் நிலை போல் இருபுறமும் புளியமரங்கள் வளர்ந்தோங்கி நிற்கின்றன
அருள்மிகு அனுசுயாதேவி அருள்மிகு அத்திரிமகரிஷி இருவரும் கோவில் கருவறையில் லிங்கவடிவில் காட்சியளிக்கின்றனர். இங்கு அனுசூயாதேவி அம்மன் அட்டமாசித்திகளை குறிக்கும்படியாக எட்டுபட்டையான லிங்க வடிவில் உள்ளார்.அதன் முன்பக்க பட்டையில் திரிசூலமும் செதுக்கப்பட்டுள்ளது. இந்த லிங்க அமைப்பு வேறெங்கிலும் இல்லை. இதை தரிசிக்க சுவாமிகள் அலங்காரத்தில் இல்லாதபோது மட்டுமே முடியும்.அனுசுயா தேவியும், அத்திரி மகரிஷியும் அருள் பாலிக்கிற கோயில், யாரிவர்கள்? புராணத்திற்குள் நுழைவுதற்கு முன், ஒரு செய்தி அவர்கள் தமிழகத்து ரிஷிகள். நமது ''சுசீந்திரம்'' அத்திரி மகரிஷியின் பூர்வீகம் என்கிறார்கள்
அருள்மிகு கங்காதேவி சிறிய கிணற்றினுள் அமைக்கப்பட்டுள்ளார். கிணற்று அடிபகுதியிலிருந்து நீரூற்று புனித தீர்த்தமாக உற்பத்தியாகி வருகிறது, இந்த தீர்த்தத்தில் குளிப்பதாலும், குடிப்பதாலும் உடலிலுள்ள வியாதிகள் நீங்கி குணமடைகிறார்கள்.
அகத்திய முனியும், அத்திரி முனியும்
அத்திரி மகரிஷி தியானபீடம், அத்திரி மகரிஷி, அனுசுயாதேவி புராணம். ஒரு சமயம் முப்பெரும்தேவியரான சரஸ்வதி, பராசக்தி, லட்சுமி மூவருக்கும் கற்பில் சிறந்தவர் யாறென கேள்வி எழுந்தது. சந்தேகத்தை தீர்க்க நாரதமுனியிடம் வினாவினார்கள், அதற்கு நாரதர் அனுஷயா தேவியை காட்டினார் அதனால் தேவியர் மூவருக்கும் தங்களை கூறாது அனுசுயாதேவியை கூறியதால். அனுசுயா தேவி மேல் பொறாமையும், கோபமும் கொண்டனர், அதை சோதிக்க தங்கள் நாயகர்களை, அனுஷ்யா தேவி வசித்து வந்த குடிசைக்கு அனுப்பி வைத்தார்கள். மனைவி சொல்லைத் தட்டாத மூவரும் துறவி வேடம்பூண்டு கதவைத் தட்டினர். அந்த வேளை, அத்திரி மகரிஷி நீராடச் சென்றிருந்தார். அனுஷ்யா தேவி, வந்தவர்களை வரவேற்றார். வந்தவர்கள் பசி என்றனர். பசிப்பிணி தீர்த்தலை கடமையாகக் கொண்டிருந்த ரிஷி பத்தினி உணவு படைக்கத் தயாரானார். சாப்பிடும் முன்பு, மூவரும் ஒரு நிபந்தனை என்றனர். ‘என்ன?’ என்றார் அனுசுயாதேவி, ஏற்ப்பாயா? ஏற்றபின் மீறக்கூடாது என்று அடுத்தடுத்துக் கேட்டனர். ‘சரி’ என்றார் ரிஷி தேவி. நிர்வாண நிலையில் உணவு படையுங்கள்’ என்றனர். தன் தவ வலிமையால் வந்தவர் யாரெனவும், வந்த நோக்கமும் உணர்ந்த அந்தத் தாய், கணநேரத்தில் சரியெனச் சொன்னார். ஒரு கணம் கணவனை வணங்கினார். பின்பு கணவரின் பாதங்களை கழுவிய நீரை எடுத்து அவர்கள் மீது தெளித்தார் அடுத்த நொடியே துறவிகள் மூவரும் பச்சிளங்குழந்தைகளாய் மாறிப்போயினர். பிறகென்ன,நிர்வாணமாய் அமுது படைத்தார் அந்த உத்தமப் பெண்மணி. மூவரும் குழந்தைகள் ஆனதால் பிரபஞ்ச இயக்கமே ஸ்தம்பித்தது. தேவியர் மூவரும் தத்தம் சக்தியை இழந்தனர். நாரதரைக் கெஞ்சி, அனுஷ்யா தேவி காலடி வந்து வணங்கி நின்றனர். தங்கள் கணவரை மீட்க வழி கேட்டனர். அழுது புரண்டனர். அந்த வேளையில் அத்திரி மகரிஷியும் வந்து சேர்ந்தார். மீண்டும் குழந்தைகள் சிவ, விஷ்μ, பிரம்மாவாகினர். இந்தப் புராணக் கதையின் பின் கதையும் உண்டு. மூன்று குழந்தைகளின் ஒருமித்த வடிவே, அத்திரி மகரிஷி, அனுஷ்யா தேவி தம்பதியினரின் மகனான தத்தாத்ரேயர் எனும் யுகப் புருஷர் ஆவார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக