திருஐந்தெழுத்தின் மகிமை
உடல்நோயும் உயிர்நோயும் தீரும்
"வருந்தவன்காண் மனமுருகி நினையா தார்க்க
வஞ்சன்காண் அஞ்செழுத்து நனைவார்க்கு என்றும்
மருந்தவன்காண் வான்பிணிகள் தீரும் வண்ணம்
வானகமும் மண்ணகமும் மற்றுமாகிப்
பரந்தவன்காண் பட்சைட யெட்டுைடயான் தான்காண்
பங்கயத்தோன் தன்சிரத்ைத யேந்தி யூரூர்
இநந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண் அவன்என் எண்ணத் தானே." திருநாவுக்கரசர்
தன்னை மனம் உருகி நினையாதாருக்கு வஞ்சனாய் , அஞ்செழுத்தை விருப்புற்று நினைப்பவர்களுக்கு என்றும் அவர்களுடைய பெரிய பிணிகளைத் தீர்க்கும் மருந்தானவனாய் , தேவருலகும் மண்ணுலகும் மற்ற உலகங்களுமாகப் பரவியவனாய் , நடுச்சடையை விடுத்துத் திசைக்கு ஒன்றாக ஆடும் எட்டுச்சடைகளை உடையவனாய் , பிரமனுடைய மண்டையோட்டைக் கையில் ஏந்தி , ஊர் ஊராகப் பிச்சை எடுத்தவனாய் , உள்ள எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே .
இறைவரை மனம் உருகி நனைக்க வேண்டும் , மனம் உருகி நினைக்காதவர்கள் இறைமையை உணர முடியாது , உலோகங்கள் உருகும் பொழுது அவற்றில் உள்ள மாசுகள் அகலும், அைதப்போல, உள்ளம் உருகினால் மனம் மாசுகள் அகலும், உருகிய தங்கத்தில் கல் பதியுமாறு, உருகிய மனத்தில் இறைவர் பதிவார், இறைவழிபாடு பயனுைடயதாகும்,
இைறவருடைய மேன்மையையும் நம்முடைய கீழ்மையையும் நினைத்தால் உள்ளம் உருகும், இவற்றை கூறும் அரிய தமிழ் வேதப் பாடல்கள் வாய் விட்டு பாடினால் உள்ளம் உருகும், "சிவாயநம" எனும் திருஐந்தெழுத்ைத இடைவிடாது நினைப்பவர்களுைடய நோய்க்கு மருந்தாய் இறைவர் விளங்குவார், உடலுக்கு வரக்கூடிய நோய்களும், உயிருக்கு ஏற்படும் இறப்பாகிய நோயும் திருஐந்தெழுத்ைத ஒதுவதால் ஒழியும், மந்திரங்களில் எல்லாம் மிக உயர்ந்த மளந்திரம் திருஐந்தெழுத்தே ஆகும், ( சிவாயநம) இைடவிடாது சொல்லி நலம் பெறுவோம்
திருசிற்றம்பலம் - ஓம் நமசிவாய ஓம் -
இன்னும் பலகாண
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://vpoompalani05.blogspot.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக