நவ கைலாய தலம் / தென் திருப்பேரை கைலாய நாதர் ஆலயம்
இதுவும் தாமிரபரணி நதி்க்கரையில் அமைந்த தலம், அகத்திய முனிவரின் சிஷ்யர் உரோமச மகிரிஷி அகத்தியரின் வேண்டிதலின் படி தாமரை மலர்களை ஆற்றில் விட மலர் 7 வதாக ஒதுங்கிய இடமே தென் திருப்பேரை கைலாசநாதர் ஆலயம்.
மூலவர் ; கைலாச நாதர்
அம்பாள் ; பொன்னம்மை
அமைவிடம் (ஊர்) ; தென்திருப்பேரை , திருநெல்வேலி மாவட்டம்,
தல சிறப்பு ; இது நவ கைலாய தலங்களில் 7வது ஆகும். நலக்கிரக தலங்களில் புதன் ஆட்சி பெற்ற புண்ணியதலமாக கருதப்படுகிறது.
இங்குள்ள பைரவர் ஆறு கைகளுடனும், தனது வாகனமான நாய் இல்லாமலும் காட்சி தருகிறார்.
இங்குள்ள நவக்கிரக சன்னதியில் சூரியன், சந்திரன், குருபகவான், சுக்கிரன்,
ஆகிய நால்வரும், குதிரை வாகனத்தி்ல் எழுந்தருளியுள்ளனர், இது ஒரு எங்கமில்லாத சிறப்பு அம்சமாகும். மேலும், குரு, சுக்கிரன், 8 குதிரைகள் பூட்டிய தேரிலும், சூரியன் 7 குதிரைகள் பூட்டிய தேரிலும் , சந்திரன் 10 குதிரைகள் பூட்டிய தேரிலும் காட்சி அருள்கின்றனர், இவ் வமைப்பு எத்தலங்களிலும் இல்லாத ஒன்று.
புதன் கிரக அனுக்கிரகம் பெற விரும்புவர்கள் இத்தலத்தில் பச்சை வஸ்திரம் சாத்தி புதன் அனுக்கிரக பிரத்தனை மேற்கொண்டால் மிக்க பலன் பெறுவர்.
கொம்பு தோங்காய் ;
இங்குள்ள அம்மாள் சன்னதியில் கொம்பு முளைத்த தேங்காய் ஒன்று இன்றும் உள்ளது. ஆங்கிலேயே கலெக்டராக இருந்த கேப்டன் துரை , ஒரு சமயம் இப்பகுதிக்கு வந்தார், அப்போது சாவடியில் இளப்பாரிய அவர் பக்கத்திலிருந்த ஒரு தென்னம் ேதாப்பிற்கு சென்று ஒரு இளநீர் கேட்டார். அங்கிருந்த விவசாயி, இந்த தோப்பில் உள்ள இளநீர்கள் சுவாமி கைலாச நாதரின் அபிசேகத்திற்கு பயன்படுத்தக் கூடியதால், இந்த இளநீர்கள் குடிப்பதற்கு தர இயலாது, என்று கூறிவிட்டார். இதை அறிந்த கேப்டன் துரை, விவசாயிடம்,இந்த தோப்பிலுள்ள இளநீருக்கென்ன கொம்பா முளைத்திரு்க்கிறது, சும்மா பறித்து போடு, என்றாராம், விவசாயியும் இதனை மறுக்க முடியாமல், இளநீர் பறித்துப்போட்டாராம். உடனே அந்த இளநீரில் மூன்று கொம்புகள் முளைத்திருப்பதை அந்த ஆங்கிலேய துரை கண்டுட அதிர்ச்சி யுற்றாராம். உடனே கோவிலுக்கு சென்று தன் தவறுக்கு வணங்கி, மன்னிப்பும் கேட்டுக்கொண்டு, தினசரி பூசைக்காக,26 சல்லிக்காசுகள் வழங்கியதாக வரலாறு, அந்த கொம்பு முளைத்த தேங்காய் இன்னும் அம்மன் சன்னதியில் உள்ளது.
இவ்வலாயம் சுக்கிரனும், புதனும் சேர்ந்திருக்கும் ஊர் என்பதால், இங்கு வந்து வழிபடுவதால் சகல ஐஸ்வரியங்களும் கிட்டும் என்பது பக்தர்களின் அசையாத நம்பிக்கை.
இக்கோவிலிலுள்ள வல்லப கணபதி, கன்னிமூல கணபதி, சித்தி விநாயகர் ஆகியோர் தனிதனி சன்னதியான அருள்பாலிக்கின்றனர்,
இவ்வூர் தென்மாவட்ட நகராக அன்று கருதப்பட்டதால், இதற்கு தென் திரு பேர் ஊர் என அழைக்கப்பட்டு, தற்போது தென்திருப்பேரை என்று வழங்கி வரலாயிற்று.
திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாயம்
தொகுப்பு ; வை. பூமாலை, சுந்தரபாண்டியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக