செவ்வாய், 12 ஏப்ரல், 2016

சேரன்மாதேவி சிவன் கோவில் :

தென் தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்


சித்தர்களில் முதன்மையானவரும், கும்பமுனி, குறுமுனி என்று அழைக்கப்பட்டவருமான அகஸ்திய மகரிஷியின் சீடர்களில் முக்கியமானவர் உரோமச ரிஷி.

இவருக்கு சிவபெருமானை நேரில் தரிசித்து அவருடைய அருளாசியைப் பெற வேண்டும் அப்படியே முக்தியடைந்து விட வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது. இவரது தன் ஆசையை தனது குருவான அகத்திய முனிவரின் மூலமாகவே நிறைவேற்றிக் கொள்ள விரும்பி அகஸ்திய முனிவரிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தார்.

அகத்திய மகரிஷியும் அவரின் ஆசையை நிறைவேற்ற அவரிடம் உறுதியளித்தார். இதன்படி அகஸ்திய முனிவர் தாமிரபரணி ஆற்றில் ஒன்பது தாமரை மலர்களை மிதக்க விடுவதாகவும், இந்த ஒன்பது தாமரை மலர்களும் தாமிரபரணி ஆற்றங்கரையின் ஓரத்தில் ஒவ்வொன்றாக கரை ஒதுங்கும் என்றும், அவை கரை ஒதுங்கும் இடங்களில் சங்கு முகத்தினால் நீராடி நவக்கிரகங்களின் வரிசையில் சிவபெருமானை வழிபட்டால் சிவபெருமானின் காட்சி கிடைத்துவிடும் என்றும் அதன் மூலம் அவர் முக்தி அடையலாம் என்றார்.

அதன் பிறகு ஒன்பது தாமரை மலர்களை தாமிரபரணி ஆற்றில் மிதக்க விட்டார். உரோமச ரிஷியும் அந்த மலர்களைத் தொடர்ந்து சென்றார்.

அந்த மலர்களில் ஒன்று பாபநாசம் எனும் இடத்தில் கரை ஒதுங்கியது. உரோமச ரிஷியும் அகத்திய மகரிஷி சொன்னபடி அந்த இடத்தில் சிவபெருமானுக்குப் பூஜைகள் செய்து வழிபட்டார்.

இதையடுத்து ஒவ்வொரு மலர்களும் சேரன் மகாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, திருவைகுண்டம், தென் திருப்பேரை, ராஜபதி. சேர்ந்த பூ மங்கலம் எனும் ஊர்களின் தாமிரபரணி ஆற்றங்கரையில் கரை ஒதுங்கியது. அந்த ஊர்களிலெல்லாம் உரோமரிஷி சிவபெருமானை வழிபட்டார்.



அகஸ்திய முனிவர் சொன்னபடி சிவபெருமான் உரோம ரிஷிக்குக் காட்சியளித்து அவருக்கு முக்தியும் அளித்தார்.

உரோமரிஷி தாமிரபரணி ஆற்றங்கரையில் தாமரை மலர்கள் வழிபட்ட ஊர்களில் சிவாலயங்கள் இருக்கின்றன. இந்த ஒன்பது ஊர்களும் நவ கைலாயங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் முதல் மூன்று ஊர்களான பாப நாசம், சேரன் மகாதேவி, கோடக நல்லூர் ஆகிய இடங்கள் மேலக்கைலாயங்கள் என்றும், அடுத்த மூன்று ஊர்களான குன்னத்தூர், முறப்பநாடு, திருவைகுண்டம் ஆகியவை நடுக்கைலாயங்கள் என்றும், கடைசி மூன்று ஊர்களான தென்திருப்பேரை, ராஜபதி, சேர்ந்தபூமங்கலம் கீழ்க்கைலாயங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

இந்த நவ கைலாய ஊர்களிலுள்ள சிவாலயங்களில் வழிபாடு செய்பவர்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்கும் என்று இந்துமத புராணங்கள் சொல்கின்றன. தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றங்கரையில் இந்த நவ கைலாயக் கோவில்கள் உள்ள ஒன்பது ஊர்களும் இருக்கிறது. 


  இது பற்றிய கட்டுரையாக முதலில் பாபநாசம் கைலாசநாதர் பற்றிய கட்டுரையை சாலியர் குரலில் மார்ச் 9ல் பின் கோடங்கநல்லூர் அபிமுக்தீஸ்வரர் பற்றிய கட்டுரை ஏப்ரல் 10ல் வெளியிடு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மீதமுள்ள 7 தலங்களின் விபரங்கள் சேகரித்துக் கொண்டுள்ளேன், அதன் வரலாறு பற்றிய செய்திகளை தொடர்ச்சியாக பதிய உள்ளேன். 
         நவ கைலாயங்களுக்குச் சென்று சிவபெருமானை வழிபடுவோம். சிவபெருமான் அளிக்கும் அனைத்துப் பலனையும் பெறுவோம்.

மூன்றாவது தலமாக வருவது சேரன்மாதேவி சிவன் கோவில் :


இது நவகைலாச தலங்களில் இரண்டாவது தலமாகும், இதுவும் தாமிரபரணி தென்கரையில் அமைந்துள்ளது.

மூலவர் ... அம்மநாதர் உடன்உறை ஆவுடைநாயகி
ஸ்தல விருட்சம் ... பலா மரம்
தீர்த்தம் .... தாமிரபரணி

ஸ்தல சிறப்பு
இத்தலம் நவ கைலாயங்களில் இரண்டாவது தலம், இங்கு கொடிமரம்அருகில் நின்று  விலகிய நந்தியையும், சிவனையும் தரிசிக்கலாம்.

பிராத்தனை ; அரிசி வியாபாரம் செழிக்க சுவாமிக்கு அரிசிநேர்த்திக்கடன்  செலுத்துகின்றனர், சுவாமி அம்மாளுக்கு வஸ்திரம் சாத்தி அபிசேகம் செய்து நேர்த்திக் கடன் செய்கின்றனர்.

பெருமை ;
 தாமிரபரணி நதியின் தென்கரையில் அமைந்துள்ள இத்தலத்தில் சிவனை அம்மையப்பர் என்று அழைக்கின்றனர், சன்னதிக்குவலப்புறம் ஆவுடைநாயகி அருள் புரிகிறாள்.
 சிவன் அம்மாள் திருமணக் கோலத்தை இக்கோவிலில் நந்தனார் தரிசிக்க சென்றபோது, கொடிமரத்தின் கீழே நந்தனார் வணங்கியபடி இருக்க, நந்தி சற்று விலகி இருப்பது இக் கோவிலின் சிறப்புத் தன்மையாகும். கொடிமரம் அருகில் நின்று விலகிய நந்தியையும், சிவனையும் தரிசிக்கலாம்,
   இக்கோவிலைக் கட்டிய சகோதரிகள் நெல் குத்தி, அரிசி புடைக்கும் சிற்பம் முன் மண்டபத்தில் தூணில் காணலாம், மற்றொரு தூணில் உரோமசர் முனிவரின் சிற்பத்தையும் காணலாம்,
 வரலாறு;
சிவதரிசனம் பெற விரும்பிய உரோமசர் முனிவர் அகத்தியரின் ஆலோசனப்படி தாமிரபரணி நதியில் ஒன்பது மலர்களை இட்டார்,அதில் இரண்டாவது மலர் ஒதுங்கிய இடமே இத்தலம். இங்கு உரோமர் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வணங்கினார், அது பிற்காலத்தில் கோவில் இன்றி ஒரு அரசமரத்தடியில் இருந்தது. இப்பகுதியில் வசித்த சிவபக்தையான இரு சகோதரிகள் ெநல்குத்தி, அரிசி புடைக்கும்  தொழில் செய்து பிழைத்து வந்தனர், இவர்கள் தினமும் இந்த லிஙகத்திற்கு பூசை முடித்தபின்னரே தனது பணிகளை செய்யும் பழக்கம் உள்ளனர். இவர்களின் மனதில் இந்த லிஙகத்திற்கு ஒரு கோவில் கட்ட வேண்டுமென ஒரு ஆதாங்கம் இருந்து வந்தது, ஆனால் தஙகளிடம அந்த அளவிற்கு செல்வம் இல்லாதது கண்டு மனம் வருந்தி இருந்தனர், இருப்பினும் எப்படியும் கோவில் கட்ட வேண்டும் என்ற ஆதாங்கத்தில் தங்களுக்கு வரும் வருமானத்தில் சிறுசிறு தொகையாக சேர்த்து வைத்து வந்தனர்,  இவர்களின் பக்தியை அறிந்த கைலாசநாதர், ஒருநாள் சிவ
னடியார் வடிவில் இவர்களின் இல்லத்திற்கு வந்தார், அவரை சகோதரிகள் இன்முகத்தோடு வரவேற்று அமுது படைக்க அழைத்தனர், அப்போது வீட்டில் ஒரு தீபம் கூட எரியவில்லை. விளக்கு எரியாத வீட்டில் எவ்வாறு பிரகாசம் இருக்கும், மங்கலம் எப்படி இருக்கும் எனவே ஈசனார் மங்களம் இல்லாத வீட்டில் நான் உணவருந்த மாட்டேன் என்று கூறினார், உடனே தீபம் ஏற்ற  விளக்கை தேடினர், ஆனால் அவசரத்தில் அதுவும் கிடைக்கவில்லை. உடனே பூசைக்கு வைத்திருந்த தேங்காயை உடைத்து அதில் தீபம் ஏற்றினர், இதனை மகிழ்ந்த சிவனார், சுய ரூபம் காட்டி அவர்களை ஆசீர்வதித்தார், உடனே இவர்
களுக்கு செல்வம் பெருகியது.உடனே தாங்கள் வணங்கி வந்த லிஙகத்திற் கோவில்கட்டி முடித்தனர், அவரகள் கட்டிய கோவி்ல்தான் இன்றளவும் உள்ளது.
 எனவே பக்தியுடன் தொடர்நது வழிபட்டு வந்தால், சிவன் அருள்கிட்டும்

திருச்சிற்றம்பலம்

தொகுப்பு ; வை. பூமாலை, சுந்தரபாண்டியம்
நவகைலாச தலங்கள் இன்னும் தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக