புதன், 13 ஏப்ரல், 2016

தில்லை வாழ் அந்தணர்

தில்லை வாழ் அந்தணர் - Thillai vaazh anthanar

(குரு பூசை சித்திரை முதல் நாள் ( இன்று))

"தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்"– திருத்தொண்டத்தொகை

திருமூலத்தானலிங்கத்துக்கும் சபாநாதருக்கும் வேத சிவாகம விதிப்படி பூசை முதலியவை செய்யும் பிராமணர்கள் தில்லைவாழந்தணர் என்று சொல்லப்படுவர்கள். அவர்கள் மூவாயிரவர். அவர்கள் குற்றமில்லாத வமிசத்தில் உதித்தவர்கள். பாவமென்பது சிறிதுமில்லாதவர்கள்; புண்ணியங்களெல்லாம் திரண்டு வடிவெடுத்தாற்போன்றவர்கள். கிருகத்தாச் சிரமத்தில் ஒழுகுகின்றவர்கள். இருக்கு யசுர் சாமம் அதர்வம் என்னும் நான்கு வேதங்களையும், சிக்ஷை வியா கரணம் சந்தோ விசிதி நிருத்தம் சோதிடம் கற்பம் என்னும் ஆறு வேதாங்கங்களையும், மீமாஞ்சை நியாயம் புராணம் மிருதி என்னு நான்கு உபாங்கங்களையும் ஓதியுணர்ந்தவர்கள். ஆகவனீயம் தக்ஷிணாக்கினி காருகபத்தியம் என்னும் மூன்றக்கினிகளையும் விதிப்படி வளர்க்கின்றவர்கள். ஓதல் ஓது வித்தல் வேட்டல் வேட்பித்தல் ஈதல் ஏற்றல் என்னும் அறுதொழிலினாலும் கலியை நீக்கினவர்கள். விபூதி உருத்திராக்ஷம் என்னுஞ் சிவசின்னங்களை விதிப்படி சிரத்தையோடு தரிக்கின்றவர்கள். சிவபெருமானுடைய திருவடிக்கண்ணே இடையறாது பதிந்த அன்பே தங்களுக்குச் செல்வமெனக் கொள்கின்றவர்கள்.

அவர்கள் சமயதீக்ஷை விசேஷதீக்ஷை நிருவாணதீக்ஷை ஆசாரியாபிஷேகம் என்னுநான்கும் பெற்றவர்கள். காமிக முதல் வாதுளமிறுதியாகிய சைவாகமங்கள் இருபத்தெட்டையும் ஓதியுணர்ந்தவர்கள். அச்சைவாகமங்களால் வீட்டு நெறிகள் இவையென உணர்த்தப்படும் சரியை கிரியை யோகம் ஞானம் என்னும் நான்கு பாதங்களையும் வழுவா வண்ணம் அநுட்டிக்கின்றவர்கள்.

அவர்கள் சபாநாயகர் "இவ்விருடிகளில் நாம் ஒருவர்" என்று அருளிச்செயப்பெற்ற பெருமையையுடையவர்கள். அதுமட்டோ, தியாகேசர் சுந்தரமூர்த்திநாயனாருக்குத் திருத்தொண்டத்தொகை பாடும்படி அருளிச்செய்தபோது "தில்லைவாழந்தணர்த மடியார்க்கு மடியேன்" என்று அவர்களைத் தமது அருமைத்திருவாக்கினாலே எடுத்துச் சொல்லியருளினார். இங்ஙனமாயின், அவர்களுடைய அளவிறந்த மகிமையை நாமா சொல்ல வல்லம்.

கோயில் எனச் சைவ உலகில் போற்றப் பெறுவது தில்லைப் பெருங்கோயில். அத்திருக்கோயிலில் உள்ள சிற்றம்பலத்தில் கற்பனைக்கு எட்டாத சோதிப் பிழம்பான இறைவன் இரக்க்மே வடிவாக இருந்து திருநடம்புரிகிறார். அங்கு இறைவனுக்கு தொண்டு செய்வோர் தில்லை வாழந்தணர். இவர்கள் முத்தீவேள்வி செய்பவர். அறத்தைத் துணையாகக் கொண்டு, மெய்யியல் கொள்கைகளைப் பின்பற்றுபவர். அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்மறைகளையும் பயின்றவர். குற்றமற்ற ஒழுக்கம் உடையவர். திருநீற்றினை உயர்ந்த செல்வம் எனக் கொள்பவர். சரியை, கிரியை, யோகம், ஞானம் முதலிய நான்கினையும் அறிந்தவர். தானம் கொடுக்கும் தகைமை உடையவர். தவம்புரியும் தன்மை மிக்கவர். உலக மக்கள் புகழும் படியான மானமும் பொறுமையும் பெற்றவர். திருத்தொண்டத் தொகை தென் தமிழின் பயனாய் உள்ளது. அதில் தில்லைவாழந்தணர்களைச் சுந்தரர் முதலில் வைத்துப் பாடினார். தில்லை வாழந்தணர்களை ஊறு இன் தமிழால் உயர்ந்தார் என திருஞானசம்பந்தர் குறித்துள்ளார். இக்கோயில் மகுடாகமப்படி பூசை நடைபெறுவது எனத் தில்லைக் கலம்பகத்தில் பதிவு செய்துள்ளனர் இரட்டைப் புலவர்கள்.

திருமூலத்தானலிங்கத்துக்கும் சபாநாதருக்கும் வேத சிவாகம விதிப்படி பூசை முதலியவை செய்யும் பிராமணர்கள் தில்லைவாழந்தணர் என்று சொல்லப்படுவர்கள். அவர்கள் மூவாயிரவர். அவர்கள் குற்றமில்லாத வமிசத்தில் உதித்தவர்கள். பாவமென்பது சிறிதுமில்லாதவர்கள்; புண்ணியங்களெல்லாம் திரண்டு வடிவெடுத்தாற்போன்றவர்கள். கிருகத்தாச் சிரமத்தில் ஒழுகுகின்றவர்கள். இருக்கு யசுர் சாமம் அதர்வம் என்னும் நான்கு வேதங்களையும், சிக்ஷை வியா கரணம் சந்தோ விசிதி நிருத்தம் சோதிடம் கற்பம் என்னும் ஆறு வேதாங்கங்களையும், மீமாஞ்சை நியாயம் புராணம் மிருதி என்னு நான்கு உபாங்கங்களையும் ஓதியுணர்ந்தவர்கள். ஆகவனீயம் தக்ஷிணாக்கினி காருகபத்தியம் என்னும் மூன்றக்கினிகளையும் விதிப்படி வளர்க்கின்றவர்கள். ஓதல் ஓது வித்தல் வேட்டல் வேட்பித்தல் ஈதல் ஏற்றல் என்னும் அறுதொழிலினாலும் கலியை நீக்கினவர்கள். விபூதி உருத்திராக்ஷம் என்னுஞ் சிவசின்னங்களை விதிப்படி சிரத்தையோடு தரிக்கின்றவர்கள். சிவபெருமானுடைய திருவடிக்கண்ணே இடையறாது பதிந்த அன்பே தங்களுக்குச் செல்வமெனக் கொள்கின்றவர்கள்.

     அவர்கள் சமயதீக்ஷை விசேஷதீக்ஷை நிருவாணதீக்ஷை ஆசாரியாபிஷேகம் என்னுநான்கும் பெற்றவர்கள். காமிக முதல் வாதுளமிறுதியாகிய சைவாகமங்கள் இருபத்தெட்டையும் ஓதியுணர்ந்தவர்கள். அச்சைவாகமங்களால் வீட்டு நெறிகள் இவையென உணர்த்தப்படும் சரியை கிரியை யோகம் ஞானம் என்னும் நான்கு பாதங்களையும் வழுவா வண்ணம் அநுட்டிக்கின்றவர்கள்.

அவர்கள் சபாநாயகர் "இவ்விருடிகளில் நாம் ஒருவர்" என்று அருளிச்செயப்பெற்ற பெருமையையுடையவர்கள். அதுமட்டோ, தியாகேசர் சுந்தரமூர்த்திநாயனாருக்குத் திருத்தொண்டத்தொகை பாடும்படி அருளிச்செய்தபோது "தில்லைவாழந்தணர்த மடியார்க்கு மடியேன்" என்று அவர்களைத் தமது அருமைத்திருவாக்கினாலே எடுத்துச் சொல்லியருளினார். இங்ஙனமாயின், அவர்களுடைய அளவிறந்த மகிமையை நாமா சொல்ல வல்லம்.

திருச்சிற்றம்பலம்

தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக