வெள்ளி, 15 ஏப்ரல், 2016

நவ கைலாசம் ( குன்னத்தூர் கோத பரமேஸ்வரர் )

நவ கைலாசம் 
( குன்னத்தூர் கோத பரமேஸ்வரர் / கைலாச நாதர் ஆலயம்)
நவ கைலாச நான்காவது தலம்


அகத்தியரின் கூற்றுப்படி ஒன்பது தாமரை மலர்களை தாமிரபரணி ஆற்றில் மிதக்க விட்டார். உரோமச ரிஷியும் அந்த மலர்களைத் தொடர்ந்து சென்றார்.

இதையடுத்து ஒவ்வொரு மலர்களும் பாபநாசம், கோடங்க நல்லூர், சேரன் மகாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, திருவைகுண்டம், தென் திருப்பேரை, ராஜபதி. சேர்ந்த பூ மங்கலம் எனும் ஊர்களின் தாமிரபரணி ஆற்றங்கரையில் கரை ஒதுங்கியது. அந்த ஊர்களிலெல்லாம் உரோமரிஷி சிவபெருமானை வழிபட்டார்.

தாமிர பரணி ஆற்றில்விட்ட தாமரை மலர் ஒதுங்கிய நான்காவது இடம் தான் குன்னத்தூர் 

மூலவர் ; கோத பரமேஸ்வரர் (கைலாசநாதர்)
அம்மை ; சிவகாமி அம்மாள்
தலவிருட்சம் ; நாகலிங்க மரம்
ஊர் ; குண்ணத்தூர்.  திருநெல்வேலி டவுன் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 2 கி,மீ, தூரத்தில் உள்ளது,


தலத்தின் சிறப்பு ; 
லிங்கத்தில் நாகம் இருப்பதால் நவக்கிரக தலங்களில் கேது பரிகாரத்தலமாகவும் விளங்குகிறது.

சிவலிங்கத்தி்ல் நாகர் இருப்பது இதன் தனிசிறப்பு
பிராத்தனை ; கால சர்ப்ப தோசம் , வேலை வாய்ப்பு, பதவி உயர்வு, குழந்தையின்மை இவற்றிக்காக பால் அபிசேகம் செய்வது 


வரலாறு ;  

  ஒரு காலத்தில் குன்னத்தூரில் வாழ்ந்து வந்த ஒரு சிற்றரசன் காலத்தில் இவ்வூரில் ஒரு அதிய மரம் இருந்தது. அந்த மரம் ஆண்டிற்கு ஒரு பூ மட்டும் பூத்து ஒரு பழம் மட்டும் பழுக்கும், அந்த அதிசய கனியை அரசன் ம்ட்டுமே உ்ண்பான், ஒரு முறை இம்மரத்தி்ல் பழுத்த பழம், அதன் பக்கமாக தண்ணீர் எடுத்துச் சென்ற பெண்மணியின் குடத்தில் தானேகவே விழுந்து விட்டது, அதை அப்பெண்ணும் கவனிக்க வில்லை, எனவே தனக்கு தெரியாமல் விழுந்த பழத்துடனே வீட்டிற்கு சென்று விட்டாள் இப்பெண்மணி. அப்போது, அதிசய மரத்தில் இருந்த பழம் காணாதது கண்டு மன்னனிடம் காவலர்கள் புகார் செய்ய , அக்கனியை  திருடி சென்றவர்களை கவனிக்க உத்தரவிட்டான், காவல்கள் அவ்வூரில் உள்ள எல்லாருடைய வீடுகளிலும் சென்று தேடினார்கள், இத்தருணத்தில் தண்ணீர் குட பழத்துடன் சென்ற பெண், தான் நீர் குடிப்பதற்கு தண்ணீர் கோரும்போது அக்குடத்தில் இருந்த அதிசயப்பழத்தையும் கண்டாள். உடனே இதனை மன்னனிடம் கொண்டுபோய் சேர்ப்பித்தாள், உடனே மன்னன் இந்த பெண்தான் இக்கனியை திருடிக் கொண்டு சென்றதாக குற்றம் சாட்டி, இப்பெண்ணை கழுவேற்ற உத்தரவிட்டான், 
  இந்த பெண் இறக்கும் தருவாயில் நீதியற்ற இவ்வூரில் பெண்களும், குழந்தைகளும், பசுக்களும் தவிர மற்றவை அழியட்டும் என சாபமிட்டாள். எனவே இதன்படி இவ்வூர் நாளடைவில் விருத்தியின்றி காணப்பட்டது, இருப்பினு்ம் இங்குள்ள கைலாச நாதர் சிறப்பினால் புத்துயர் பெற்றது. இவரை வணங்கினால் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அழியாத நம்பிக்கை.

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

நவகைலாசம் தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக