புதன், 21 மே, 2014


பன்னிரு திருமுறைகளில் கல்வி / உலகியல் கல்வி பெற நால்வர் பதியங்கள் கல்வி என்பது இரண்டு வகைப்படும், 1) அருளியல்கல்வி 2) உலகியல் கல்வி உலகியல் கல்வி உலகாயதத்திற்கு மட்டுமே (இம்மைக்கு மட்டுமே ) பயன்படு்ம் ஆனால் அருளியல் கல்வி இம்மைக்கும் மறுமைக்கும் பயயன்படும், இதனையே வள்ளுவர்பெருமான் " ஒருைமக்கண் தான்கற்ற கல்வி ஒருவருக்கு எழுமையும் ஏமாப்புடைத்து," என்றும் "கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழார் எனின்" என்றும் கல்வியின் சிறப்பை இம்மைக்கும மறுமைக்கும் சிறப்பு தரும் என்றார் , இதனையே அப்பர் சுவாமிகள் " நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்" என்று அருளிகிறார், எனவே கல்வியின் பயன் இறைவன் திருவடியை வணங்குதலே என்பது பெறப்படும் இறைவனது திருவடியை உணரப் பயன்படும் ஐநதெழுத்து மந்திரமே உண்மைக் கல்வி ஆகும்,இதனை சம்பந்தர் பஞ்சாக்கரத் திருப்பதிகம் பாடினார் " துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும் நெஞ்சலம் நைந்து நினைமின் நாள்தோறும் வஞ்சகம் அற்று அடி வாழ்த்த வந்த கூற்று அஞ்ச உதைத்தன அஞ்செழுத்துமே," வீடு பிறப்பை அறுத்து மெச்சினர் பீடை கெடுப்பன பின்னை நாள்தொறும் மாடு கொடுப்பன மன்னு மாநடம் ஆடி உகப்பன அஞ்செழுத்துமே" விளக்கம்;துஞ்சலும் துஞ்சல் இலாதபோழ்தினும் - தூங்கும் போதும் விழித்துக்கொண்டிருக்கும்போதும் ; போழ்தின் என்ற சொல்லைத் துஞ்சல் என்பதினோடுங் கூட்டித் துஞ்சல் பொழுதினும் , துஞ்சுதல் இல்லாத போழ்தினும் என்க . நெஞ்சகம் - மனம் . நைந்து - உருகி . நாள்தோறும் மாந்தரீர் நினைப்பீர்களாக . வஞ்சகம் இன்றிச் சிவபெருமான் திருவடியை மார்க்கண்டேயர் வாழ்த்தி வழிபட அவர் வாழ்நாள்மேல் வந்த யமன் அஞ்சும்படி உதைத்தன திருஐந்தெழுத்துமே . வஞ்சகமாவது , இறைவன் மேற் படரும் சிந்தையை இடையே மாற்றி வினையைப் பிறவிடங்களிற் செலுத்தி வஞ்சித்தல் . இதனை ` நெஞ்சினைத் தூய்மை செய்து நினைக்குமா நினைப்பியாதே வஞ்சமே செய்தியாலோ ` என்ற திருநேரிசையால் அறிக . திருஐந்தெழுத்தை ஓதுவார் எமவாதை நீங்குவார் என்பது இதனாற் பெற்றாம் மந்திர நான்மறை யாகி வானவர் சிந்தையுள் நின்றவர் தம்மை யாள்வன செந்தழ லோம்பிய செம்மை வேதியர்க் கந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே. மந்திரங்களாகவும் , நான்கு வேதங்களாகவும் ஆகித் தேவர்களுடைய சிந்தையினுள்ளும் நின்று அவர்களை ஆட்கொண்டு நன்னெறி பயப்பது திருவைந்தெழுத்தே ஆகும் . செந்நிற அழலோம்பிச் செம்மை நெறியில் நிற்கும் வேதியர்க்கும் காலை , நண்பகல் , மாலை என்ற மூன்று சந்தியா காலங்களிலும் செபிக்க வேண்டிய மந்திரம் திருஐந்தெழுத்தேயாகும் . நல்லவர் தீயர் எனாது நச்சினர் செல்லல் கெடச்சிவ முத்தி காட்டுவ கொல்ல நமன்றமர் கொண்டு போமிடத் தல்லல் கெடுப்பன அஞ்செ ழுத்துமே. பொழிப்புரை : புண்ணியர் , பாவிகள் என்ற பாகுபாடு இன்றி விரும்பிச் செபிப்பவர்கள் யாவரேயாயினும் அவர்களுடைய மலங்களை நீக்கிச் சிவமுத்தி காட்டும் ஆற்றலுடையன திருவைந்தெழுத்தாகும் . எமதூதர்கள் வந்து உயிரைக் கொண்டு செல்லும் காலத்தும் , மரணத்தறுவாயில் ஏற்படக் கூடிய துன்பத்தைப் போக்குவனவும் திருவைந்தெழுத்தேயாகும் . தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும் வெம்மை நரகம் விளைந்த போழ்தினும் இம்மை வினையடர்த் தெய்தும் போழ்தினும் அம்மையி னுந்துணை அஞ்செ ழுத்துமே. பொழிப்புரை : தும்மல் , இருமல் தொடர்ந்து வந்த பொழுதும் , கொடிய நரகத் துன்பத்தை அனுபவிக்க நேரும் பொழுதும் , முற்பிறப்புக்களில் செய்த வினை இப்பிறவியில் வந்து வருத்தும் பொழுதும் , இப்பிறவியில் நாள்தோறும் ஓதிவந்ததன் பயனால் மறுபிறவியிலும் வந்து துணையாவது திருவைந்தெழுத்தேயாகும் . வீடு பிறப்பை அறுத்து மெச்சினர் பீடை கெடுப்பன பின்னை நாள்தொறும் மாடு கொடுப்பன மன்னு மாநடம் ஆடிஉ கப்பன அஞ்செ ழுத்துமே. பொழிப்புரை : இறப்பு , பிறப்பு இவற்றை அறுத்து இத்திரு மந்திரத்தைப் பாராட்டிச் செபிப்பவர்களின் துன்பங்களை நீக்குவன . தினந்தோறும் செல்வங்கள் யாவும் கொடுப்பன . நிலைபெற்ற நடனத்தையாடும் சிவபெருமான் மகிழ்வன திருவைந்தெழுத்தே யாகும் . திருச்சிற்றம்பலம் . ஓம் நமசிவாயம், http://poompalani.weebly.com http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக