சனி, 9 ஏப்ரல், 2016

பாட்டி வைத்தியம் ( வாழைக்காய் , துளசி)


வாழைக்காயின் மருத்துவ குணங்கள்!

அன்றாடம் சமைக்கும் காய்கறிகளில் முக்கியப் பங்கு வகிப்பது வாழைக்காய் எனலாம். சமையலில் பெரும்பாலும் வாழைக்காயை வறுவல் செய்தும், பாெறியல் செய்தும், கூட்டு செய்து சாப்பிடுவதுடன், சாம்பாரிலும் பாேட்டு சாப்பிடுவர். ஆனால், வாழைக்காயில் உள்ள மருத்துவ குணம் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? 

இதோ வாழைக்காயின் மருத்துவ குணங்கள்...

வாழைக்காய்களில் பல வகைகள் இருந்த பாேதிலும், மாெந்தன் எனப்படும் நாட்டு வாழைக் காய்களையே சமையலுக்காக பெரும்பாலும் பயன்படுத்து கிறோம் மற்ற வகை வாழைக்காய்களையும் சாப்பிடலாம். அவை பரவலாகக் கிடைப்பதில்லை.
வாழைக்காய்களில் அதிக அளவு இரும்புச்சத்து இருப்பதுடன், மாவுச்சத்தும் உள்ளது. எனவே வாழைக்காய் அதிகம் சாப்பிடுவதால் உடல் பருமனாகும். நல்ல வளர்ச்சியையும் அளிக்கும். வாழைக்காய் சாப்பிடுவதால், பசி அடங்கும். மேலும் வாழைக்காயுடன் மிளகு, சீரகம் சேர்த்து சமைப்பது மிகவும் நல்லது. நீரிழிவு நாேய் உள்ளவர்களுக்கு பத்திய உணவாக வாழைக் கச்சல் வழங்கப்படுகிறது. வாழைக்காயின் மேல் தாேலை மட்டும் மெலிதாகச் சீவியெடுத்து விட்டு உட்புறத் தாேலுடன் சமைப்பதே சிறந்தது. அப்பாேதுதான் தாேலில் உள்ள சத்துகள் உடலில் சேரும்.
வாழைக்காயின் மேற்புறத் தோலை சீவியெடுத்து, துவையலாகச் செய்து சாப்பிடுவதால் இரத்த விருத்தியும், உடல் பலமும் ஏற்படுகிறது. வயிறு இரைச்சல், கழிச்சல், வாயில் நீர் ஊறுதல், இருமல் பாேன்ற நாேய்களைப் பாேக்க வாழைக்காய் ஏற்றதாகும். என்றாலும் வாழைக்காய் சாப்பிடுவதால், வாய்வு ஏற்படக்கூடும். எனவே வாய்வுத் தாெல்லை இருப்பவர்கள் வாழைக்காயை அளவுடன் எடுத்துக் காெள்ளலாம். அல்லது தவிர்க்கலாம்.அதே போல், வாழைப்பிஞ்சு சாப்பிடுவது பத்தியத்திற்கு ஏற்றது. என்றாலும், மலத்தை இறுக்கி விடும் என்பைதயும் கவனத்தில் காெள்ள வேண்டும். பச்ைச வாழைக்காயை சின்ன சின்ன வில்லைகளாக நறுக்கி வெயிலில்; உலர்த்தி, மாவாக்கி உப்புடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அஜரீணம், புளிச்ச ஏப்பம் ஆகியவை நீங்கும். இத்துடன் வாழைப்பூவும், வாழைத்தண்டும் சிறு நீர் கல் அடைப்பிற்கு ஏற்றது என எல்லோரும் அறிந்ததே,


அருமருந்தான துளசி

துளசி என்றால் எல்லாேருக்கும் தெரியும். அதன் மருத்துவ குணங்கள் ஏராளம். அதற்கு ஆன்மீக மகத்துவமும் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. எல்லாேர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது துளசி செடிதான். அவரவர் வசதிக்கேற்ப சிறிய தாெட்டியில் கூட துளசி செடியை வளர்த்து வரலாம். ஆனால் அதனை கவனமாக பராமரிப்பது அவசியம்.
எளிதாகக் கிடைக்கும் அந்த துளசியில்தான் எத்தனை எத்தனை மகத்துவங்கள்.

 அவற்றில் ஒரு சில உங்களுக்காக.

துளசிச் செடிைய ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தாெடர்பான பிரச்சனைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது. ஜரீண சக்தியும், புத்துணர்ச்சிையயும் துளசி இலை மூலம் பெறலாம். வாய் துர்நாற்றத்தையும் போக்கும்.நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசிைய உட்ெகாள்ளலாம்.
துளசி இலையைப் பாேட்டு ஊற வைத்த நீரை தாெடர்ந்து பருகி வந்தால் நீரழிவு எனப்படும் சர்க்கைர வியாதி நம்மை நாடாது.கோடை காலம் வரப்பாேகிறது. வியர்வை நாற்றமும் கூடவே வந்துவிடும். அதனைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே காெஞ்சம் துளசி இலையைப் பாேட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றமா உங்களிடமா? ஜாேக் அடிக்காதீங்க. தாேலில் பல நாட்களாக இருக்கும் ப்டை, சாெரிகைளயும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும். எப்படித் ெதரியுமா? துளசி இலையை எலுமிச்சைசாறு விட்டு நன்கு மை பாேல் அரைத்து அந்த விழுதை தாேலில் தடவி வந்தால் படை சாெரி இருந்த இடம் தெரியாமல் மறையும்.
சக்கரை நோய் வந்தவர்களும் துளசி இலையை மென்று திண்ணலாம். இதனைச் செய்து வந்தால் சர்க்கரை அளவு கட்டுப்படும். மருந்து மாத்திரை மூலம் செய்ய முடியாததை இந்த அருமருந்தான துளசி செய்து விடும். சிறுநீர் காேளாறு உடையவர்கள், துளசி விதையை நன்கு அரைத்து உட்காெண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சனை சரியாகும்.

திருச்சிற்றம்பலம
தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்
நன்றி ; வீட்டு வைத்தியகுறிப்புக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக