சனி, 31 மே, 2014
புதன், 28 மே, 2014
திருமூலரும் திருமந்திரமும் / உபதேசம் 8 கற்றதனாலாய பயன்
செவ்வாய், 27 மே, 2014
திருமூலரும் திருமந்திரமும் உபதேசம் 7 ஏழ்மை
AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): நமது தலையெழுத்தையே மாற்றும் ஆன்மீக முயற்சிகள்!!!
AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): நமது தலையெழுத்தையே மாற்றும் ஆன்மீக முயற்சிகள்!!!: விதியை மதியால் வெல்லலாம் என்பது ஜோதிடப் பழமொழி! மனிதன் நாகரீகமடையத் துவங்கி,சுமாராக 5,00,00,000 ஆண்டுகள் ஆகிவிட்டன;ஒவ்வொரு தலைமுறையிலும்(ஒரு...
திங்கள், 26 மே, 2014
ஞாயிறு, 25 மே, 2014
பைரவர் பிறப்பு :
சனி, 24 மே, 2014
சீ(ஸ்ரீ)தேவியும் மூதேவியும்
சிங்கப்பூரில் சிவ, சு,சோம, அவர்கள் ஆற்றி ஆன்மீக சொற்பொழிவில் பிடித்த நிகழ்வுகள்
நடைமுறை பேச்சு வழக்கில் சீதேவி என்றால் செல்வம் தரும் திருமகள் என்ற அதிர்ஷ்ட தேவியையும், மூதேவி என்றால் அபசகுணத்திற்கு எப்போது அதிர்ஷ்டம் இல்லாத எப்போதும் தூங்கி வழியும் தேவியையும் அதிர்ஷ்டமில்லாத தேவியையும் குறிப்பது நடைமுறையில் உள்ளது, துரதிஷ்டம் பிடித்த வீட்டை மூதேவி குடிகொள்ளும் வீடு என்று கூறுவது நமது மரபு, இது ஏளமான வார்த்தையாக எல்லாராலும் கூறப்படுவது, ஒரு ஆன்மீக சொற்பொழிவு நடைபெறும் கூட்டத்தில் சிலர் பாதி தூக்கக்கலக்த்தில் இருப்பதை அறிந்த சொற்பொழிவாளர் இங்குள்ள ஆன்மீக பெரியோர்கள் இறையருள் சம்பந்தமாக ஆன்மீகத்தை மிகவும் கவனமாக கேட்டுக்கொண்டுள்ளவர்கள் பக்கத்தில் - உங்களிடம் செல்ம் தரும் சீதேவி உடனிருக்கிறாள், ஆனால் இதை கவனமின்றி கேட்காத பாதி தூக்கித்தில் உள்ளவர்களிடம் மூதேவி உடன் இருக்கிறாள், நீங்கள் இந்த ஆன்மீக உரையை கேட்டு முடித்தபின் வீட்டிற்கு செல்லும் போது தங்களுடன் உடனிருந்த சீதேவி அல்லது மூதேவிதான் உங்களுடன் வீடுவரை வருவாள் உங்களுக்கு சீதேவி வேண்டுமா? அல்லது மூதேவி வேண்டுமா? என்ற வினா எழுப்பியவுடன் தூக்கத்திலிருந்தவர்கள் அனைவரும் விழிப்படைந்து அவரின் கவனத்திற்கு திருப்பபட்டனர்,
இதேபோன்று தவத்திரு வாரியார் சுவாமிகள் ஒரு ஆன்மீகக் கூட்டத்தில் சீதேவி, மற்றும் மூதேவியைப்பற்றி உருவக்கதையை கூறினார், ஒரு தடவை நாரத முனியவர் இந்த சீதேவி , மூதேவி இவர்களிடம் சிக்கிக்கொண்டார், அவர்கள் தங்கள் நம்மில் அதிக அழகு என்பது போன்று கர்வம் கொண்டு நாரதரிடம் எங்களில் யார் மிகுந்த அழகு என்ற வினாவினை தொடுத்தார்கள், இதைக்கண்ட நாரதர் முனிவர் நாம் எல்லோருக்கும் சிக்கலை உண்டுபண்ணுவதுதான் வழக்கம், இப்போது நமக்கே இந்த மிகப்பெரிய சிக்கலைச் சந்திக்க வேண்டியதுள்ளதே என்று தயங்கியபோது தனக்கு உபாயம் செய்தார், நான் யார் மிக அழகென்று கூறுகிறேன் தாங்கள் நான் சொல்வது போன்று செய்தால் என்றார், உடனே இருவரும் என்ன செய்யவேண்டுமென கேட்டனர், உடனே நாரதர் சற்று விலகி இருந்து கொண்டு , மூதேவியிடம் தேவி தாங்கள் தற்போது முன்னோக்கி திரும்பி செல்லுங்கள் என்றார், உடனே மூதேவி பின்நோக்கி நடந்து சென்றார் அப்போது தேவி தாங்கள் பின்நோக்கி செல்லும் போது தங்களின் பின்னழகு மிக அழகுஎன்றார், எனவே தாங்கள் சென்றுகொண்டே இருங்கள் அப்போதுதான் இந்த அழகு உங்களிடம் தொடர்ந்து இருக்குமென கூறி மூதேவியை அங்கிருந்து அனுப்பிவிட்டார், பின் சீதேவியிடம் தாங்கள் முன்நோக்கி வருங்கள் என்றார் உடனே சீதேவியிடம் தாங்களின் முன்அழகு மிகமிக நன்று என்று கூறி முன்நோக்கி வர கூறி தன்பால் சீதேவி அருளைப் பெற்றார், இவ்வாறு சமயமறிந்து பேசி திருமகள் சீதேவியின் அருளை பெற்ற கதையை வாரியார் விளக்கினர்ர்,
வெள்ளி, 23 மே, 2014
தேடி தேடி படித்த முக்கியமான விஷயங்கள் இங்கே: பைரவர் மூலமந்திரப் பலன்கள், 27 நட்சத்திரங்களுக்கு...
தேடி தேடி படித்த முக்கியமான விஷயங்கள் இங்கே: பைரவர் மூலமந்திரப் பலன்கள், 27 நட்சத்திரங்களுக்கு...: பைரவர் மூலமந்திரப் பலன்கள் மிகப் பிரபல நாளேடான தினத்தந்தி வெள்ளிமலரில் 150 வாரங்களுக்கும் மேலாக அகத்தியர் அருள்வாக்கு எனும் ...
தேடி தேடி படித்த முக்கியமான விஷயங்கள் இங்கே: அருள்மிகு பைரவர் திருக்கோயில் தகட்டூர் நாகபட்டி...
தேடி தேடி படித்த முக்கியமான விஷயங்கள் இங்கே: அருள்மிகு பைரவர் திருக்கோயில் தகட்டூர் நாகபட்டி...: அருள்மிகு பைரவர் திருக்கோயில் இங்கு பைரவர் மூலவராக அருபாலிக்கிறார். மூலவர் : பைரவர் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ...
வியாழன், 22 மே, 2014

புதன், 21 மே, 2014
செவ்வாய், 20 மே, 2014
AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): சைவ அடியார் :திருநாவுக்கரசரின் வாழ்க்கை பகுதி 1
AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): சைவ அடியார் :திருநாவுக்கரசரின் வாழ்க்கை பகுதி 1: சிவலோகத்தில் சிவபெருமானுக்கு உறுதுணையாக இருந்து வந்த சிவகணங்களில் ஒருவர் வாகீசர். ராவணன் இன்றைய மீரட்டில் பிராமண வம்சத்தில் பிறந்தவன்;மனிதர்...
பக்தி யுகம்: பாபநாசம் அருள்மிகு கோடி லிங்க ஆலயம்
பக்தி யுகம்: பாபநாசம் அருள்மிகு கோடி லிங்க ஆலயம்: பாபநாசம் சிவன் கோவில் திருநெல்வேலியில் இருந்து சுமார் 52 k .m தொலைவில் அமைந்துள்ளள்ளது. இது நவ கயிலாயத்தில் முதல் ஸ்தலமான சூரிய ஸ்தலம...
திங்கள், 19 மே, 2014
சோழவள நாட்டில் கடற்றுறைப் பட்டினமாக விளங்கிய காரைக்கால் என்னும் பதியில் வணிகர் குலத்தில் தனதத்தன் என்பா னுக்கு அரும் பெறற் புதல்வியாய் திருமகள் போன்ற பேரழகோடு அம்மையார் தோன்றினார்.
பெற்றோர் புனிதவதி எனப் பெயரிட்டு அன்போடு வளர்த்து வந்தனர். புனிதவதியார் பிறந்து மொழி பயிலும் காலத்திலேயே சிவபெருமான் திருவடிகளுக்குத் தொண்டு பூண்டு, சிவன் அடியார்களைக் கண்டால் சிவன் எனவே தெரிந்து வழிபடும் திறம் வாய்க்கப் பெற்றவராய் வளர்ந்து திருமணப் பருவம் அடைந்தார்.
திருமணம்
நாகப்பட்டினத்தில் வாழ்ந்த நிதிபதி என்ற வணிகன் தன் மகன் பரமதத்தனுக்குப் புனிதவதியாரை மணம் செய்விக்க விரும்பி முதியோர் சிலரைத் தனதத்தன்பால் அனுப்பினான். இருமுது குரவர் இசைவினால் புனிதவதியார்க்கும் பரமதத்தனுக்கும் திருமணம் நிகழ்ந்தது. தனதத்தன் தனக்கு வேறு பிள்ளைப்பேறு இல்லாமையால் காரைக்காலிலேயே தன் மருகன் பொன் வாணிபம் புரியவும் தனியே மனையறம் நடத்தவும் வகை செய்து கொடுத்தான்.
மனைத்தக்க மாண்பு
பரமதத்தன் தன் மாமனார் அமைத்துத் தந்த வாணிபத்தைப் பன்மடங்காகப் பெருக்கிச் சிறப்புற வாழ்ந்து வந்தான். புனிதவதியார் மனைத்தக்க மாண்புடன் இல்லறம் இயற்றியதோடு சிவபெருமான் மீது கொண்ட பக்தியிலும் மேம்பட்டுச் சிவனடியார்களுக்குத் திரு அமுதளித்தல், வேண்டும் பொருள்களை அவ்வப்போது கொடுத்தல் முதலான சிவபுண்ணியங்களிலும் சிறந்து விளங்கினார்.
அடியவர்க்கு அமுது
ஒருநாள் பரமதத்தனை வாணிபம் செய்யுமிடத்தில் காண வந்த சிலர் இரண்டு சுவையான மாங்கனிகளை அவனிடம் அளித்து உரையாடிச் சென்றனர். பரமதத்தன் அவர்களை வழியனுப்பியபின் அவர்கள் தந்து சென்ற மாங்கனிகள் இரண்டையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தான். புனிதவதியார் அக்கனிகளை வாங்கித் தன் கணவன் உணவுண்ண வரும்போது படைக்கலாம் என அடுக்களை அறையில் வைத்திருந்தார். அவ்வேளையில் சிவனடியார் ஒருவர் பசியால் மிக இளைத்தவராயப் புனிதவதியார் இல்லத்திற்கு வந்தார். அம்மையார் திருஅமுது (சோறு) மட்டும் சமைத்திருந்த நிலையில் ஏனைய கறியமுது முதலியவற்றை விரைந்து செய்தளிக்க எண்ணினார். வந்த அடியவரோ மிக்க பசியோடு இருத்தலைக் கண்ணுற்றுத் தன் கணவன் அனுப்பிய மாங்கனிகளுள் ஒன்றை இலையில் படைத்து அடியவர்க்குத் திருஅமுது படைத்து மகிழ்வோடு வழியனுப்பி வைத்தார். சிறிது நேரங்கழித்துப் பரமதத்தன் வழக்கம்போல் நண்பகல் உணவு அருந்தத் தன் இல்லம் அடைந்தான். புனிதவதியார் இன்முகத்தோடு தன் கணவனுக்குத் திருஅமுது கறியமுது முதலியவற்றைப் படைத்ததுடன் அவன் அனுப்பியிருந்த மாங்கனிகளுள் ஒன்றை இலையில் வைத்து உண்ணச் செய்தார். திரு அமுதுடன் அப்பழத்தைத்தின்ற பரமதத்தன் அதன் இனிய சுவையில் மயங்கியவனாய்ப் பிறிதொன்றையும் இடுவாயாக என்றான்.
அதிமதுரக்கனி
கணவன் சொற்பிழையாத புனிதவதியார் அவனது சுவை உணர்வைக் கெடுத்தல் கூடாது என்னும் கருத்தோடு தான் அப் பழத்தை அடியவர்க்களித்த செய்தியைக் கூறாது பழத்தை எடுத்து வருபவர்போல அடுக்களையினுள் வந்து வருந்தி இறைவனை வேண்டி நின்றார். அவ்வளவில் இறையருளால் அவர் தம் கையகத்தே மிக்க சுவையுடைய அதிமதுரக்கனி ஒன்று வந்தது. உடனே அக் கனியைக் கொண்டு வந்து தன் கணவர் உண்ணும் இலையில் இட்டார். அதனை உண்ட பரமதத்தன் அக்கனியின் சுவை முன்னுண்ட கனிச் சுவையின் வேறுபட்டதாய்த் தேவர் அமிழ்தினும் மேம்பட்டதாய் இருத்தலை உணர்ந்து புனிதவதியாரை நோக்கி மூவுலகிலும் பெறுதற் கரியதான இக்கனியை நீ எங்குப் பெற்றாய் என வினவினான். புனிதவதியார் இறைவன் தனக்கு வழங்கிய கருணையைப் பிறர்க்கு உரைத்தல் கூடாதாயினும் தன் கணவன் சொல்வழி ஒழுகுதலே கடன் எனத்துணிந்து நடந்தவற்றைக் கூறினார்.
மாங்கனியின் மாயம்
அவற்றைக் கேட்ட பரமதத்தன் இக்கனி சிவபெருமான் உனக்குத் தந்தது உண்மையாயின் பிறிதொரு கனியையும் இவ்வாறே வருவித்து எனக்கு அளிப்பாயாக எனக் கேட்டனன். புனிதவதியார் அவ்விடத்தை விட்டுத் தனியே சென்று இறையருள் எனத் தான் கூறிய வார்த்தை பொய்யாதிருக்கப் பிறிதொரு மாங்கனி அருள வேண்டு மெனச் சிவபெருமானை இறைஞ்சி நின்றார். இறையருளால் மற்று மொரு மாங்கனி அம்மையார் கைக்கு வந்தது. பரமதத்தன் அக்கனியைத் தன் கையில் வாங்கினான். வாங்கிய அளவில் அக்கனி மாயமாய் மறைந்தது. அதனைக் கண்டு அஞ்சிய பரமதத்தன் தன் மனைவியாக வந்த அம்மையாரைத் தெய்வமென மதித்து அவரோடு சேர்ந்து வாழ்ந்தபோதும் உறவுத்தொடர்பு இன்றி ஒழுகி வந்தான்.
மறுமணம்
இவ்வாறு ஒழுகும் நாளில் ஒருநாள் கடல் கடந்து வாணிபம் செய்து மீள்வேன் என உறவினர்களிடம் கூறி அரிய பல பொருள்களை மரக்கலத்தில் ஏற்றிக் கொண்டு கடல் கடந்து சென்று பெரும் பொருள் ஈட்டிக் கொண்டு மீண்டவன் பாண்டி நாட்டு மதுரையை அடைந்து அங்கே இரண்டாவதாக ஒரு பெண்ணைத் திருமணம் புரிந்து வாழ்ந்து வந்தான். அம்மனைவிக்குப் பிறந்த பெண் குழந்தைக்குத் தான் தெய்வமென மதிக்கும் புனிதவதியாரின் பெயரைச்சூட்டி மகிழ்ந்துறைந்தான்.
புனிதவதியார் சந்திப்பு
இதனை அறிந்த புனிதவதியாரின் சுற்றத்தினர் அம்மையாரை அவர் தம் கணவர்பால் சேர்ப்பிக்கும் கருத்துடன் அவரைப் பல்லக்கில் ஏற்றிக்கொண்டு பாண்டி நாடடைந்து அவன் வாழும் ஊர் எல்லையை அணுகினார்கள். அவர்கள் வருகையை அறிந்த பரமதத்தன், அச்சம் உடையவனாய், இரண்டாவதாகத் தான் மணந்த மனைவியோடும் மகளோடும் புறப்பட்டு ஊர் எல்லையை அடைந்தான். அவன் வருகையை அறிந்த உறவினர் பல்லக்கை நிறுத்தினர். பரமதத்தன் அம்மையாரிடம் `அடியேன் உம் அருளால் வாழ்கிறேன். இவ்விளங் குழவிக்கு உமது பெயரையே சூட்டியுள்ளேன்` என்று கூறி அவருடைய திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான். அதனைக் கண்ட புனிதவதியார் அச்சத்தோடு சுற்றத்தார் பால் ஓதுங்கி நின்றார். சுற்றத்தினர் பரமதத்தனை நோக்கி `நீ உன் மனைவியை வணங்கக் காரணம் யாது` எனக் கேட்க அவன் அவர்களை நோக்கி ` இவர் நம் போன்றவர் அல்லர் தெய்வத்தன்மை வாய்ந்தவர் நீவிரும் இவரை வழிபடுவீராக` என்றான்.
பேய் வடிவம்
சுற்றத்தவர் `ஈதென்ன வியப்பு` எனத் திகைத்து நிற்கப் புனிதவதியார் சிவபிரான் திருவடிகளைச் சிந்தித்து `தன் கணவர் கருத்து இதுவாயின் அவர் பொருட்டு அமைந்த எனது தசைப்பொதியைக் கழித்து நீக்கி நின் திருவடிகளைப் போற்றி நிற்கும் கணங்களில் ஒன்றாகும் பேய் வடிவினை எனக்குத் தந்தருளுக` என இறைவனை வேண்டி நின்றார். அந்நிலையில் பெருமான் அருளால் வானுலகும் மண்ணுலகும் போற்றும் பேய் வடிவம் அவருக்கு வாய்த்தது. சுற்றத்தவர் அஞ்சி அகன்றனர். புனிதவதியார் சிவனடியே சிந்திக்கும் சிவஞானம் உடையவராய் அற்புதத் திருஅந்தாதியால் இறைவனைப் போற்றினார்.இமயவல்லியின் அருட்பார்வை அம்மையார் மீது விழுந்தது. இவர் யார் என வினவினர், ஈசன் ” வரும் இவள்நம்மை பேணும் அம்மை காண்.ஈசன் அம்மையே எனப் பரிவுடன் அழைத்தார் அவருக்கு மகிழ்ச்சி பொங்க அப்பா என அலறித் திருவடியில் விழ்ந்தனள். இறைவர் நம்மிடம் வேண்டும் வரம் யாது எனக் கேட்க அதற்கு அம்மை அய்யனே என்று்ம மாறாத அன்பு வேண்டும், பிறாவாைம வேண்டும் பிறப்பு உண்டேனில் உம்மை என்றும் மாறாமை ேவண்டும், மேலும் நீர் ஆனந்தமாக கூத்தாடும் போது நாம் மகிழந்து பாடி அடியின் கீழ் இருக்க வரம் வேண்டினார். சிவபெருமான் திருவாலங்ககாடு எனும் தலத்தில் நாம் புரியும் திருநடனம் கண்டு களித்து, நீங்காது விளங்குவாய் என அருள்புரரிந்தார். அம்ைமயார் திருவாலங்காடு அைடந்து அண்டமுற நிமிர்ந்தாடும் ஐயன் திருவடி நீழலில் இனிது அமர்ந்தார். பெருமாைன இரண்டு மூத்த திருப்பதிகங்களால் பாடி பரவினார்.
திருச்சிற்றம்பலம் / ஓம் நமசிவாய ஓம் /
தகவல் ; தமிழ்வேதம்
இன்னும் பல காண;
http://poompalani.weebly.com
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
ஞாயிறு, 18 மே, 2014
திருஐந்தெழுத்தின் மகிமை உடல்நோயும் உயிர்நோயும் தீரும்
"வருந்தவன்காண் மனமுருகி நினையா தார்க்க
வஞ்சன்காண் அஞ்செழுத்து நனைவார்க்கு என்றும்
மருந்தவன்காண் வான்பிணிகள் தீரும் வண்ணம்
வானகமும் மண்ணகமும் மற்றுமாகிப்
பரந்தவன்காண் பட்சைட யெட்டுைடயான் தான்காண்
பங்கயத்தோன் தன்சிரத்ைத யேந்தி யூரூர்
இநந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண் அவன்என் எண்ணத் தானே." திருநாவுக்கரசர்
தன்னை மனம் உருகி நினையாதாருக்கு வஞ்சனாய் , அஞ்செழுத்தை விருப்புற்று நினைப்பவர்களுக்கு என்றும் அவர்களுடைய பெரிய பிணிகளைத் தீர்க்கும் மருந்தானவனாய் , தேவருலகும் மண்ணுலகும் மற்ற உலகங்களுமாகப் பரவியவனாய் , நடுச்சடையை விடுத்துத் திசைக்கு ஒன்றாக ஆடும் எட்டுச்சடைகளை உடையவனாய் , பிரமனுடைய மண்டையோட்டைக் கையில் ஏந்தி , ஊர் ஊராகப் பிச்சை எடுத்தவனாய் , உள்ள எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே .
இறைவரை மனம் உருகி நனைக்க வேண்டும் , மனம் உருகி நினைக்காதவர்கள் இறைமையை உணர முடியாது , உலோகங்கள் உருகும் பொழுது அவற்றில் உள்ள மாசுகள் அகலும், அைதப்போல, உள்ளம் உருகினால் மனம் மாசுகள் அகலும், உருகிய தங்கத்தில் கல் பதியுமாறு, உருகிய மனத்தில் இறைவர் பதிவார், இறைவழிபாடு பயனுைடயதாகும்,
இைறவருடைய மேன்மையையும் நம்முடைய கீழ்மையையும் நினைத்தால் உள்ளம் உருகும், இவற்றை கூறும் அரிய தமிழ் வேதப் பாடல்கள் வாய் விட்டு பாடினால் உள்ளம் உருகும், "சிவாயநம" எனும் திருஐந்தெழுத்ைத இடைவிடாது நினைப்பவர்களுைடய நோய்க்கு மருந்தாய் இறைவர் விளங்குவார், உடலுக்கு வரக்கூடிய நோய்களும், உயிருக்கு ஏற்படும் இறப்பாகிய நோயும் திருஐந்தெழுத்ைத ஒதுவதால் ஒழியும், மந்திரங்களில் எல்லாம் மிக உயர்ந்த மளந்திரம் திருஐந்தெழுத்தே ஆகும், ( சிவாயநம) இைடவிடாது சொல்லி நலம் பெறுவோம்
திருசிற்றம்பலம் - ஓம் நமசிவாய ஓம் -
இன்னும் பலகாண
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://vpoompalani05.blogspot.in
திருமூலரும் திருமந்திரமும் உபதேசம் 4 கொல்லாமை
திருமூலரும் திருமந்திரமும் உபதேசம் 4
கொல்லாமை
துடிக்கத் துடிக்க உயிர்களை கொல்வது பாவம், உடலின்றி உயிரைப்பறிப்பது கொலை, ஈ,எறும்புக்கு செய்கிற தீங்கும் கொலைதான், கொடியில் இருந்து பூக்களை பறிப்பது இரக்கமற்ற செய்கைதான் என்கிறார் திருமூலர்
"பற்றுஆய ந்ற்குரு பூசைக்கும் பன்மலர்
மற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர்
நற்றார் நடுக்கற்ற தீபமும் சித்தமும்
உற்று ஆரும் ஆவி அமர்ந்து இடமே உச்சியே."
சிற்றுயிரைக் கொல்லாதிருப்பதே சிவகுருவிற்கு உகந்த மாலையாகும், பொறுமை இரக்கம், நல்லறிவு மெய்த்தவம், அன்பு புலனடக்கம், இவை ஒளிபொருந்திய மலர்களாகும், அசைவற்ற மனமே சிறந்த தீபமாகும், இவற்றை கொண்டு செய்வதே உயர்ந்த வழிபாடு என்பது இப்பாடலின் பொருள்.
திருவள்ளுவரும் கொல்லாமை அதிகாரத்தில் இப்படி கூறுகின்றார்,
"அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்" உயிர்களுக்கு தீங்கு செய்யாமல் இருங்கள், அதுவே முழுமையான அறம்,
நூறு தீயசெயல்களின் பலனை உயிர்க்கொலை என்கிற ஒரு பாவமே தந்து விடும், உங்கள் நல்வினைப் பயன்கள் அனைததையும் அது அழித்து விடும், அத்தகைய கொடுஞ் செயலைச் செய்யாதிருங்கள் என்கிறார் வள்ளுவர்,
மனிதனுக்கும் மிருகத்திற்கும் உள்ள வேறுபாடு குணம் செயல் இவற்றால் அமைவதுதான், " கொல்லென்றம், எறியென்றும், குத்து யென்றும் மிருகத்தைப்போல் வன்முறையை மேற்கொள்ளும் மனிதர்களை நரகத்தில் தள்ளு என்பனராம் எமதூதர்கள், இதன் பாடல் : கொல்லிடு, குத்தென்ற கூறிய மாக்களை.............)
எவ்வுயிரையும் கொல்லாதிரு, அதுவே பேரின்ப வீடு பேற்றை பெற்றுத்தரும் வழி என்கிறார் வள்ளுவர் " நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றம் கொல்லாமை சூழும் நெறி " என்பது தான் அந்த குறள்,
பஞ்சமா பாதகங்கள் தவிர்க்கப்பட வேண்டியவை என்பர் பெரியோர், தர்ம சாஷ்திரங்களும் அதே கருத்தை வலியுறுத்தும் பாலம் என்பது அக்கிரமம் , அது அடுத்தவருக்கு ஒருவர் செய்யும் அநீதி, கொடியவர் செய்யும் ஒழுங்கற்ற காரியம்,
களவு , கள்ளுண்ணல், குருநிந்தை, கொலை, பொய் இவை பஞ்சாமாபாதகம் என்கிறது அற நூல்கள் புலால் உண்பதும் கொலையே என்கிறார் திருமூலர்
"கொலையே களவு கள்காமம் பொய்கூறல்
மலைவான பாதகமாம் அவை நீக்கித்
தலையாம் சிவனடி சார்ந்து இன்பம் சார்ந்தோருகக்கு
இலையாம் இவை ஞனானநதத்து இருத்தலே "
ஐம்பெரும் பாவங்களை விலக்கி, இறைவனின் திருவடியைச் சிரமீது சூடியவர்கள் துன்பங்ள் நீங்கப் பெற்று இன்பத்தில் திளைத்திருப்பர் என்பது இதன் பொருள்
புலால் உண்பது மட்டுமா பாவம் புலால் விரும்பாதவரை வற்புறத்தி உண்ணச் செய்வதும் கொடுமை என்கிறார் திருமூலர்
திருச்சிற்றம்பலம் - ஓம் நமசிவாய ஓம்
இன்னும் பல காண :
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://vpoompalani05.blogspot.in
சனி, 17 மே, 2014
அறம்செய்ய விரும்பு என்பதன் தொடர்ச்சியாக திருமூலரின் கருத்துக்களை உங்களுடன்பகிர்கிறேன்,
அறம் செய்கிறவன் இறையென்னும் தோணியேறி வினையென்னும் கடலைக் கடக்கிறான், அவன் வாழ்வை மேன்மைப்படுத்தும் வழியறிந்தவன் ஆவான்,அறம் செய்யாதவனின் தன்மை எத்தகையது என்பதையும் திருமூலர் கூறுகிறார்
" எட்டி பழுத்தன இருங்கனி வீழந்தன
ஓட்டிய நல்லநம செய்யாதவர் செல்வம்
வட்டிகொண்டு ஈட்டியே மண்ணில் முகந்திடும்
பட்டிப் பதகர் பயனறி யாரே!"
எட்டி மரம் பழுக்கும், ஏறிட்டு யாரும் அதைப் பார்ப்பதில்லை, காரணம் அது புசிக்கத்தக்கதல்ல, சீண்டப் படாமல் கிடக்கிற எட்டிக்கனி போலத்தான் நல்லறம் செய்யாதவனின் செல்வமும் பயனற்று போகிறது, பொருளாசையால் கடும் வட்டி வாங்குவதோடு வஞ்சனையால் பிறர் பொருளைக் கவரும் பாதகர் தாம் செய்ய வேண்டிய அறத்தினை உணர்வதில்லை, செல்வத்தின் பயனே ஈதல் என்பதையும அவர்கள் அறிவதில்லை, என்பது பொருள்.
மனிதனின் பிறப்பிற்க்கும் இறப்பிற்கும் இடையே உள்ள காலப்பகுதி ஒன்றும் நீண்டதல்ல, அது கண்மூடித்திறக்கும் நேரத்தில் முடிந்து விடுகிறது, அவன் தனக்குள் வளர்த்த ஆயிரமாயிரம் கற்பனைகளும் சிதைந்து போகின்றன, அவனுடைய சரீரம் தனது வனப்பையிழந்து சாறற்ற சக்கையாகி விடுகிறது, பயனற்றதாகி விடுகிறது, அவனது உடலைப் போலவே வாழ்க்கையும் அறத்தின் அவசியத்தையும் உணராதிருக்கிறான் என வருந்துகிறார் திருமூலர் ( பாடல் : ஒழிந்தன காலங்கள் , ஊழியும் போயின .......... )
தம்மை யாசிப்பவர்க்கு தாய் மனதோடு உதவுகிறவனே இறைவனுக்கு உகந்தவன், பொருள் மீது பற்று வைத்து நல்லறம் செய்யத் தவறியவர்கள் காலனின் சினத்திற்கு ஆளாக நேரிடும், ( பாடல்: கனிந்தவர் ஈசன் ஆளாக நேரிடும் ............... )
நீஙகள் நல்லது செய்தால் நன்மை உண்டு, தீயது செய்தால் தீங்கே விளையும் இதுதான் இயற்கையின் நியதி, இதைத்தான் தலைவித என்கிறார்கள், இன்பமும் துன்பமும் உங்கள் செயலின் விளைவேயாகும், நாம் நல்லது செய்தால் மகிழ்ச்சியாக வாழலாம் என்பது மனிதனுக்கு தெரியாமல் இல்லை ஆனால் அவனுடைய அன்பற்ற மனம் அவனை அறம் செய்யாமல் தடுத்து விடுகிறது, ( பாடல் ; இன்பம் இடர், என்று இரண்டு உறவைத்து .................. )
எனவே நேர்மையற்ற செயலகளை செய்கிற ஒருவன் நிம்மதியாக வாழமுடியுமா? இறைவன் அவனைக் கவலைப் பட அனுமதிப்பானா? தேவைப்படுகிறவர்களுக்கு கொடுங்கள் தகுதியறிந்து கொடுங்கள் அடுத்தவரை துன்புறுத்தும் மிருகச் செயலை ஒருபோதும செய்யாதீர்கள் என்கிறது திருமந்திரம், ( பாடல்: கெடுவதும், ஆவதும் கேடில் புகழோன் ..................... ) இதன் கருத்தின் தொடர்ச்சியாக திருமூலர் யோகம் நியமம் இல்லார்க்கு ஈதல் தவறு என்றும் வலியுறுத்திகிறார்,
"ஈவது யோக இயம நியமங்கள்
சார்வது அறிந்தன்பு தங்கும் அவர்க்கன்றி
ஆவ தறிந்தன்பு தங்காதவர்களுக்கு
ஈவது பெரும் பிழை என்றுகொள்வீரே"
உலகீரே, யோக உறுப்புகளான இயம நியமங்களின் சார்புகளை உணர்ந்து அன்பு தங்கப்பெற்றவர்களுக்கே அல்லாமல், அன்பில்லாதவர்கட்கு ஒன்றை தருவது பெரும் தவறாகும் என்பதை அறிந்து கொள்ளுங்கள், அதாவது பாத்திரம் அறிந்து பிச்சை இடுதல் வேண்டும் என்பதை இம்மந்திரம் கூறுகிறது, இயமமாவது, கொலை, களவு, பொய, காமம் முதலான தீய குணங்களை அகற்றி ஐம்புலங்களை அடக்கி இருத்தலாகும் எனவே யோக நியமம் இல்லாருக்கு ஈதல் கூடாது,
இதுபோன்றே சீலம் இலார்க்கம் ஈதல் சிறிதும் பயன் இல்லை என்றும் கூறுகிறார், பாடல் : கோல வறட்டைக் குனிந்து கிட்டுப் பாலைக் கறந்து பருகுவதே ஒக்கும் சீலமும் றோன்பும் இலாதவர்க்கு ஈந்தது காலம் கழிந்து பயிரது ஆகுமே"
ஒழுக்கமும் நோமபும் இல்லார்க்கு ஒன்றை ஈவது, அழகான வறட்டு பசுவிற்கு குனிந்து பசுந்தழைகளை இட்டு பாலை கறந்து குடிப்பது போலாகும் இது போன்றது மட்டும் அன்று, பருவம் தவறிச் செய்த பயிரையும் போன்றதாகும், சில செடிகள் பருவம் கடந்து பயிர்செய்தால் அப்பயிர் செழித்து வளரும் ஆனால் பலன் தந்து அறுவடைக்கு வராது, அதுபோலத்தான் என்கிறார், தகுதியற்ற ஞானிகட்கு ஒன்றை ஈவதால் பயன் இல்லை என்பதை இரண்டு உதாரணங்களால் காட்டுகிறார்,
திருக்குறளில் அறம் செய்வது பற்றி பல அதிகாரப் பாடல்கள் இருக்கின்றதை நாம் அறியலாம் " ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும் வாயெல்லாம் செயல்" என்ற பாடல் மூலம் " உன்னால் முடிந்த வகையில் எல்லாம் அறத்ததினை இடைவிடாமல் செய்து கொண்டிரு " என்கிறார் வள்ளுவர், நான் இப்போது இளைஞன் அறம் செய்ய இன்னும் காலம் இருக்கு இன்னும் நிறைய சம்பாதித்து விட்டு அறம் செய்வோம் என்று தள்ளிப் போடாமல் இன்றே நல்லது செய் என்கிறார் வள்ளுவர், எனவே நன்றே செய் அதுவும்இன்றே செய் என்பது பழமொழி
திருச்சிற்றம்பலம் - ஒம் நமசிவாய ஒம்
எமது தொடர்புக்கு உள்ள வலைதளங்கள்:
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://vpoompalani05.blogspot.in
திருமூலரும் திருமந்திரமும் உபதேசம் 3 அறம் செய விரும்பு
வெள்ளி, 16 மே, 2014
அனுதினமும் இறைவழிபாடு எவ்வாறு செய்யவேண்டும் என்று திருமுறைகள் - தமிழ் வேதங்கள் காட்டும் வழிமுறைகளை திருநாவுக்கரசர் சுவாமிகள் வாயிலாக தனனு பாடல் வழியாக கூறுகின்றார்,
" பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்தராகி
அரும்பொடு மலர்கள் கொண்டு ஆங்கு ஆர்வத்தை உள்ளே வைத்து
விரும்பிநல் விளக்குத் தூபம் விதியினால் இடவல்லார்க்குக்
கரும்பினில் கட்டி போல்வார் கடவூர் வீரட்டனாரே," நாவுக்கரசர் தேவாரம் பதிகம் 31
மனிதாகப் பிறந்துள்ள நாம் அதிகாலையில் எழுதல் வேண்டும், எழுந்து ஐந்து நிமிடம் சிவபெருமானாரை நினைத்து துதித்திடல் வேண்டும், " இன்றைய பொழுது நல்ல பொழுதாக கழிய வேண்டும் பாவங்கள் செய்யாமல் இருக்க வேண்டும், புண்ணியங்கள் செய்ய வேண்டும், என்னால் எந்த உயிருக்கும் துன்பம் நேரிடாமல் இருக்க வேண்டும், நாட்டில் அமைதி நிலவ வேண்டும்." என்று பிராத்தனை செய்தல் வேண்டும்.
பிறகு 108 முறை சிவாயநம " என்று சிந்தித்தல் வேண்டும், பிறகு குளித்து வெண்ணீரு அணிய வேண்டும்., சிவத் தொண்டில் ஈடுபடவேண்டும், என்று மன மிகழ்ச்சியுடன் அன்றலர்ந்த மலர்களை எடுக்க வேண்டும், சிவாலயம் சென்று மலர்களை அருச்சனைக்கு அளிக்க வேண்டும். ஆலயத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும், காலை நேரம் இப்படிக் கழிந்தால் நம் மனமும் இன்பத்தில் மூழ்கும், இந்த சிவபுண்ணியத்தால் வீடும் பேறும் செல்வச் செழிப்பும் கிடைக்கும், அன்றைய பொழுது பயனுள்ளதாக புண்ணியத்தில் கழியும், வீண் பேச்சு பேசுவதற்கும், வேண்டாதவற்றை பார்ப்பதற்கும் வழியில்லாமல் போகும், சமுதாயமும், நலம் பெறும், தனிமனிதர்களின் கூட்டம் தானே சமுதாயம் என்பது.
திருசிற்றம்பலம் " ஓம் நமசிவாய "
நன்றி : தமிழ் வேதம்
http://poomalai-karthicraja.blogspot.in,
வியாழன், 15 மே, 2014
டெலிபதிகிரிதர்பாபா: கோரக்க சித்தர் தியான முறை
டெலிபதிகிரிதர்பாபா: கோரக்க சித்தர் தியான முறை: தியானம் பிரணவத்தைப் பொருளோடு திரும்பத் திரும்பக் கூறுவதே தியானம் என்கிறது பதஞ்சலி சூத்திரம் (யோக தந்தை பதஞ்சலி சித்தர்) ஒம்காரத்...
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
