செவ்வாய், 19 ஏப்ரல், 2016

நவ கைலாயம் / ராஜபதி கைலாய நாதர்

நவ கைலாயம் / ராஜபதி கைலாய நாதர்



இதுவும் தாமிரபரணி நதி்க்கரையில் அமைந்த தலம், அகத்திய முனிவரின் சிஷ்யர் உரோமச மகிரிஷி அகத்தியரின் வேண்டிதலின் படி தாமரை மலர்களை ஆற்றில் விட மலர் 8 வதாக ஒதுங்கிய இடமே ராஜபதி  கைலாசநாதர் ஆலயம்.

மூலவர் ; கைலாசநாதர்
அம்மை ; சவுந்திர வள்ளி  

அமைவிடம் ; ராஜபதி  திருநெல்வேலி மாவட்டம் இவ்வூர்தலம்  நெல்லை திருச்செந்தூர் சாலையில் 38 கி,மீட். தொலைவில் தாமிரபரணி நதிக்கரையில்  அமைந்துள்ளது.

பிராத்தனையும் நேர்த்திக்கடனும் ;

  இது கேது நவக்கிரக தலமாக உள்ளதால் கேது கிரக பரிகார பிராத்தனை .இத்தலத்தின் மூலவராகிய கைலாசநாதர் கேதுவின் அம்சமாக அருள்பாலித்து வருகிறார், எனவே நவக்கிர தோசங்களில் கேது தோசங்களுக்கான பரிகாரங்கள் ெசய்து, சிறப்பு பெறலாம், குழந்தையின்மை, விவசாயம், கால்நடை சேதம், திருமணத்தடை, சர்ப்ப தோசம்,  வேலை வாய்ப்பு சம்பந்தப்பட்ட தோசங்களுக்கு சிறப்பு பரிகாரம் செய்து பலன் பெறலாம்,

தல பெருமை ; இத்தலத்தில் ஒழுங்கற்ற ஒரு லிங்கம் , இதற்கு நான்கு புறங்களிலும், நான்கு சக்கர வடிவங்கள் உண்டு. இந்த லிங்கத்திற்கு கீழேதான் அகத்தியர் உருவாக்கி உரோமச முனிவர் வழிபட்ட லிங்கம் உள்ளதாக கூறப்படுகிறது.
பூசை ; இது வாயு தலமான காளஹாஸ்திக்கு இணையான தலமாக கருதப்படுகிறது. கேது பரிகார பூசை சிறப்புடையது.

தல வரலாறு ; அகத்தியரின் சீடர் உரோமச முனிவர் , தன் குருவிடம் இனி பிறவாத வரம் வேண்டும் போது, நீ சென்று தென்பகுதியிலுள்ள நல கைலாய தலங்களில் உள்ள நான் உருவாக்கிய லிங்கங்களை கண்டு பூசை ெசய்து வந்தால் உனக்கு இந்த அருள் கிடைக்கும் என்றும், நல கைலா லிங்கங்களை காண 9 தாமரை மலர்களை தாமிரபரணி ஆற்றில் விட்டால் அவை ஒதுங்கும் இடங்களிலுள்ள லிங்கங்களைக் கண்டறிந்து பூசைசெய்ய கூறினார், அதன் படி அம்முனிவர் கண்ட 8 வது தலம் தான்ராஜபதி கைலாயநாதர், இத்தலத்திற்கு அருகில் மதுரை சந்திரகுல பாண்டிய மன்னனின் அரன்மனை இருந்தபடியால் இவ்வூர் ராஜபதி என்றானது. இங்குள்ள கோவில் மிகவும் பழைமையானது. ஒருகாலத்தில் தாமிரபரணியில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்தபோது இக்கோவில் மண்ணில் புதைந்து விட்டதாகவும், பின் வந்த சிவனடியார்கள் இத்தலத்திற்கு புதிய கோவில் கட்டி வழிபாடு செய்கின்றனர் என்று வரலாறு கூறுகிறது.




















சிறப்பு ; இத்தலம் கேது தலமாகவும் சிறப்பு உடையது.

திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய ஓம்
தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக