வெள்ளி, 2 மே, 2014


ஞானம் "எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு " குறள் ஏதேனும் ஒரு பொருள் எந்தத் தன்மை உடைய தாகக் காணப்பட்டாலும் அதன் தோற்றத்தைமட்டும் கண்டு நீங்காமல், அப்பொருளுக்கு உள்ளீடான உண்மையை காணவல்லதே மெய்யறிவாகும் ( அதுவே ஞானம் ) " அற்றவர் என்பார் அவஅற்றார், மற்றையார் அற்றாக அற்றது இலர்," அவா அறுத்தல் - குறள் பிறவி அற்றவர் என்று சொல்லப்படுவர் ஆசையை ஒழித்தவராயின், அவற்றால் சில துன்பங்கள் ஒழிந்தனவேயன்றி முற்றிலும் துன்பம் ஒழிந்தவர் ஆகார், பிறவிப் பிணி நீக்கி முக்தி எனும் விடுதலை அடைய காணும் வழிகள் நான்கு உண்டு இந்த மெய்யறிவான ஞான மார்க்கம் கொண்டால் முக்தி எனும் வீடு பேற்றை அடையலாம் 1), இறைவனிடம் ஆண்டானும் அடிமை போலும் பழகி பக்தி இறைவனை ஏஜமானாக பாவித்து பணி செய்தல் - தாசமார்க்கம் - அப்பர் அடைந்த வழி 2) அப்பனும், பிள்ளையும் போலிருந்து பக்தி செய்தல் - சற்பத்ர மார்க்கம் - ஞான சம்பந்தர் வழி 3),நண்பன் நண்பனிடம் பக்தி செய்தல் - சகமார்க்கம் - சுந்தரர் வழி 4). நீ நான் என்றும் இருமையற்ற ஒருபெயரில் ஒன்று கலந்து பக்தி செய்தல் மற்றும் இறைவரை குருவாக எண்ணி தான் ஆன்ம சீடனாக் கொண்டு வழிபடல் - சன்மார்க்கம் - மணிவாசகர் வழி இறையருள் - குரு - திரு அருள் வீடு பேறு அடைய உள்ள வழிகள் நான்கு சரியை கிரியை, யோகம் ஞானம் என்பதும் உண்டு 1, முப்பத்தாறு தத்துவங்களையும் நியதி களைவது சரியை 2. அதன்பின் அருள் வேறேன்றும் தான் வேறென்றும் பகுத்து நோக்காது புறச் செயல் புரிவது கிரியை 3, இறைவனை அடைய நல் குரு காட்டிய வழியில் மனதை யடக்க செய்யும் பயிற்சி - யோகம் 4, மனமடங்கி எண்ணம் அறுத்துப் பேரானந்தம் கிட்டும் நிலை - ஞானம் இவற்றால் அடையும் முத்திகள் 1, இறையுலகமாம் அறிவு உலகம் வாழுதல் - சாலேகம் 2. இறைவனின் அருகில் வாழுதல் - சாமீபம் 3. இறை உருப்பெற்று வாழுதல் - சாரூபம் 4. இறைவனுடன் ஒன்று கலந்து வாழுதல் - சாயுச்சியம் இவற்றுள் முக்தி முடிவென ஞானத்தையும் ஏனைய மூன்றையும் பதமுத்தி என்பர் சான்றோர்கள் இதனையே திரு மூலர் " ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று ஞானத்தின் மிக்கவை நல்முத்தி நல்காவாம் ஞானத்தின் மிக்கார் நாரின் மிக்காரே." உண்மை ஞானத்தை விட அதாவது இறைஞானத்தை விட மிக்க தர்ம நெறி உலகில் வேறு ஏதும் இல்லை. அதைவிட சிறந்த சமயமும் இல்லை. இந்த பரஞ்ஞானத்தை விட மிக்கவை என்று சொல்லப்படுபவை எவையாயினும் நல்ல மோட்ச ஞானத்தை தரமாட்டா, ஆகவே மெஞ்ஞானத்தில் மிக்கவர் மண்ணுலக மக்களே ஆயினும் உயர்ந்தவர்களே ஆவர். திருவடி ( இருகண்கள் ) உணர்வாகிய ஞானத்தின் பிறவிப்பிணி நீக்கும், அறநெறி எந்த நாட்டிலுமில்லை, இம்மை, உம்மை, அம்மை, ஆகிய மூவிடத்து நன்மையைபும் தரும், சமயங்களில் ஞானத்தை மிஞ்சியது ஏதுமில்லை, ஆகையால் அக்போட்பாடு நன்மையுமே ஆகாது. நல்ல வீடுபேற்றை தர ஞானத்தால் மட்டுமே இயலும், ஞானத்திற் சிறந்தோர் மக்களில் சிறந்தோராவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக