திருக்குறிப்புத் தொண்டர் - Thirukurippu thondar
குரு பூசை நாள் சித்திரை - சுவாதி 22/04/16 வெள்ளிக்கிழமை
சிவனடியார்களின் அழுக்கு ஆடைகளை துவைத்து கொடுக்கும் சிவப்பணி செய்து வந்தவர், திருக்குறிப்பு தொண்டர் என்ற சிவனடியார், தொண்டை நாட்டில் அன்னை உமாபதியார் 32 அறங்களையும் புரிந்து இறைவனை வழிபட்ட காஞ்சயம்பதி என்ற தலத்தில் வண்ணார் என்ற ஏகாலிய குலத்தில் தோன்றியவர் இத்திருத்தொண்டர், சிவனடியார்களின் குறிப்பு அறிந்து, அவர்களின் அழுக்கு ஆடைகளை துவைத்து சலவை செய்யும் திருப்பணிையை நேர்மையோடும், சிவபக்தியோடும் செய்து வந்ததால், சிவனடியர்கள் இவரை திருக்குறிப்பு அறிந்த தொண்டர் என அழைத்தனர். அடியார்களின் ஆடைகளின் மாசு நீக்குவதால், தனது பிறப்பின் மாசு நீங்கும் என்ற எண்ணத்தில் அப்பணியே சிறந்த தெய்வீகப்பணி என்று சிரத்தையுடன் செய்து வந்தார்.இவரது சிவபணியை உலகறிய செய்யவேண்டும் என்ற நோக்கில் இறைவரே ஒரு நாள் இவரது இல்லம் நோக்கி சிவனடியார் உருவில் வந்தார், சிவனடியாரைக்கண்ட திருக்குறிப்பு தொண்டர், அவருடைய அழுக்கு ஆடைகளையும் வெண்ணீர் அணிந்த திருமேனியினையும் கண்டு அவருடைய அழுக்கு ஆடையினை துவைத்து தூய ஆடையாகத்தருகிறேன் என்று அவருடைய ஆடைகளை கேட்டார், அதற்கு சிவனடியார் உருவில் இருந்த இறைவர், எனக்கு இருப்பதோ ஒரே ஆடை இதனை சூரியன் மறைவதற்குள் துவைத்து கொடுக்க முடியுமா? என்று கேட்டதற்கு அதற்குள் எப்படியும் தந்துவிடுவேன் என்று உறுதியளித்து சிவனடியாரின் ஆடையை பெற்றுக்கொண்டு நீரோடைக்கு சென்று சலைவை செய்யும் பணியை துவங்கினார், உடனே இடியும் மின்னலமாக பெருமழை பெய்ய துவங்கியது,துவத்து வைத்த ஆடையை உலர வைக்க முடியாமல் நாயனார் மனம் கலங்கினார், பொழுது அடையும் நேரம் நெருங்க நெருங்க, நாயனார் மனம் நொந்து மனம் கலங்கி செய்வதறியாது, திகைத்தும் நான் சிவனடியாரிடம் பொய்யனாகி விட்டனே, அடியார் இந்நேரம் ஆடையின்றி குளிரில் நடுங்குவாரே என்செய்வது என பதறினார்,இறைவனிடம் வேண்டியும் பலன் இல்லை, மழையும் விடவில்லை, எனவே தன்உயிரை மாய்த்துக் கொள்ள விரும்பி, துணி துவைக்கும் கல்லில் தன் தலையை முட்டி மோதி தன் இன்னுயிரை விட எத்தனித்தார், இது கண்ட இறைவர் காலம் தாழ்த்தாது உடனே நாயனார் முன் உமாபதியோடு காட்சி தந்து, அடியாரே உமது சிவத்ெதாண்டின் பக்தி கண்டு மகிழ்ந்தோம், இனி எம்மோடு சிவலோகம் வருக என்று கூறி மறைந்தார், திருக்குறிப்பு தொண்டரும் இறைவரைக்கண்ட மகிழ்ச்சியில் தரையில் விழுந்து வணங்கி பெருமகிழ்ச்சி பெற்றார், சில காலம் இருந்து மேலும் சிவத்தொண்டு செய்து, சித்திரை திங்கள் சுவாதி நட்சத்திரத்தில் சிவபதவி அடைந்தார்.
அவர்தம் தொண்டினை சிறப்பித்து அன்னாரின் சிவபதவி அடைந்த நன்னாளில் குருபூசை செய்து நாமும் சிவ அருள் பெறுவோம்,
திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய ஓம்
தொகுத்தவர் ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக