திங்கள், 11 ஏப்ரல், 2016

சுந்தரபாண்டியம் முத்தாலம்மன் பொங்கல் திருவிழா / ஒரு சிறு கண்ணாேட்டம்

சுந்தரபாண்டியம் முத்தாலம்மன் பொங்கல் திருவிழா / ஒரு சிறு கண்ணாேட்டம்


12,4,2016, 13,4,16 செவ்வாய், புதன் இருதினங்கள் அருள்மிகு முத்தாலம்மன் பொங்கல் நடைபெற உள்ளது , இந்த பொங்கல் பற்றிய சிறிய பார்வை நம் முத்தாலம்மன் பொங்கல் வரலாறு என்பது நம் இளைய சந்ததியா் அறிந்திலர் என்பதே என் கருத்து. முத்தாலம்மன் என்ற சக்தி அம்மன் பரசுராமன் வரலாற்றின் ஒரு துணுக்காகும். சனக்கினி என்ற முனிவருக்கும், ரேணுகாதேவி என்றபவருக்கும் புதல்வராக விஷ்ணு பரசுராமராக அவதாரம் எடுத்தார், அப்போது, ரேணுகாதேவி அம்மை காலையில் சூரியஉதயத்தில் நீராடிவிட்டு புது சுடாத மண்குடத்தில் நீர் அஜரமத்திற்கு எடுத்து வருவது வழக்கம். ஒருநாள் இவ்வாறு சென்றபோது காலையில் சூரியன் குளிக்கும் நதியில் உருவம் தெரிய அதனை அம்மையார் இந்த இளைஞன் யார் என சற்று தடுமாற தனது மனம் கலங்க, நேர்ந்தது. பின் புது மண்குடத்தில் தண்ணீர் கோர குடம் கரைந்து விட தான் கற்புத்தன்மை இழந்து விட்டோமோ என்றுபதர, செய்வதறியாது திகைத்து, முனிவர் முன் நின்றார்கள், இதனை அறிந்த முனிவர், ரேணுகாதேவி மனம் தவறி,சிந்தனை தவறிவிட்டாள்,எனவே பரசுராமனை அழைத்து, உடனே உன் அம்மாவின் தலையை கொய்து விட பணித்தார், பரசுராமர், தந்தை சொல் மிறாமல் உடனே தனது பரசு ஆயுதத்தால் கொலை தளத்தில் வெட்டிவிட்டு, தந்தையிடம் சென்று, தந்தையே தங்கள் ஆனைப்படி அன்னையை வெட்டிவிட்டேன், அதற்கு பிரயசித்தமாக தந்தையிடம் வரம் வேண்ட தந்தையும்ஒரு வரம் தந்தருளினார், அவர் தந்த வரம் அன்னையை மறுபடியும் உயிர் பெறச்செய்வது. முனிவரும் உடனே ஒரு மந்திரம் கூறி உன் அன்னையின் உடலை பொருத்தி இந்த மந்திரத்ைத கூறி உன் அன்னை உயிர்த்து எழுவார் என்றார். உடனே பரசுராமர் அன்னையை வெட்டிய இடத்திற்கு சென்று,அன்னையின் உடலை பொருத்த முயன்றார், அப்போது, அக் கொலைக்களத்தில், இன்னும் ஒரு பெண் பரையர் இனத்தைச் சேர்ந்தவள் வெட்டப்பட்டு கிடந்தாள், பரசுராமரோ தாயின் முகத்தை மட்டும் கவனித்து விட்டு தாயின் முகமும் வெற்றொரு பரைய சமுக பெண்ணின் உடலுடன் தவறாக இணத்து மந்திரம் கூறி உயிர் பெற செய்து விட்டார், பின் இருவரும் ஆஜிரமம் வந்தனர், முனிவர் ரேணுகாதேவியின் உடல் வேறாக இருப்பது கண்டு அதிர்ச்சியுற்று மைந்தனிடம் விளக்கினார், இந்நிலையில் செய்வதறியாதிருக்க, ரேணுகாதேவி உயிர்ப்பித்தது உயிர்ப்பித்தததுதான், இனி இப்பூ உலகில் முத்தாலம்மனாக ஒரு நாள் மட்டும் தோன்றி இருந்து மக்களுக்கு அருள் ஆசி வழங்குவாயாக என கூறி முனிவரும் பரசுராமரும் மறைந்தனர்,
அவ்வாறு வந்த சக்தி அம்மன் தான் இந்த முத்தாலம்மன், இச்சகதியின் உடல் பரையர் சமுகத்தாவராலும் முகம் அந்தணர் சமுகத்தாராலும் இருப்பதாகக் கொள்ளப்படுகிறது. எனவேதான், ஒரு நாள் தொடங்கி மறுநாள் இரவு ஆரம்பம் ஆகும் முன்னே அம்மன் கரைக்கப்பட வே்ண்டும். அவ்வாறு அம்மன் உடல் கரைக்கப்படும் போது, முகம் அந்தணர் வசம் ( பிராமணர்) சமுகத்தாரிடம் ஒப்படை்க்கப்படும. உடல் பரையர் சமுதாயத்தாரிடம் ஒப்படைத்து கரைக்கப்படும், அந்தணர் சார்பாக கோவில் பூசாரிகள் முகத்தை பெற்றுக் கொள்வர், இதனால் தான் முத்தாலம்மன் திருவிழா மேற்கண்ட இரு சமுதாயத்தாரும் முக்கிய பங்கு வைப்பர், மற்றவர்கள், பொங்கல் திருவிழாவிற்கு தன்தன் சமுதாய தொழில் அடி்பபடையில் பங்கு பெறுவர். முத்தாலம்மன் திருவிழா நடைபெறும் ஊர்களில் எல்லாம் இவ்வாறுதான் நடை பெறுகிறது. என்பது யாரும் அறிந்த உண்மை.

இதனால்தான் நம் ஊரிலும் இப்பொங்கல் எல்லா சமூகமும் சேர்ந்து நடத்தப்படும் சமத்துவ  சமுதாய ஊர் பொங்கலாகும். வத்திராயிருப்பிலும் இதனையே சமத்துவ சமுதாய பொங்கல்என்றே கொண்டாடுகின்றனர்.

இந்த பொங்கல் நன்னாளில் இந்த பொங்கல் பற்றி கருத்துரை வழங்க ச்நதர்ப்பம் எனக்கு கிடைத்தது. இது செவி வழி செய்திதான், இதற்கென யாதொரு சரித்திர ஆதாரம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இதுபற்றி அவரரவர்கள் மூதாதையர்கள் கூறக் கேட்டு வந்த செய்திதான். இதில் ஏதேனும் மாற்றம் இருப்பின் திருத்திக் கொள்ளு்ங்கள்,
நன்றி
தொகுத்தவர், வை..பூமாலை,சுந்தரபாண்டியம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக