சனி, 2 ஏப்ரல், 2016

கீதை கூறும் தோல்வியும் வெற்றியே !


கீதை கூறும் தோல்வியும் வெற்றியே ! 


  ஸ்ரீகிருஷ்ணர் மகாபாரத யுத்தத்தில் பாண்டவர்களுக்காக எவ்வளவோ விட்டுக் கொடுத்து , தோற்றுப் போவதன் மூலம் வெற்றி வாகை சூடியிருக்கிறார், என்பது கீதை சொல்லும் ரகசியம் தோல்வியும் ஒரு வெற்றிக்கான வழியே ! வெற்றி ! வெற்றி !! வெற்றி !!!..... என்று ஜெயிப்பதற்கான அத்தனை சூட்சுமங்களையும் செய்தளிருனார் ஸ்ரீ கண்ணபிரான், அதே நேரம் விட்டுக் கொடுத்தும் , தோல்வியின் மூலமாகவும் செயிக்கலாம் என்பதை உலகுக்கு உணர்த்தினார், 
        அட, அது எப்படி? தோற்றால் எப்படி வெற்றி பெற்றதாகும்? என்று எவரெனும் கேட்கலாம். கணவன் , மனைவிக்கு இடையே சின்னதாக ஓர் ஊடல், லேசாக வந்த பிரச்சனையில் இரண்டு பேருமே கிழக்கு மேற்காக பார்த்து முறைத்துக் கொள்கின்றனர். அப்போது சமரசம் செய்யும் கணவனோ, அல்லது மனைவியோ, தோற்றுப் போனதாக ஆகிவிடும்,யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து சமரசத்திற்கு இறங்கினால் அது தோற்றுப் போனதாக - தோல்வி அடைந்ததாக ஆகிப் போகும், ஆனால், சமரசத்திற்கு வருபவரோ, விட்டுக் கொடுப்பவரோ, தோற்றுப் போனதாக தெரியலாமே தவிர, உண்மையில் வெற்றி பெற்றவர் யார் என்று பார்த்தால், அவர்தான் என்பது புரிய வரும். இதைத்தான் " பத்தினியிடம் தோற்பான் பரம ரசிகன் " என்பார்கள். ஜெயிப்பதில் மூன்று வகை உண்டு. 
   ஜெயம் என்கிற வெற்றி, என்பது ஒன்று. தோல்வி என்பது மற்றொன்று, வெற்றியோ, தோல்வியோ .. அதை ஆழ்ந்து ரசிக்கின்ற மனோபாவம் ரொம்பவே முக்கியம், இது மூன்றாவது. 
கத்தியின்றி, ஆயுதம் இன்றி செய்யும் கொலை: 
    உலகில் எல்லோரும் எப்போதும், வெற்றிக் கனியை பறித்தே ஆக வேண்டும். என்று தான் விரும்புவார்கள். இந்த இரண்டும் இல்லாமல், வெற்றியோ, தோல்வியோ .... அதை அனுபவிக்க வேண்டும். அனுபவித்து ரசிக்க வேண்டும் என்கிற சிந்தனை ஒன்று உள்ளது. ஆக, எது வந்தாலும், ரசிகன் எனும் நிலையில் இருப்பது உன்னதமானது. மேலும் கீதை கூறுவது, ஒருவனைக் கொல்ல கத்தியின்றி ஆயுதமின்றி கொல்ல முடியும் என்கிறார் கிருஷ்ணன் ஒருவரைக் கத்தியால், குத்தித்தான் கொல்ல வேண்டும் என்றில்லை. அரிவாளால் வெட்டித்தான் சாகடிக்க வேண்டும் என்பது கிடையாது. இன்றைக்கு இருக்கிற நவீன ஆயுதங்களால் அழிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. கத்தியின்றி, ரத்தமின்றி ஒருவரைக் கொன்று போடலாம், எப்படி? முடியும், பகவான் ஸ்ரீகிருஷ்ணன், அர்ச்சுனனுக்கு அப்படித்தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார், இதைவிட எளிமையான வழி இல்லை. உன் வில் தருகிற வலியை விட, உன் அம்பு பாய்ந்து தருகிற இம்சையைவிட நான் சொல்லும் முறையில் தாக்கலாம். அப்படித் தாக்கினால், அதை அவர்களால் தாங்கிக் கொள்ளவே முடியாது. துவண்டு சரிவார்கள். ஆனால், என்ன..... உன்னை பொறுத்தவரையில் அவர் இறந்து விட்டார், ஆனால், அவர் உடலால் இறந்திருக்க மாட்டார், . என்று கிருஷ்ணன் சொல்ல,, தலை கிறுகிறுத்து போனார் அர்ச்சுனன். ஆனால் அர்ச்சுனன் இந்த குழப்பான சூழலில் " கண்ணா ! நானோ , போர்முனையில் எதிரியை தாக்கவதற்கு தகுந்த தருணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். ஆனால் நீயோ என்னை ஏதேதோ சொல்லி குழப்புகிறாய், நான் என்ன தான் செய்ய வேண்டும் அதையேனும் சொல் என்றான் அர்ச்சுனன். நீ ஒன்றும் செய்ய வேண்டாம், நேர்மையும், உண்மைக்குணமுமாக இருப்பவரை சத்தியசீலரை, மரியாதைக்குறைவாக ஒரே ஒரு வார்த்தை பேசிவிடு, அது கிட்டதட்ட அவரைக் கொன்றதற்கு சமம்தான் " என்றார் பகவான். அதாவது மரியாதைக்குரிய நபரை எல்லோரும் போற்றிக் கொண்டிருக்கிற, கொண்டாடுகிற ஒருவரை, இறைபக்தியுடன் இருப்பவரை, எல்லோரிடமும், அன்பும் பிரியமுமாக பழகுபவரை கொல்வதற்கு வேறெதும் செய்ய வேண்டாம், அவரை அவச் சொல்லாக, மரியாதை கொடுக்காமல், பேசினால் போதும், அதுவே..... அவர் இறந்ததற்கு சமம் , அவர் உடலால் இறக்காதிருந்தாலும், சுய மரியாதை இழந்ததின் பொருட்டு அவரது உள்ளம் இறந்த நிலை அடைந்தது போன்றே நிலைக்கு உட்படுவார் எனவே அத்தகையதுதான் கத்தியின்றி, ஆயுதம் இன்றி செய்யும் கொலை " என்பதை உலக மக்களுக்கு எப்படி உணர்த்தி விட்டார், பகவான். அவமரியாதையாக சொல்கிற ஒற்றை வார்த்தையே ஒருவரை கொல்வதற்கு போதுமானது. அதனால் அவன் இறப்பான். இறக்காமல் இருப்பான் உடலால், என்பதாக சொன்னார். அதேவிதமாக, இறைவனின் பிறப்பை அவனுடைய அவதாரத்தை ஆழ்வார்களும், முன்னோர்களும் போற்றியுள்ளனர், அதாவது பிறக்காத எம்பெருமான், பிறக்கிறான், என்று சொல்லி பூரிக்கின்றனர், 











திருச்சிற்றம்பலம் 
தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம் 
மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு

 http://vpoompalani05.blogspot.in/ 
http://vpoompalani05.wordpress.com 
http://www.vpoompalani05.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக