நவ கைலாயம்
ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் ஆலயம்
இதுவும் நவ கைலாய தலங்களில் ஆறாவது தலம்,
இதுவும் தாமிரபரணி நதி்க்கரையில் அமைந்த தலம், அகத்திய முனிவரின் சிஷ்யர் உரோமச மகிரிஷி அகத்தியரின் வேண்டிதலின் படி தாமரை மலர்களை ஆற்றில் விட மலர் 6 வதாக ஒதுங்கிய இடமே ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் ஆலயம்.
மூலவர் ; கைலாச நாதர்
அம்பாள் ; சிவகாமியம்மாள்
அமைவிடம் (ஊர்) ; ஸ்ரீவைகுண்டம் , திருநெல்வேலி மாவட்டம்,
ஊரின் சிறப்பு ; நல திருப்பதி தலங்களின் தலங்களும், நவ கைலாய தலங்களின் ஆலயமும் அமைந்திருப்பது இத்தலத்திற்கு பெருமை. நவக்கரக தலங்களில் இதுவும் சனிக்குரிய தலமாகவும் விளங்குகிறது. எனவே இவ்வூர் நவ / கிரக, கைலாய, திருப்பதி தலங்களுக்கு பிரசித்தி பெற்ற ஊராக விளங்குகிறது
திருமாலும், திருலட்சுமியும் இங்கு தங்கியிருப்பதாக ஐதிகம், வைகுதல் என்றால், தங்குதல், திருமாலும் லட்சுமியும் இங்கு தங்கியிருப்பதால் ஸ்ரீ என்ற அடைமொழி சேர்த்து ஸ்ரீவைகுண்டம் என பெயர் வந்ததாகக் கூற்படுகிறது.
பிறவி ஊமையாகப் பிறந்து, திருச்செந்தூர் முருகன் அருளால் பேசும் சக்தி பெற்று குமரன் அருள் பெற்ற குமரகுருபர சுவாமிகள் பிறந்த ஊர் என்ற பெருமையும் உண்டு.
தல பெருமை ; இங்குள்ள கொடிமரம் கன்னியாகுமரி பகவதியம்மன் ஆலயத்திலிருந்து கொண்டுவரப்பட்டது. இங்குள்ள பூமிநாதர் சிலை, மரத்தால் செய்யப்பட்டது. இவர்ஒரு காவல் தெய்வமாக அருள்பாலித்து வருகிறார். இவர் சாஸ்தாவின் அம்சமாகக் கருதப்படுகிறார், சித்திரைத்திருநாளில் இவருக்கு சிறப்பு பூசைகளும் முதல் மரியாதையும் தரப்படுகிறது.
இங்கு சனிபகவானுக்கு தனி சன்னதி உண்டு, நவக்கிரங்களில் சனியின் ஆதிக்கம் உள்ளவர்களின் பரிகாரத்தலமாக உள்ளது. கைலாச நாதருக்கும், சனிபகவானுக்கு பரிகார பூசைகள்செய்து, சனியின் உக்கிரம் தனிய சிறப்பு பூசைகள் செய்து பரிகாரம் செய்யும் தலமாகும். சனி தோசத்தால் தடைப்பட்ட திருமணங்கள், இழந்த செல்வங்கள், நீண்ட நாள் பிரச்சனைகள் இவற்றிக்கு பரிகாரம் செய்து பலன் அடைகின்றனர். திரு நள்ளாறு சனீஸ்வரனுக்கு ஈடாக இ்வ்வாலயம் சிறப்புடையது.
கைலாய நாதருக்கு எதிரிலுள்ள நந்தியை சுற்றி 108 விள்க்குகள் உள்ளன. இந்த 108 விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபட்டால் சகல ஐஸ்வரியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அழகி சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய இவ்வாலயம் உண்டாக காரணமாக இருந்த உரோமச முனிவருக்கும் நடராஜர், விநாயகர், சனிஈஸவரர் ஆகியவர்களுக்கு தனி சன்னதிகள் உண்டு.
திருச்சிற்றம்பலம்
ஓம்சிவாய நம
தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்
I like your articles Very great and useful information really nice article manabadi inter results 2016
பதிலளிநீக்குts dsc 2016 hall ticket download