நவ கைலாசம்
முறப்பநாடு கைலாச நாதர்
அம்பாள் ; சிவகாமியம்மாள்
அமைவிடம் (ஊர்) ; முறப்பநாடு, திருநெல்வேலி மாவட்டம், தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 40 கி,மீ். தூரத்தில் உள்ளது.
தலச்சிறப்பு ;
இத்தலத்திலுள்ள சுவாமிக்கு எதிரில் உள்ள நந்தி, குதிரைத்தலையுடன் காணப்படுகிறார், இத்தலத்திலுள்ள பைரவர் சன்னதியில் இரட்டை பைரவர் உள்ளனர்
பிராத்தனை ; இது ஒரு நவக்கரக தலங்களிலும், குரு தலமாக காணப்படுவதால் குரு பரிகார தலமாகவும், மற்றும், திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் வேண்ட, கல்வி கேள்விகளில் சிறக்க வேண்டி பிராத்தனை
நேர்த்திக்கடன் ; சுவாமி அம்பாளுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி அபிசேகம் செய்தல்.
தல பெருமை ;
குதிரை முக நந்தி, அகத்தியரின் சீடரான உரோமச மகிரிஷிக்கு சுவாமி குருவாக காட்சி கொடுத்த தலம்.இக்கோவிலுள்ள நந்தி குதிரை முகத்துடன் காட்சி அளிக்கப்படுகிறது.
(இதன் வரலாறு இத்துடன் கண்ட லேபில் படத்தில் விளக்கம் காணலாம்)
சோழ மன்னனின் மகள் குதிரை முகத்துடன் பிறக்க, அதன் பாவ நிவர்த்தி வேண்டி சோழ மன்னன் ஒவ்வொரு சிவத்தலங்களாக சென்று பரகாரம் செய்ய வேண்டி இத்தலம் வந்து, இங்குள்ள தாமிரபரணி நதியில் நீராடி, கைலாச நாதரை வேண்ட , அவர் பாவ விமோசனம் அளிக்க நந்தியம் பிரானிடம் கூற் அவர்மூலம் பாவ விமோசனம் பெறும் போது, மன்னன் மகளின் பாவங்கள் கழிய குதிரை முகம் மாறி வரும் போது, அதன் அடையாளமாக நந்தியின்முகம் குதிரை முகமாக மாறியதாம், மன்னன் மகளின முற்பிறவி பாவத்தை நந்தி ஏற்றுக் கொண்டதாம், எனவேதான் நந்தி குதிரை முகத்தோடு காட்சி யருள் செய்கிறார்.
பைரவர் சன்னதியில் உள்ள இரட்டை பைரவர்களில் ஒருவருக்கு நாய் வாகனமும், மற்றவருக்கு நாய் வாகனம் இன்றியும் உள்ளது. இதனால் ஒருவர்
பைரவர் என்றும் மற்றவர் வீர பைரவர் என்றும் அழைக்கப்படுகிறது. இம்மாதிர் வேறு எந்த தலங்களிலும் இரட்டை பைரவர் இல்லாதது இதுவும் இத்தலத்தின் சிறப்பாக கருதப்படுகிறது.
நவக்கிரக தலங்களில் இது குரு தலமாக உள்ளது.இங்குள்ள கைலாசநாதர் குருவின் ஆதிக்கம் பெற்றவர், எனவே கைலாசநாதருககு குரு பரிகார பிராத்தனையும் உண்டு.
நாம் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும், பற்றாக்குறை இருக்கிறதே என்ற கவலை இல்லாத மனிதர்களே இல்லை எனலாம், பற்றாக்குறை நீங்க, ஆசைகளை குறைக்க வேண்டும், ஆசைகள் குறைய வேண்டுகிறோம், வணங்குகிறோம். இந்த சக்தியை இறைவன்தான் தர முடியும், அதே நேரம் நவீன காலத்திற்கேற்ப, சில சாதனங்களும் நமக்கு தேவைப்படுகிறது. எப்படியாவது கையில் நாலு காசு இருந்தால்தானே உலகம் நம்மை மதிக்கிறது. ஆசை குறைந்து, கையில் நாலு காசு தங்க, இக்கோவில் உள்ள கைலாச நாதரிடம் வேண்டிக் கொள்தல் வேண்டும்.
தல சிறப்பு ; தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள தலங்களில் ஐந்தாவது தலமாகும், இது நவ கைலாச தலங்களில் நடுவில் அமைந்துள்ள படியால் இதற்கு நடு கைலாசநாதர் என்ற பெயரும் உ்ண்டு.
இங்கு கைலாச நாதர் குரு அம்சமாக இருப்பதால,இவருக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி, கொண்டக்கடலை நெய்வேத்தியம் செய்யப்படுகிறது.
சிவாமியம்மாள் தனி சன்னதியில் காணப்படுகிறாள். எதிரிலு்ள்ள விநாயகர் சன்னதியில் இரட்டை பிள்ளையார் துவார பாலகர்கள் போலக் காணப்படுவதும் இத்தலத்தின் சிறப்பு.
ஊர் சிறப்பு ; சூர பத்மனும், மற்ற அரக்கர்களும்,செய்த கொடுமையை தாங்க முடியாத முனிவர்கள்,இறைவனிடம் முறையிட்ட இடம் என்பதால் இதற்கு " முறை(யிட்ட)நாடு " என்று முறைப்பநாடு என்ற பெயர் வந்ததாம்.
திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய ஓம்
தொகுப்பு ; வை.பூமாலை,சுந்தரபாண்டியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக